பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம்
புதுடெல்லி, நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது? இந்த கேள்விக்கு கல்வி, சுகாதாரம், வறுமை, பாலியல் வன்செயலுக்கு எதிரான பாதுகாப்பு ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் ‘பிளான் இந்தியா’ தொண்டு அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, முடிவுகளை அறிவித்துள்ளது. அதை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்…
பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. ஸ்தம்பித்தது…
சென்னை: சென்னையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டியும் விளாசித் தள்ளியதால் தலைநகரம் ஸ்தம்பித்துப் போனது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது.…
உத்தர பிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்ததில் பலி எண்ணிக்கை…
ரேபரேலி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட அதில், மொத்தம் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட்…
நவீன கால உடல் சிக்கல்களையும் தீர்க்கும் போகரின் பஞ்சாமிர்தம், இதை…
சென்னை: இன்றைய உடல் சிக்கல்களையும் தீர்க்க வல்ல போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தம், இதனை வெறும் பூஜைப் பொருளாகப் பார்ப்பது முறையா? வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவு முறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு,…
மர்மமாக வெட்டப்படும் காஷ்மீர் பெண்களின் தலைமுடி
அடையாளம் தெரியாத ஒரு நபரின் நிழலைப் பார்த்தபோது 35 வயதாகும் தஸ்லிமா ரஃப், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டின் மேல் தளத்தில் இருந்தார். தான் எதிர்வினையாற்றும் முன்பே தாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். தஸ்லிமா உதவிக்காக கூக்குரல் எழுப்ப முயன்றபோது அந்த…
61வது ஆண்டில் தமிழகம்!
சென்னை : தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 61வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து போன மாநிலங்கள் இதைக் கொண்டாடி வருகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு…
அமெரிக்க ஆயுதங்களை வைத்து எங்களை கட்டுப்படுத்த முடியாது: இந்தியாவுக்கு சீனா…
அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் அதிநவீன ஆயுதங்களை வைத்து எங்களை இந்தியா கட்டுப்படுத்த முடியாது என இந்தியாவை சீனா மறைமுகமாக எச்சரித்துள்ளது. வாஷிங்டன்: தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி…
தூய்மை இந்தியா திட்டத்திற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ‘ரோபோ’
750 சதுர அடி பரப்பளவை 15 நிமிடங்களுக்கும் மேல் சுத்தம் செய்த 45 ரோபோக்களை உருவாக்கி ’ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ சென்னை ஐஐடி மாணவர்கள்இடம் பிடித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை ஐஐடியின் ’செண்டர் ஃபார் இன்னோவேஷனை’ சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய 45 ரோபோக்கள் இந்த சாதனையை…
நெடுவாசல், கதிராமங்கலத்தைத் தொடர்ந்து நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி – பொதுமக்கள் கடும்…
நன்னிலம்: எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளுக்கான பணியை மேற்கொண்டதை எதிர்த்து நன்னிலம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை முன்னெடுத்து…
சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை, ரெயில்கள்…
சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாலையும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை மற்றும் சாலையில் தண்ணீர் காரணமாக…
ஜெ.வின் மரணம் ; 15 பேருக்கு நோட்டீஸ்; ஆட்டத்தை ஆரம்பித்த…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள முன்னாள் நீதிபதி ஆறுமுகம், இதுகுறித்து 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, ஓய்வு…
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பேரழிவு; மக்களின் உணர்வை பிரதமர்…
புதுடெல்லி, கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் வைத்திருந்த மேற்படி நோட்டுகள் வங்கிகள் மூலம் பெறப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டுகளை எண்ணும் பணிகளை ரிசர்வ்…
இந்தியா முதலில் இந்துக்களுக்கான நாடுதான்: சிவசேனா சர்ச்சை கருத்து
மும்பை, இந்தியா முதலில் இந்துக்களுக்கான நாடுதான் எனவும், மற்றவர்கள் எல்லாம் பிறகுதான் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. மேலும், மத்தியில் இந்துத்துவாவுக்கு ஆதரவான அரசாங்கம் இருக்கின்ற நிலையிலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை, கார் வாப்சி (தாய்மதம் திரும்புதல்) ஆகிய பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படமால் உள்ளது என்று…
திருநெல்வேலி கந்துவட்டி தற்கொலைகள்: புதைந்து கிடக்கும் உண்மைகளும், பின்னணியும்
திருநெல்வேலியில் கந்துவட்டி பிரச்சனைக்கு இளம் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கந்துவட்டி பிரச்சனை மீதான கவனத்தை திருப்பியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட உதவி எண்…
காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி கேட்பதா? ப.சி.க்கு பிரதமர் மோடி கடும்…
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வலியுறுத்தியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்பது ப. சிதம்பரத்தின் கருத்து. இதற்கு மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி,…
காணாமல் போன 780 மொழிகளை கண்டறிந்த மொழி ஆர்வலர்
இந்திய மொழிகள் பற்றிய தனது தேடலைத் தொடங்கியபோது, இறந்த மற்றும் இருந்துகொண்டிருக்கும் தாய் மொழிகளின் சுடுகாட்டுக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்று நினைத்தார் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான கணேஷ் தேவி. ஆனால், மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு நாட்டின், இரைச்சல் மிகுந்த "மொழிகளின் அடர்ந்த காட்டுக்குள்" அவர் சென்றார்.…
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி ஒதுக்கிய அரசுக்கு…
சென்னை : அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு நிதி அளிக்க முன்வந்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதன்…
வீடில்லாதோர் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை வழங்க மத்திய அரசு…
மும்பை: பிளாட்பாரங்களில் வசிப்போர், குளிர் காலத்தில், இரவு நேரங்களில் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நாடு முழுவதும், 10 லட்சம் பேர், தங்குவதற்கு வீடின்றி, பிளாட்பாரங்களில் வசிப்பதாக, அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதை விட, மூன்று மடங்கு அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசிப்பதாக,…
இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..?
இந்தியா 29 மாநிலங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பொருளாதார நாடாகும். ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு மொழிகள், கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் தட்பவெப்ப நிலைகளைக் கொண்டவை. மேலும், பல மாநிலங்கள் பல்வேறு மூலாதாரங்களிலிருந்து கணிசமான வருவாயை பெறுகின்றன. அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநிலத்தின் கூடுதல் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சார்ந்திருக்கிறது.…
காஷ்மீர் சிரியாவாக மாறாமல் இருக்கவே முன்னுரிமை சிறப்பு அதிகாரி தினேஷ்வர்…
புதுடெல்லி, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிறப்பு அதிகாரியாக புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்து இருக்கிறது. அவருக்கு மத்திய மந்திரிக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அவர் காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். காஷ்மீர் மக்களின், குறிப்பாக…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர்…
கோட்டைப்பட்டினம், கடலில் மீன் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 155 விசைப்படகுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த இன்னாசி(வயது 40), ஜெமினி(48),…
மோடி அலை மங்கிவிட்டது ‘ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன்…
மும்பை, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டது. மத்திய அரசின் ரூபாய்…
தீக்குளித்த இசக்கியை காவல்துறை அதிகாரி மிரட்டும் ஆடியோ வெளியாகியது!
திருநெல்வேலியில் கந்துவட்டி காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் மரணமடைந்த இசக்கிமுத்துவை ஒரு காவல் அதிகாரி மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர் கடந்த 23ம் தேதி காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர். அதன்…























