கடாபியின் உடல் புதைக்கப்பட்டது

லிபியாவின் முன்னாள் அரசத் தலைவர் கர்ணல் கடாபியின் உடல் பாலைவனத்தில் ஒரு ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டுவிட்டது. செவ்வாய்க்கிழமை காலை உடல் புதைக்கப்பட்டதாக லிபியாவின் இடைக்கால நிர்வாக மன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கர்ணல் கடாபியின் மகனான முடாசிம்மின் உடலும், கடாபியின் உடல் அருகே புதைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது கடாபியின் சில…

துருக்கியில் நிலநடுக்கம்; 1,000 பேர் பலி

துருக்கியின் தென்கிழக்கு மாகாணம் ஒன்றில் நேற்று நிகழ்ந்த 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வான் இலி மாகாணத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில்…

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக வெற்றி

தமிழ் நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் அனைத்திந்திய அதிமுக எதிர்பார்த்தபடியே வெற்றிபெற்றுள்ளது. இறுதிமுடிவுகள் சில இடங்களிலேயே அறிவிக்கப்பட்டிருந்தாலுங்கூட மாநிலம் தழுவிய அளவில் பெரும்பான்மையான பகுதிகளில் தனித்தே போட்டியிட்ட அதிமுக முன்னிலையில் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. பத்து மாநகராட்சிகளும் நிச்சயம் அதிமுக வசமாகும் என உறுதியாகத் தெரிகிறது. மொத்தமுள்ள…

30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது கிரீஸ்

கிரீஸ் நாடாளுமன்றத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கான இரு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதுமான 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று துவங்கியது. விமானம் முதல் சாதாரண வாகனங்கள் வரையிலான அனைத்துப் போக்குவரத்துகளும் அரசு அலுவலகம் முதல் கடைத் தெரு வரையிலான அனைத்து…

சீனாவின் முடிவால் இந்தியா அதிர்ச்சி!

ஐ.நா பாதுகாப்புசபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்‌கையுடன் இருந்த நேரத்தில் சீனா ‌திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட…

5 ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய வீரர் விடுதலை

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாலத்தீன ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் படை சார்ஜன்ட் கிலாத் ஷாலிட், சிறைக்கைதிகள் பரிமாற்றம் ஒன்றில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதலை, காசா நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருடன் இஸ்ரேல் ஏற்படுத்திக்கொண்ட சிறைக்கைதிகள் பரிவர்த்தனை உடன்பாடு ஒன்றை அடுத்து வருகிறது. இந்த உடன்பாட்டினை…

லிபியாவுக்கு ஹிலாரி கிளின்டன் திடீர் பயணம்

லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த பானி வாலித் நகரின் பெரும்பகுதி, கடாபி எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், நேற்று முன்னறிவிப்பு எதுவுமின்றி, லிபியத் தலைநகர் டிரிபோலிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம், பானி வாலித், சிர்ட்,…

இஸ்ரேல்- பாலஸ்தீனத்துக்கிடையே கைதிகள் பரிமாற்றம்

2006-ம் ஆண்டு பாலஸ்தீன ஆயுததாரிகளால் காஸா பகுதியில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய சிப்பாய் கிலாத் ஷலித்தின் விடுதலைக்கு பிரதிபலனாக சுமார் 500 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகளின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது…

லிபியா கிளர்ச்சிப்படையின் மனித உரிமை மீறல்கள்

லிபியாவில் மேற்குலகின் ஆதரவுடன் கடாஃபியை ஒழித்துக்கட்டி அரசமைக்கும் முயற்சியில் இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்டிருக்கின்ற கிளர்ச்சிப் படைகளின் இடைக்கால நிர்வாகத்தினர் ஏதேச்சாதிகார கைதுகளையும் கைதிகள் மீதான துன்புறுத்தல்களையும் நிறுத்த வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. அண்மைய மாதங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதைகளுக்கு…

எகிப்து வன்செயல்களில் 24 பேர் பலி

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஞாயிறன்று ஏற்பட்ட வன்முறை மிக்க கலவரங்களில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் இருப்பது தொடர்பில் அந்நாட்டின் அமைச்சரவை அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர்கள், வன்முறை தொடர்பில் உண்மையைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.…

ஆப்கானுடன் இந்தியா பாதுகாப்பு உடன்படிக்கை

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கான் குடியரசுத் தலைவர் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இந்தியா ஆப்கானிஸ்தானிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குரிய முக்கிய…

லிபியாவில் எதிர்ப்பாளர்கள் தாக்குதல் தீவிரம்

லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் உள்ள சிர்ட் நகரின் மீது, கடாபி எதிர்ப்பாளர்கள் நேற்று கடும் தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், தென் பகுதி நகரான சபாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று வெளியேற்றப்பட்டனர். லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம், பானி வாலித், சிர்ட், சபா மற்றும் ஜுப்ரா ஆகிய…

‘கொழுப்புக்கு வரி’- டென்மார்க்கில் புதிய சட்டம்

உலகிலேயே முதல் முறையாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளுக்கான வரியை டென்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தெந்த உணவுப் பொருட்களில் உடல் நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதோ, அப்படியான பொருட்களின் மீது கூடுதல் வரியை டென்கார்க் அறிவித்துள்ளது. ‘சாச்சுரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப்படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக…

நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்; 700 பேர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரில், 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்க அரசியலில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும், அமெரிக்க சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு…

சவுதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி

சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில், கார் (மகிழூந்து) ஓட்டியதற்காக முதன் முறையாக ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில் பெண்கள்…

இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க கோரிக்கை

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை உரிமக் கட்டணங்களை முன்னாள் இந்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் தற்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரமும் இணைந்து முடிவெடுத்ததாகவும் அதுதொடர்பாக அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி…

நோபல் பரிசு வென்ற வங்காரி மத்தாய் மரணம்

சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வங்காரி மத்தாய் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 71. கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார். சூழல் மற்றும் மனித…

நேபாள விமான விபத்தில் 19 பேர் பலி; 8 பேர்…

நேபாளத்தில் நடந்துள்ள  விமான விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 8 பேர் திருச்சியை சேர்ந்த தமிழர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்களை திருச்சி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இமய மலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வட்டமடித்து காண்பித்துவிட்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டு திரும்பிக்கொண்டிருந்த…

முகத்திரை அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு பிரான்ஸில் அபராதம்

பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான்…

கடாபி ஆதரவாளர்கள் கடும் தாக்குதல்; எதிர்ப்பாளர்கள் பின்னடைவு

லிபியாவின் இரு நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருவதால் கடாபி எதிர்ப்பாளர்களின் தாக்குதல் பின்னடைந்துள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவை உருவாக்குவதில் லிபியாவின் இடைக்கால அரசு முனைந்துள்ளது. லிபியாவின் பானி வாலித் மற்றும் சிர்ட் நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நகரங்களை கைப்பற்ற கடாபி எதிர்ப்பாளர்கள் பேச்சுவார்த்தை…