83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் பணிகள் தொடங்கியது

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இன்று தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது.…

மாட்டிறைச்சிக்கு தடை: கேரளா, கர்நாடகாவில் எதிர்ப்பு

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள், காளைகள், எருதுகள் மற்றும் ஒட்டகங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, நேற்று மட்டும் 210 இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.…

காந்தி மரணத்தில் சந்தேகம்: நாலாவது குண்டு எப்படி வந்தது?

இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி மரணத்தில் உள்ள சதியின் பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பங்கஜ் பத்னிஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காந்தியின்…

உ.பி: கலவரம் பாதித்த நகருக்கு தடையை மீறி சென்றார் ராகுல்…

உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் தடையை மீறி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூர் நகரில் சுமார் 40 நாட்களுக்கு முன்பு தலித் இன மக்கள் அம்பேத்கார் பிறந்த…

அடுக்கடுக்கான புகாருக்கு ஆளாகும் ஈஷாவுடன் கை கோர்க்கும் தமிழக அரசு..…

கோவை: ஈஷா யோகா மையத்துடன் இணைந்து சிறுவாணி அணையை தூர்வார முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளதற்கு மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் மீது நில மோசடி, பெண்களை மூளைச் சலவை செய்து மடத்திலேயே வைத்துக்…

முக்கிய நகரங்களில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் ஊடுருவல்: இந்திய அரசு…

ந்தியாவில் தாக்குதல் நிகழ்த்தும் நோக்குடன் 20 லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள், நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடவுள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை விடுத்துள்ள…

இந்தியாவிற்கான வளர்ச்சி நிதியை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை

இந்தியாவிற்கான வளர்ச்சி உதவியை கணிசமாகக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. வாஷிங்டன் கடந்த 2016 ஆம் ஆண்டில் 85 மில்லியன் டாலர்களாக இருந்த உதவி 2018 ஆம் ஆண்டிற்கு 33.3 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமான நிதியுதவி யு எஸ் எய்ட் எனும் திட்டத்தின் கீழ் செயல்படும்…

வேறு பெண்ணை மணந்ததால் ஆத்திரம்.. ஆசிட் வீசிய காதலி.. பரிதாபமாக…

விஜயவாடா: தன்னை காதலித்து ஏமாற்றியதால் காதலன் மீது முன்னாள் காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணிகண்ட்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது இலியாஸ். 24 வயதான இவர்…

ஒரே போன் காலில் மாறிய வாழ்க்கை: ஆசிட் வீச்சு தாக்குதல்…

ஆசிட் வீச்சு தாக்குதலில் முகம் முழுவதும் வெந்து போன இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (26), கடந்த 2012ல் லலிதாவின் உறவுகார இளைஞர்கள் சிலர் குடும்ப பகை காரணமாக அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர்.…

இந்தியை படிக்கச் சொல்லுங்க.. ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது.. மத்திய அரசு

டெல்லி: இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்தது முதல் இந்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் தேசிய…

வாங்க.. நடிங்க.. சம்பாதிங்க.. போங்க.. அவ்வளவுதான்.. நாட்டை ஆளும் உரிமை…

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ராஜீவ் கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி தமது 66 வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், சந்திரசாமியிடம் விசாரிக்க பரிந்துரைத்து…

`பலி’ ஆடுகளாக தவிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள்; `லஞ்சம் கொடுத்தால் நகரும்…

ஆராய்ச்சி என்றாலே சிக்கல்களும் சோதனைகளும் சேர்ந்தே இருக்கும். அந்த ஆராய்ச்சியை ஆரம்பித்து முடிப்பதற்குள் ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனுபவிக்கும் துயரம், பல நேரங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எல்லை மீறிய நிலையில் இருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பி.எச்டி என்ற ஆராய்ச்சிப்…

சீனா எல்லையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகாய் போர் விமானம்…

சீனா எல்லையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகாய் போர் விமானம் மாயமானது. கவுகாத்தி, அசாம் மாநிலம் திஸ்பூரில் இருந்து வழக்கமான பயிற்சி  பணிக்காக புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது என விமானப்படை தகவல்கள் தெரிவித்து உள்ளன. 2 விமானிகளுடன் திஸ்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் 60 கிலோ மீட்டர்…

நடிகர் ரஜினியின் கொடும்பாவி எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் கைது

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ரசிகர்களை சந்திக்கும் நிகழச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் தயாராக இருங்கள் என தனது அரசயில் பிரவேசம் குறித்து சூசகமாகப்…

காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் உள்துறை மந்திரி ராஜ்நாத்…

காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உறுதிபட கூறினார். காங்டாக், காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் வன்முறை சம்பவங்களில்…

மோடி அரசின் 3 வருட ஆட்சி கோடிகள் அள்ளிய கார்ப்ரேட்…

மோடி அரசின் 3 வருட ஆட்சி இந்தியாவின் பங்கு சந்தையின் மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது அதிலும் டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழுமங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளன. நிதி மற்றும் தொழிற்சாலைகள் நிறுவனங்களான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எல்அண்ட்டி,…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை- போலீஸ் கெடுபிடியால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்…

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அதை தடுக்க சென்னை மெரீனா கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம்…

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. சிவகாசியில் தீக்குளித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியராஜ் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊருக்குள் வரும் மதுக்கடைகளை சூறையாடும் மக்கள்…

விமர்சனம் செய்யும் தமிழர்களை கீழ்த்தரமானவர்கள் என்றால் எப்படி ரஜினி சார்?

சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை திட்டி எழுதுவதை பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் பேசியுள்ளார். அவர் கூறுவதை பார்த்தால் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்கள் கீழ்த்தரமானவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில…

கறுப்புச் சட்டை போட்டா ரஜினி திராவிடரா.. சாமி கேள்வி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்துப் பேசி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை 5 நாட்களாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லவில்லை…

சென்னையில் ரூ.500, ரூ.2000 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட 2…

சென்னை: சிட்லப்பாக்கம் பகுதியில் புதிய ரூ.500, ரூ.2000 கள்ள நோட்டுகள் வைத்திருந்த இளைஞர்கள் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிட்லப்பாக்கம் போலீசார் தெரிவிக்கையில், " பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் புதன் கிழமை இரவு சந்தேகப்படும் நிலையில் இரண்டு இளைஞர்கள் நின்று இருந்தனர். அவர்களைப்…

மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

குல்பூஷண் சிங் ஜாதவ் கொலை வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்த குற்றத்திற்காக கடந்தாண்டு மார்ச் மாதம்…