பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சீனாவின் குடைச்சலை கையாளுவது எப்படி? எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம்
டெல்லி: இந்திய - சீன எல்லையில் நீடிக்கும் பதற்றத்துக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சிக்கிம் மாநில எல்லையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சீன அரசு…
தொட்டுவிடும் தொலைவில் டோக்லா பீடபூமி-எந்த நேரத்திலும் சீனா தாக்கும்- போர்…
காங்டாங்: போர் மேகம் சூழ்ந்திருக்கும் டோக்லா பீடபூமியை தொட்டு விடும் தொலைவில் இருக்கும் சிக்கிம் எல்லை கிராமமான குப்புப் மக்கள் கடந்த ஒரு மாதமாக உச்சகட்ட பீதியில் உறைந்து போயுள்ளனர். இந்தியா, பூடான், சீனா ஆக்கிரமித்துள்ள திபெத் சந்திக்கும் முச்சந்திப்பில் உள்ளது பூடானின் டோக்லா பீடபூமி. சிக்கிம் தலைநகர்…
புதிய பிரபஞ்சத் தொகுப்பைக் கண்டுபிடித்து அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்ட…
சென்னை: பிரபஞ்சத்தின் பெரும் தொகுப்பு (supercluster of galaxies) ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிபடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ளது. சரஸ்வதி எனும் இந்த பெரும் தொகுப்பு, பிரபஞ்சம் தோன்றிய பெரும் வெடிப்புக்கு பின்னர் பத்து பில்லியன் ஆண்டுகளிலேயே தோன்றியுள்ளது. பிக்பேங் எனப்படும் பெரு வெடிப்பு தியேரிக்கு இது வலு…
அன்று பேருந்து நிலையத்தில் உறங்கினார்: இன்று நாட்டின் முதல் திருநங்கை…
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி. இவர் திருநங்கை என்பதால் சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திக் கொண்டார். திருநங்கை என்று தெரிந்தவுடன் பெற்றோரும் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். அதன் பின் கால் செண்டரில் வேலை…
தமிழ் உணர்வின் ஒளிச்சுடர் அணைந்தது!
நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீர சந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த் தேசிய சிந்தனையாளன் தூரிகை நெருப்பு…
ஜாதி ஒழிப்பு பற்றி சபாஷ்நாயுடு கமல் பேசலாமா?
சென்னை: நாட்டில் ஜாதி ஒழியவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கும் நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்பட பெயர் 'சபாஷ் நாயுடு'. முரண்களின் மொத்த உதாரணமாக இருந்த அவரது நேற்றைய 'பிக்பாஸ்' பேட்டியின் ஒரு பானை சோற்று, ஒரு சோறு பதம்தான் இந்த தகவல். 'சேரி பிஹேவியர்' என்று காயத்ரி ரகுராம்…
நாம மட்டும் முழுசா இறங்கினா அவ்ளோதான்.. 5000 கிலோமீட்டர் வரைக்கும்…
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் குடைச்சல் என்றால் சிக்கிம் எல்லையில் சீனா சீண்டிப் பார்க்கிறது. சீனா தம்மை வலிமை மிக்க நாடாக கருதிக் கொண்டு வாலாட்டிப் பார்க்கிறது. 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது சீனா. ஆனால் 1967-ம் ஆண்டு சிக்கிம் எல்லையில் சிக்கி சின்னபின்னமான…
வடகிழக்கு மாநில வெள்ளத்தை கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்கள்… மணிப்பூர் முதல்வர்…
இம்பால்: வெள்ளத்தில் வடகிழக்கு மாநிலங்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன... ஆனால் தேசிய ஊடகங்களோ கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்று மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் சாடியுள்ளார். அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அஸ்ஸாமில் இதுவரை வெள்ளத்துக்கு 40 பேர் பலியாகிவிட்டன. அஸ்ஸாமின் 23 மாவட்டங்களின் 15…
திருச்சி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த தலித் இளைஞர்…
சென்னை: திருச்சி அருகே பொது இடத்தில் கட்டி வைத்து தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எவிடென்ஸ் கதிர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஒரு வருடத்தில் 25 தலித் செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் காவல்நிலைய…
போர் முனைப்பில் சீனா! பலே திட்டத்துடன் தாக்க தயாராகும் இந்தியா
சிக்கிம் எல்லைப் பகுதியில் நெருக்கடி கொடுத்து வரும் சீனாவிற்கு ஒரு போதும் அடிபணியப் போவதில்லை என இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் தமது நிலைகளை வலுப்படுத்தும் வகையில் இந்திய இராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பூட்டான், மற்றும் சீனா…
அச்சுறுத்தும் இலங்கை! சிக்கலில் இருந்து மீட்பாரா மோடி?
