பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சீனாவின் இராணுவத்தளத்துக்கு இலங்கையில் இடமில்லை
இலங்கையின் இராணுவ மையங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அறிவித்துள்ளது. சீனாவில் இன்று இடம்பெற்ற இலங்கையின் சுதந்திரதின நிகழ்வின்போது இலங்கையின் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு முதலீடு செய்ய வரும் சீனர்களிடம் சீன இராணுவத்துக்கு வசதிகள் செய்துக்கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார். இந்து…
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? கதறியழும் தாய்மார்கள்
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 6 மாத குழந்தைகள் உட்பட சிறுபிள்ளைகள் எங்கே என கேட்டு கதறியழுத தாயார் மயக்கமடைந்து விழுந்த சம்பவத்தினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் கறுப்புப்பட்டி போராட்டம் நடைபெற்றது. யாழ்.பழைய பூங்காவின் முன்பாக…
சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவிக்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு…
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்குமாறு கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட போதிலும், கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தேசிய…
என்னை அடித்து விரட்டினாலும் நான் கூறுவது உண்மை உண்மையே
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் "நாம் அனைவரும் இலங்கையர்" என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக்…
பேச்சுவார்த்தைக்காக இந்தியா செல்கிறது வடக்கு மீனவர் குழு
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்ததை இம்மாதம் இடம்பெறவுள்ளது. இதற்காக வடக்கு மீனவர் குழுவொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி…
அவுஸ்திரேலியாவில் தேசிய மொழியாக தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..!
அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், செல்வம் அடைக்கலநாதன் அந்நாட்டு பிரதமருக்கும், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்கிறார் சந்திரிகா
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ‘நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடு. இப்போது அவசியமாகத் தேவைப்படுவது…
வாள்வெட்டுக் கும்பலினால் வடக்கில் உருவாகும் பீதி!
நாட்டில் மூன்று தசாப்த காலம் நிலவி வந்த பயங்கரவாத சூழல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இற்றைக்கு 07 வருடங்கள் கடந்து விட்டன. அதன் பயனாக பயங்கரவாத நிலைமை நிலவிய போது, காணப்பட்ட அச்சம், பீதி 2009ம் ஆண்டு மே மாதத்தின் பிற்பகுதி முதல் நாட்டில் எங்குமே இல்லை. இன்று…
தாயகம் திரும்பிய முன்னாள் போராளி ஒருவர் அதிரடியாக கைது..!
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரான இவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்த…
உலகக் கிண்ணப்போட்டியில் கலக்கும் கிளிநொச்சி பாடசாலை மாணவிகள்!
பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண றோல் போல் விளையாட்டில் இலங்கை தேசிய அணியும் விளையாடவுள்ளது. இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் , சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே உலகக் கிண்ண போட்டியில்…
கொலைக்களமாக மாறும் யாழ்ப்பாணம்! மீட்டெடுக்க பிரபாகரன் வருவாரா..?
யாழில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு சம்பவம் அச்சத்தின் உச்ச வெளிப்பாடு என்றுதான் கூற வேண்டும். யாழ் மக்களை பதற வைத்த ஓர் சம்பவமாக இது காணப்பட்டுள்ளது. நேற்று இரவு 07.30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற மர்மக் கும்பலொன்று வர்த்தக நிலையத்திலிருந்த இளைஞர்கள் இருவரை வாள்களால் சரமாரியாக வெட்டியதுடன், கடைக்குப் பெற்றோல் குண்டு…
சுமந்திரன் கொலை முயற்சிக்கான காரணம் வெளியானது..! வடக்கு முதல்வருக்கும் எச்சரிக்கை
சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகரம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து…
வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்கள் மீள்குடியமர்வுக்கு பல மில்லியன்!
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்காக உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணிக்கு மீள் குடியேற்ற அமைச்சு 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. வீட்டுத் திட்டம், வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு மீள்குடியேற்றச் செயலணிக்குத் தனியான திட்ட அலுவலகமும் உருவாக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றச் செயலணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. மீள்குடியேற்ற…
முல்லைத்தீவில் உணவுக்காக காத்திருக்கும் சிறுவர்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல சிறுவர்கள் பசித்த வயிற்றுடன் தினமும் உறக்க நிலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே உணவை உண்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 2016ஆம் ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டு ஆரம்பப் பகுதியிலும் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாகவே பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.…
புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக…
இலங்கை, இந்திய அரசாங்கங்கள் மீண்டும் கூட்டு நடவடிக்கையில் இறங்கியிருப்பதனை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. 2009ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், புலிகளை இலங்கையில் இருந்து தாம் முற்றாக அழித்துவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.…
வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுக்குரியவராக செயற்படுகின்றாரா?
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தொடர்பிலும், மீள்குடியேறவுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்பிலும், மீள்குடியேறியுள் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பிலும் முதலமைச்சர் கூறிய தகவல்கள் என்ன அடிப்படையில் கூறப்பட்டது..? என வடமாகாண சபையின் 83 ஆம் அமர்வில் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பப்படவுள்ளது. வடமாகாண சபையின் 83 ஆம்…
யுத்தத்திற்கு பின்னர் தமிழரின் கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை
போருக்கு பின்னர் தமிழரின் கலை, கலாச்சாரம் மழுங்கடிக்கப்படுள்ளது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பருத்தித்துறை கலாச்சார மத்திய நிலைய திறப்பு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் கலை கலாச்சாரம்…
வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தமது நடவடிக்கைகளை வடக்கில் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகள் என்ற கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு…
மெரினாவாக காத்திருந்த வவுனியா…! எஞ்சியது என்ன..?
உலகில் ஏற்பட்டுள்ள பலமாற்றங்களுக்கு புரட்சிகளே காரணமாக அமைந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் தமிழகத்தில் வெடித்த எழுச்சி பேரணி ஒரு பாரிய வெற்றியை பெற்று தந்திருந்தது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த எழுச்சி போராட்டத்தின் தீவிரம் இறுதியில் வெற்றி எனும் கனியை…
பிரதமரின் உரை தமிழர்களின் மனதில் நீங்காத வடு: சார்ள்ஸ் நிர்மலநாதன்
பிரதமர் அண்மையில் காணாமல்போனவர் தொடர்பில் தெரிவித்த கருத்து தமிழர்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு 30…
இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைத்த அதிகாரிகளை நீக்கிய ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் நான்கு பிரதான அதிகாரிகளை புதிய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை படையினருக்கு எதிராக போர் குற்றம் சுமத்தி ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் யோசனை முன்வைத்தவர்கள் என சிங்கள வார பத்திரிகை கூறியுள்ளது. புதிய ராஜாங்க செயலாளராக…
பிரபாகரனையும் இணைத்து கொண்டு கூட்டாட்சி ஏற்படுத்துமாறு உத்தரவிட்ட அமெரிக்கா!
வடக்கு, கிழக்கையும் பிரபாகரனையும் இணைத்துக்கொண்டு கூட்டாட்சி ஒன்றை அமைக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்று அமெரிக்கா உத்தரவிட்டது. அந்த உத்தரவை உதாசீனம் செய்துவிட்டே மஹிந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார் என்றும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார். அவர் தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வது…
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும்..! வடக்கு முதல்வர்…
புலம் பெயர் தமிழர்கள் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் நிலையம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே…
