மகிந்தரின் புத்திர சோகம்- நின்று கொல்லு(ள்ளு)ம்!

இந்த மனிதப் பிறவியில் சோகமில்லாதவன் மனிதாக வாழமுடியாது. சோகங்களும், அதன் பிரதிபலிப்புக்களும் வாழ்க்கையில் கண்டிப்பாக இருந்தே தீரும். இதனை இதிகாச புராணங்களில் இருந்து கற்றுவந்திருக்கின்றோம். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வந்த சோகமும் அப்படிப்பட்டது தான். இலங்கையின் நிரந்தர மன்னனாக தன்னை நினைத்து வந்தவருக்கு கடந்த ஆண்டு…

மனித உரிமைப் பிரச்சினைகள் மீளவும் ஏற்படாது!– ரணில்

மனித உரிமைப் பிரச்சினைகள் மீளவும் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஆசிய பிராந்திய வலய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்த மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது…

தமிழரின் வலி மகிந்தவிற்கு புரிகிறதா இன்று? ஆதங்கப்படும் முன்னாள் போராளி!

தமிழர்களுக்கு தீராத வலிகளைக் கொடுத்து வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தனது மகனை சிறை வைத்ததை எண்ணி கண் கலங்கினார். இது சாதாரண தந்தையின் நிலை. இப்படிப்பட்ட பல தந்தையர்கள் தாய்மாரின் வலிகளை கடந்த சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினால் உணர்ந்திருக்க முடியும் என கூறும் ஆதங்க…

பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது! அரசாங்கமே முடிவெடுக்கும்! என்கிறார்…

உள்ளக விசாரணைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும். அதனை பான் கீ மூன் தீர்மானிக்க முடியாது. இணைந்த எதிர்க்கட்சியல்ல எவரா லும் அரசாங்கத்தை அசைக்க முடியாது என அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான கபிர் ஹாஷீம் தெரிவித்தார். உள்ளக பொறிமுறை…

யுத்தக்குற்ற விசாரணையில் தடுமாறும் அரசாங்கம்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்குபற்றுதல் இருக்கவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.  ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதி வழங்குவதற்கான பொறிமுறைகளில் சர்வதேச பங்களிப்பில் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது என்பதே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின்…

மலையகத்தில் நடந்து வந்த ஜமீன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி! வடிவேல் சுரேஷ்

மலையகத்தில் நிலவி வந்த ஜமீன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று 7பேர் அரசியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். அக்கரப்பத்தனை பெங்கடன் சின்ன தோட்டத்தில் மலையக வரலாற்றில் முதல்முறையாக ஒரே இடத்தில் 114 வீடுகளை…

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்! கிளிநொச்சியில் புலமையாளர்கள் கலந்துரையாடல்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில்  இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. இலங்கையில் உருவாக்கப்பட இருக்கும் அரசியலமைப்பு தொடர்பாக அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழுவிற்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் சார்பாக கருத்துக்களை முன்வைப்பதற்காக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள புலமையாளர்கள்…

போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்தை நிராகரிக்க முடியாது! விஜித ஹேரத்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் இலங்கை ஏற்றுக் கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை நிராகரிக்க முடியாது என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், இன்றைய சிங்கள வாரப் பத்திரிகையொன்றுக்கு அவர் பேட்டியொன்றை…

அரசை நம்பி சர்வதேசத்தை கைவிட்டால் தமிழருக்குத் தீர்வு கிடையாது!

அரசாங்கத்தை நம்பி சர்வதேசத்தை கை விட்டால், 2016ம் ஆண்டில் அல்ல இந்த யுகத்திலும் தமிழருக்குத் தீர்வு கிடையாது. என்பதே உண்மை. அரசனை நம்பி புருசனைக் கைவிடல் என்றொரு பழமொழி நம் தமிழ்மொழியில் உண்டு. அரசன் என்ற சொற்பதம் திரிபடைந்ததால் ஏற்பட்டதாகும். உண்மையில் அரசனை என்பது அரசை என்பதாக இடம்பெற்றிருக்க…

போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகளின் தகவல்கள் கசிந்தது!

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட நீதிமன்றமொன்றை அரசாங்கம் உருவாக்க முன்னரே போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இருந்து இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்களை யஸ்மின் சூக்கா…

என்றும் எரிந்து போகாத பிரகடனம்….

ஜனவரி29 என்பது வெறும் நாளாக 2009க்கு பிறகு இல்லை.மௌனமாய் ஒரு இனஅழிப்பை பார்த்துக்கொண்டிருந்த அனைவரது மனச்சாட்சியையும் உலுப்பும் ஒரு தினம் அது.குறிப்பாக தமிழர்களை நோக்கி இந்த நாள் ஆயிரம் கேள்விகளை பல்லாயிரம் கணைகளை தொடுக்கிறது. என்ன செய்தீர்கள்... இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்... இனியும் மௌனமாக இருப்பது பெருந்துரோகம்…

கணவனை இழந்ததை விட பல மடங்கு வேதனை தலைவனை இழந்ததே!…

என் இனிய உறவுகளே, என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? மௌனித்து கைகால் கட்டப்பட்டு ஒரு கூண்டுப் பறவையாக இருந்த நான் எனது குரலை ஓங்கி ஒலிப்பதன் மூலமாவது உங்கள் உள்ளங்கள் தட்டி எழுப்பப்படுமா? எமது மக்களிற்காகவும் மண்ணிற்காகவும் போராட புறப்பட்ட தன்மானமுள்ள ஒரு முன்னாள்…

சர்வதேசத்தின் தலையீடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது! அரசாங்கம்

யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவான உள்ளக விசாரணைப் பொறிமுறையையே இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். எனினும் எந்தவகையிலும் சர்வதேசத்தின் தலையீடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை…

“இறுதிப் போரில் 40,000 பேர் உயிரிழப்பு என்பது மாயை”

இலங்கையில் காணாமல் போனவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர், வெளிநாடொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் குறித்து ஆராயும் அரச குழுவின் தலைவர் கூறுகிறார். போருக்கு பிறகு படைகளிடம் சரணடைந்த பலரைக் காணவில்லை எனக் குற்றச்சாட்டுகள் அப்படியானவர்களை, சம்பந்தபட்ட நாட்டுடன் பேசி அவர்களை இலங்கைக்கு கொண்டுவரும்முயற்சிகளை…

மௌனித்துப் போனது ஆயுதப் போராட்டமே..!

தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பிரதான மூன்று கட்சிகளினூடாக போராடியிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ,குறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும், மக்களின் ஆதரவு…

ஈழமக்களைக் கொன்றவர்கள் அமெரிக்கர்கள்! மறைந்ததா வழக்கறிஞரின் கூற்று!

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அதிகளவான போர்க்குற்றங்களை செய்து  ஈழத் தமிழ் மக்களை கொன்றொழித்தவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என அமெரிக்க வழக்கறிஞர் ப்ரூஸ் ஃபெயின்  இந்திய ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த காலகட்டமான 2009ல் இலங்கையில் அதிக மனிதவுரிமை மீறல்கள் இடப்பெற்றன. இது…

இலங்கை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்: மனித…

இறுதி மோதலின் போது இடம்பெற்ற மனி உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் நடைமுறைகளில் சர்வதேச நீதிபதிகளும், வழக்கு தொடுநர்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதை உறுதிசெய்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளையும், தனது கடப்பாட்டையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று சர்வதேச…

இராணுவத்தின் மீதான களங்கத்தைப் போக்க விசாரணைகள் அவசியம்: மைத்திரி

இலங்கை இராணுவத்தின் மீது சர்வதேச ரீதியில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும், களங்கத்தையும் போக்குவதற்காக விசாரணைகள் அவசியமாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோதமான படை என்ற தவறான பெயர் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியில் பாதுகாப்புப் படையினர் மீதான குற்றச்சாட்டை விலக்கி, கௌரவமான படையினர்…

ஒப்பந்தங்கள், வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதே சிங்களத்தின் தேசிய குணங்கள்!

ஒப்பந்தங்களை கிழித்தெறிவதும், உடன்படிக்கைகளை மீறுவதும், வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவதும் சிங்கள அரசுகளின் தேசிய குணங்களாகவே மாறிப்போய்விட்டன என்பதனை நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆகியோரும் நிரூபித்துள்ளனர் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள…

யாழில் வடிவேலு பாணியில் சாராயக் கடையை திறக்க முயன்ற குடிகாரர்கள்…

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வடிவேலு பாணியில் முடியிருந்த சாராயக்கடையைத் திறக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த நேரத்தின் பின்னர் மூடப்பட்ட சாராயக்கடையைத் திறந்து தமக்கு சாராயத்தைத் தந்துவிட்டு மீண்டும் மூடுமாறு சாராயக்கடைக்கு காவலுக்கு நின்றிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கேட்டுள்ளனர் இருவர். அவர் அத்ற்கு மறுக்கவே அவ்விடத்தில் சிறு…

ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய இரா.சம்பந்தன் பிரித்தானியா பயணம்!

ஐக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாட்டில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

சம்பந்தன் சமஷ்டியை வலியுறுத்துவதால் தெற்கில் கவலை

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றுக்கு வலியுறுத்தி வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களை நிர்வகிக்க கொழும்பு அரசாங்கத்துக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன்…

பொறுப்புக்கூறலில் விலகி நிற்க முடியாது! குற்றவாளிகள் என்று சர்வதேசம் முத்திரை…

யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச தரப்பிடம் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பொறுப்புக்கூறலில் பின்னின்றால் சர்வதேசம் எம்மை ஒதுக்கி வைத்துவிடுவதுடன் குற்றவாளிகள் என்ற முத்திரையை பொறித்துவிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, அங்கவீனமான படைவீரர் கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கும் வடக்கு…