தமிழக மீனவர்களுக்கு இதுவரை மறைமுகப் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வந்த இலங்கை அரசு, இனி அதை நேரடியாகச் செய்வதற்காகப் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு கடல் தொழில் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்த சட்ட முன்வடிவு, மிக…
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 91-வது நாளாக 2-வது…
நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் இரண்டாவது கட்டப் போராட்டம் 91வது நாளாக நீடிக்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராம மக்கள் கடந்த ஏப்ரல் 12ம் முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். தினமும் பல்வேறு நூதன போராட்டங்கள்…
யாத்திரை சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்: ஏழுபேரின் உயிரை காவு கொண்ட…
காஷ்மீர் மாநிலம் அமர்நாத்துக்கு புனித யாத்திரை சென்ற பயணிகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழ்பெற்ற பனிலிங்க தரிசன அமர்நாத் யாத்திரை நடைபெறுவது வழக்கம். கடந்த 8ம் திதி முதல் காஷ்மீரில்…
உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை!
இந்திய எல்லையைக் கடந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசித்து மீன்பிடிக்கும் தமிழக மீன்பிடிப் படகுகளுக்கு ரூபா 10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வகையில் இலங்கை அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.…
22 கப்பல்களுடன் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படை கூட்டு பயிற்சி
வங்கக்கடல் அதிரும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான 22 கப்பல்கள் ஈடுபடும் கூட்டு கடற்பயிற்சி இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. சென்னை வங்கக்கடல் அதிரும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான 22 கப்பல்கள் ஈடுபடும் கூட்டு கடற்பயிற்சி இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. சென்னை துறைமுகத்துக்கு நேற்று வருகை…
இலங்கையின் பைத்தியகார சட்டத்தை வாபஸ் பெற கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்!
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ20 கோடி வரை அபராதம் விதிக்கும் இலங்கையின் பைத்தியகார சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமான உரிமை உள்ள பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதிகளில் மீன்பிடித்தால் எல்லை தாண்டியதாக கூறி…
சாலையோர கடைகளில் மளிகை பொருள்கள் வாங்க மக்கள் ஆர்வம்… ஜிஎஸ்டிக்கு…
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் விலை உயர்வை சமாளிக்க தெருக்களில் விற்கப்படும் மளிகை பொருள்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு விதித்திடும் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு சட்டத்தை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியது.…
வாழ்வாதாரத்துக்காக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்களாம்.. சொல்வது தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தமிழக மீனவர்கள் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இலங்கையை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று சென்னையில் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், " தமிழக மீனவர்களை அதிகமாக பாதிக்கும் இலங்கை அரசின் புதிய…
3 தமிழக மீனவர்கள் கைது! பாயுமா புதிய சட்டம்?
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவுப்பகுதி கோவளம் கடற்பகுதியில் 13 கடல் மைல் தொலைவில் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய படகும், அதிலிருந்த மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்,…
பெருமாளே… மனசு வலிக்குது!
பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்வதால் 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சொல்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. பிசினஸ் செய்பவர்கள்தான் நஷ்டம் என்னும் வார்த்தையை உபயோகிப்பார்கள். நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் காணிக்கையாய் வரும் செல்வச் செழிப்பான தெய்வீக திருத்தலம் திருப்பதி. தரிசனக்…
பாலியல் தொழிலாளி மீது காதலில் விழுந்த இளைஞர்
டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நபர் மீது காதல் கொண்டவர் பல எதிர்ப்புகளையும் மீறி அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். GB ரோட்டில் உள்ள பாலியல் தொழில் மையத்தில் நேபாளத்தை சேர்ந்த Shubhi(27) என்பவர் பாலியல் தொழிலாளியாக இருந்துள்ளார். அங்கு வாடிக்கையாளராக வந்த சாகர் என்பவர் சுபியுடன் நெருங்கி…
ஜாரவா பழங்குயினரின் நிர்வாண காட்சிகளை நீக்க யூ டியுப் நிர்வாகத்திடம்…
அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களைக் காட்டும் விடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜாரவா இனத்தவர் மற்றும் பிற பழங்குடியினரின் ஆட்சேபத்துக்குரிய வீடியா படங்கள் விவகாரத்தை தேசிய பழங்குடியினர் ஆணையம் (என்சிஎஸ்டி) தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுள்ளது. உலகில் அழியும்…
கதிராமங்கலம் போர்க்களம் உக்கிரம்… 7-வது நாளாக முழு அடைப்பு- வீதிகள்…
கும்பகோணம்: கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தியவர்களை விடுதலை செய்யக் கோரியும் 7-வது நாளாக இன்றும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி அமைத்த குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனால் கச்சா எண்ணெய்…
