ஐ.நா.தீர்மானம் அரசுக்கு சொந்தமானது, அமுல்படுத்தியே தீரவேண்டும்! ஆணையாளரிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்து

ஐ.நா.தீர்மானம் அரசுக்கு சொந்தமானது. அது வெளித்தரப்பினரால் கொண்டுவரப்பட்டதொன்றல்ல. அத்தீர்மானத்தில் ஒன்றை அமுல்படுத்த முடியும். பிறிதொன்றை அமுல்படுத்த முடியாதென பிரித்து அரசாங்கம் செயற்பட முடியாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ…

யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடன் விசாரணை தேவை!- சரத் பொன்சேகா…

எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நேற்றைய தினம் பதவியேற்ற சரத் பொன்சேகா பாராளுமன்ற…

நிலைமாறு கால நீதி வேண்டாம். பரிகார நீதியே வேண்டும்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹீசேன், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் (FSHKFDR - North East) பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல்…

ஆதங்கங்களுக்கு இன்று பதிலளிப்பேன்!- ஐ.நா. ஆணையர் ஹுசைன்

உங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் மிக முக்கியமான விடயங்களுக்கு என்னிடம் விடைகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் செவ்வாய்க்கிழமை உங்களின் ஆதங்கங்களுக்கு பதிலளிப்பேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார். கண்டி…

உண்மைகளை வெளிப்படுத்தாவிடின் அடுத்தகட்ட நகர்வுகள் கடினமானதாக அமையும்!- அரசாங்கம்

இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சர்வதேசத்தை இணைத்துக் கொண்டு இலங்கையின் சிக்கல்களை மாற்றியமைப்பதே சாதகமான வகையில் அமையும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே…

சொல்லளவிலின்றி செயலில் இந்தியா காண்பிக்க வேண்டும்!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமத்துவமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கும், தீர்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது உறுதி வழங்கியுள்ளார். இலங்கைக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இந்திய வெளியுறவு…

அலட்சியத்துக்கு உரியதல்ல ஐ.நாவின் தீர்மானம்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது தென்னிலங்கை அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக அலட்சியப் போக்கையே வெளிக்காட்டி வருகின்றன. போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கமானது…

இறந்த மாயமான பலர் ரகசிய முகாம்களில்!

இலங்கையில் போருக்கு பிந்தைய காலகட்டம் குறித்தும் அதன் உண்மை நிலை குறுத்தும் வரும் கிழமைகளில் அல்லது மாதங்களில் பொதுமக்களிடையே அதிக சர்ச்சைகள் நடக்க வாய்ப்பு உள்ளது. வெளியாகவிருக்கும் அறிக்கைகள் மற்றும் தகவல்களால் உணர்வுகள் கிளர்ந்தெழலாம் இலங்கை முழுவதுமாக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் துயரத்தில் விழலாம். கடந்த முப்பது ஆண்டுகளாக…

அப்பழுக்கில்லா உன்னதம் மிக்க தலைவனை உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும்…

2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டபோது ================================================== அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என்…

விக்னேஸ்வரனைச் சந்திக்காமலேயே திரும்பிய சுஷ்மா..! எப்படித் தீரும் தமிழர் பிரச்சினை?

இலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரைத் தவிர மற்றவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் சுஷ்மா. இது எந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு உதவி புரியும் என்று தெரியவில்லை.…

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்!

இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் சற்று முன் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். https://youtu.be/m6S-c266104?list=PLXDiYKtPlR7P2AaV8jydV0rAwEj4kap4A முதலமைச்சர் அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கு வருகை தந்த  ஆணையாளருடன்…

ஆழ ஊடுருவும் அணியின் மறைக்கப்படும் இரகசியங்கள்!

இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதியிடம்…

தமிழில் தேசியகீதம்! சிங்கள கல்விமான்கள், புத்திஜீவிகள் வரவேற்பு

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர். காலத்துக்குத் தேவையான விடயமொன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைப்பதை உண்மையான பௌத்தர் எவரும் எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தொடர்பில்…

மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ.நா ஆணையர் இன்று வருகை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இவரின் வருகை இலங்கையில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில்…

ஐ.நா. ஆணையாளர் அல்–ஹுசைனின் விஜயம் குறித்து அரசாங்கம் கருத்து!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் வடக்கு விஜயத்தின் போது தற்போதைய நல்லாட்சியின் உண்மை நிலைமைகளை அவரால் உணர முடியும் என நம்புகின்றோம். , கடந்த கால ஆட்சியாளர்கள் மறைத்த பல யதார்த்த பூர்வமான விடயங்களை அவரால் உணரமுடியும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித…

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் ஹுசைன் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு…

தமிழில் தேசியகீதம் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல – இரா.சம்பந்த

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர…

தமிழில் தேசிய கீதம் நல்லிணக்கத்திற்கான மற்றுமொரு படி!- ஆங்கில ஊடகம்

இலங்கையின் உள்நாட்டு போருக்கு பின்னர், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு படியாக உத்தியோகபூர்வமற்ற முறையில் தடை செய்யப்பட்டிருந்த இலங்கை தேசிய கீதத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. சிங்கள…

நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ் மக்களுக்கு சுதந்திர தினம்…

அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் சுதந்திர தினம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சிவஞானம்…

மைத்திரியின் செயற்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்! பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கத்துக்காக இந்தியா தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியா இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்றும் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளார்.…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய சுதந்திர தினத்திலாவது தீர்மானம் எடுங்கள்!

அனைத்து சிறைச்சாலைகளிலும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான தீர்மானமொன்றை சுதந்திர தினத்திலாவது எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அனுப்பி வைத்துள்ள…

ஜெனீவா யோசனைக்கும் ஹூசைனின் விஜயத்துக்கும் தொடர்பு இல்லை! அரசாங்கம் மறுப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட  யோசனைகளுக்கும் ஐ.நா ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனின் வருகைக்கும் எந்தவித தொடர்புகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை த ஹிந்து செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. செய்ட் அல் ஹூசைன் எதிர்வரும் 6 ஆம் திகதி…

நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர்: காணாமல் போனோர்களின் உறவினர்கள்

மட்டக்களப்பில் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தன்று காணாமல் போனோர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு  மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகில் நடாத்தப்படவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர். "நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ…