பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வாக்குறுதியை மறந்து விட வேண்டாம்!
யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையானது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பாரிய அவதானத்துக்கு உட்பட்டுள்ள விடயமாகியுள்ளது. இலங்கை…
புதிய அரசியலமைப்பு! அரசின் முயற்சி வெற்றியளிக்காது!
புதிய அரசியலமைப்பு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்காது என தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு குறித்த உத்தேச யோசனையை கால தாமதப்படுத்தி இறுதியில், திட்டத்தை நிச்சயமாக கைவிட்டுவிடும். புதிய அரசியலமைப்பு உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
உறுதியான தீர்மானத்தை எடுங்கள்!
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகரமான மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கம் இது தொடர்பில் நம்பிக்கை தரும் பதில்களை வழங்குவதாக இல்லை. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட…
ஈழ மண்ணின் வீர தியாகத்தை மகாகாவியம் ஆக்குவேன்! வைரமுத்து
ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தின் பிரபல கவிஞரும்…
சமஷ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமைய…
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வே தீர்வாக அமைய முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கூட்டம் கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது இந்த முடிவு மீண்டும் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற…
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளது: ரணில்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “இலங்கை புதிய பாதையில் பயணிக்கின்றது. ஆசியாவிலே முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இங்கு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவைப் பொறுத்த அளவில் இதுவொரு பாரிய சவாலை வெற்றி கொண்டதற்கு…
மைத்திரியின் கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கின்றன: ஜஸ்மின் சூக்கா
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெனீவாவில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக செயற்படுவது குறித்து கரிசனை கொண்டிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்காக திட்டம் குற்றம் சுமத்தியுள்ளது. பிபிசிக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச தலையீட்டை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை…
சிலுசிலுப்புத் தேவையில்லை தமிழர்களுக்குப் பலகாரமே வேண்டும்!
இலங்கைக்குப் புதிய அரசியமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான முஸ்தீபுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழ்ச் சூழலில் ஒற்றையாட்சியா? சமஸ்டியா? தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ற சர்ச்சைக்குள் தமிழர்களுடைய அரசியல் அரங்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் கடந்தகால அரசியலிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். 1940 களில்…
சம்பந்தன் தலைமைத்துவத்தை பலப்படுத்துவோம் முதலமைச்சர் சீ.வி
அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்து செயற்படுவோம். நாங்கள் மக்கள் அபிப்பிராயத்தை பெறுவோம். எல்லோருமாக சேர்ந்து கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய உழைப்போம். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
ரணிலின் கருத்தால் ஆவேசமடைந்த சம்பந்தன்
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் குறித்தே தாம் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். https://youtu.be/aeud3p1WdAw இந்த விடயம் தொடர்பில்…
கூட்டமைப்பு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட காணாமற்போனோரின் உறவினர்கள் முடிவு!
காணாமற்போனோர் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்குமாறு கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக காணாமற்போன உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கம் அறிவித்துள்ளது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள குறித்த சங்கம், காணாமற்போனவர்கள் தொடர்பில்…
எனக்கு தெரியும் புலம்பெயர் புலிகள் ஆதரவாளர்கள் ஈழக் கனவை இன்னும்…
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் சமூகம் ஈழக் கனவை கைவிடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெஹிவலை அத்திடிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து…
தமிழ் மக்கள் பேரவையின் தலைமையிலிருந்து விலகேன்!- விக்னேஸ்வரன் திட்டவட்டம்
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருப்பதையடுத்து உருவாகியுள்ள சர்ச்சைக்கு முடிவைக் காணும் வகையில் வடமாகாண…
இலங்கை இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு காண்பதில் கனடா அக்கறை!- வெளியுறவு…
இலங்கையில் நீடித்து நிலைத்து வரும் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வு காண்பதில் கனடா அக்கறையோடு இருக்கின்றது. இவ்வாறு கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன் தெரிவித்தார். கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்'…
பெப். 5ல் இலங்கை வருகிறார் சுஷ்மா- மைத்திரி, ரணில், சம்பந்தன்,…
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…
உறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?-சிவசக்தி ஆனந்தன்
வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் இராணுவத்தின் பகிரங்கமான அறிவிப்பின் பிரகாரம் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை கவலையுடன்…
புதிய அரசியலமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? – பெப்ரவரியில் வடக்கு…
புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு, அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் வடக்கில் பொதுஅமர்வுகளை நடத்தவுள்ளது. இதற்காக அக்குழுவினர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளனர். இதன்படி, பெப்ரவரி 5, 6ஆம் திகதிகளில் வவுனியா மாவட்டத்திலும், 8,…
காணாமல்போனோர்: பிரதமரின் கருத்துக்கு பிரஜைகள் குழு கண்டனம்
காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை ரணில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார் (உறவினர்கள் போராட்டம்-கோப்புப் படம்) இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள கருத்தை…
தொழிலற்றிருக்கும் விடுதலைப் புலி முன்னாள் போராளிகள்
போர் முடிவடைந்து 7 வருடங்களாகியும் போரில் ஈடுபட்ட பெருமளவான விடுதலை முன்னாள் புலிப் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். செய்திச்சேவை ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வடக்கின் கிளிநொச்சியில் வாழும் சிவலிங்கம் ரவீந்திரதாஸ் என்ற முன்னாள் போராளியை கோடிட்டுள்ள செய்திச்சேவை, அரசாங்கத்தின் புனர்வாழ்வு மையத்தில் 3 வருடங்களை…
காணாமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை!
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை மேலும் நீடிக்குமாறு அந்த ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
காணமல் போனவர்கள் உயிரோடு இல்லை- ரணில் கருத்தால் மக்கள் கொந்தளிப்பு…
மகிந்த ஆட்சிக் கலாத்தில் காணமல் போன பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ரகசிய தடுப்பு முகாமில் இன்றுவரை அடைக்கப்பட்டு இருக்கலாம். ஒரு நாள் அவர்கள் விடுதலையாகி வருவார்கள் என்று , அவர்களின் உறவினர்கள் நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார்கள். இதனால் காணமல் போனோர்களின் உறவினர்கள் பலர் இணைந்து…
ஒரே மேடையில் வைத்து விக்கினேஸ்வரன் போட்டு தாக்கியுள்ளார்: யாழில் ரணில்…
பொங்கல் விழா என்று கூறி , யாழ் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அங்கே மக்கள் மத்தியில் உரையாற்ற இருந்தார். ஒரு நாட்டின் பிரதமர் உரையாற்றிய பின்னரே, அன் நாட்டில் உள்ள முதலமைச்சர் உரையாற்றுவது வழக்கம். ஆனால் வழமைக்கு மாறாக முதலில் வட மாகாண முதலமைச்சர் விக்கி…
போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள்! பல்வேறு தரப்புகள் வலியுறுத்தல்
எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள்…
