‘தேர்தல் வாக்குறுதியில் கூறாததை செய்வதற்கு மக்களிடம் ஆணை பெற வேண்டும்’:…

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவலங்களில் இருந்தும் ஆற்றாமைகளில் இருந்தும் இன்னும் மீட்சி பெறாத நிலையில் உள்ள வடமாகாண மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று கூறியுள்ளார். இராணுவத்தின் அதியுயர்…

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டது ஒரு யுத்தக் குற்றச் செயல்-…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் கொலை செய்யப்பட்டமை ஒர் யுத்தக் குற்றச் செயலாகும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பிரபாகரனின் புதல்வரை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

முடிவுக்குவந்தது ரணில் – விக்னேஸ்வரன் நிழல் யுத்தம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் அண்மைக்காலமாக நிலவி வந்த முரண்பாடுகள் யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வின் மூலம் நிறைவுக்கு வந்துள்ளன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் அதிதியாகப் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மண்டபத்தின்…

இந்திரா காந்தியின் நிலைதான் ஈழத்தமிழ் மக்களுக்கும்!

விடுதலைப் புலிகள் மீது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொண்ட வெறுப்பு பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. சில வேளைகளில் புலிகளின் மரண தண்டனைப் பட்டியலில் தனது பெயரும் இருந்தது என்பதால் அவ்வாறானதொரு கோபத்தை புலிகள் மீது அவர் கொண்டிருக்கலாம். எனினும் விடுதலைப் புலிகள் மீதான கோபத்தை தமிழ் மக்கள் மீது…

எவ்வாறான அதிகாரங்கள் தேவை என்பதனை கூட்டமைப்பு கூறவேண்டும்!- வாசுதேவ பா.உ.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கலின் வரையறை என்னவென்பதை வெளியிட வேண்டும் மஹிந்த அணி ஆதரவு எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்த காலத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

ஒற்றையாட்சி முறைமையில் நியாயமான தீர்வு சாத்தியமா?

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற விடயம் இடம்பெறுமா? அல்லது ஐக்கிய இலங்கை என்ற அடிப்படை முன்னெடுக்கப்படுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும் தேர்தல் முறையை மாற்றியமைக்கவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலும் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பு எந்த வடிவில் அமையப்…

ஜெய்சங்கரின் சந்திப்பு தொடர்பில் சம்பந்தன்

உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த…

நல்லிணக்க முயற்சிகளுக்கு த.தே.கூ பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது: ஜனாதிபதி (முழுமையான…

அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தச் செவ்வியின் முழுமையான வடிவம் கேள்வி: அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளில் தமிழ் தரப்பின் ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது? இதில் வடக்கு…

அரசாங்க உயர்மட்டத்தினருடன் சந்திப்புக்களை நடத்திய ஜெய்சங்கர் இன்று கூட்டமைப்பினருடன் பேச்சு

இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் முன்னெடுப்புகள் மற்றும் இரு நாடுகளினதும் ஒன்றிணைந்த எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் நேற்று அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதேவேளை, எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை இந்திய வெளிவிவகார செயலாளர்…

மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுகிறார். சுயாட்சிக்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோரிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் இந்த சபையில்…

யாழ்ப்பாணத்தில் ஒரு பற்றையும் காலியாக இல்லை- காதல் ஜோடிகள் !

யுவதியொருவரைக் கூட்டிச் சென்று பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த இளைஞரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் நேற்று முன் தினம் உத்தரவிட்டார். வரணி, இயற்றாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை காதலித்துள்ளார். யுவதியை அழைத்துச் சென்ற…

தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டை நிறுத்த விக்னேஸ்வரனுக்கு இந்தியா அழைப்பு…

இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும்தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்த சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது வழமை. ஆனால்…

நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இறக்கவில்லை- ஆனால் பின்னர் எவ்வாறு…

2009ம் ஆண்டு மே 18 மாலை இலங்கை தொலைக்காட்சி காட்டிய புகைப்படத்தில் , உண்மையாகவே புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் இறந்து கிடந்தார்களா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. 2009ம் ஆண்டுக்குப் பின்னர் பல மாதங்கள் கழித்து இலங்கை ராணுவச் சிப்பாய் ஒருவர் தான் மோபைல் போனில் எடுத்த புகைப்படத்தை…

புதிய அரசியலமைப்பில் இந்தியாவில் உள்ள நல்ல விடயங்களும் உள்வாங்கப்படும்! மனோ…

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பில் இந்திய அரசியலமைப்பு விடயங்களும் உள்வாங்கப்படும் என்று தாம் நம்புவதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் அலுலக மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகரம் கடந்த 9ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த ப்ரவசி பாரதீய திவாஸ் 2016 நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே…

13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…

அரசியலமைப்பு திருத்தப்படுகிற போதும் அதனூடாக 13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இணங்காது என சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசியலமைப்பு திருத்தத்தினூடாக நாட்டின் ஜக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ ஜனாதிபதி…

புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியவில்லை!

யாழ்ப்பாணத்திறக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மீன்படித்துறை அமைச்சர்  மகிந்த அமரவீர  யாழ் மாவட்ட மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை கடற்றொழில் அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் தற்போது மீன்பிடியாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாக,  யாழ் மாவட்ட மீன்பிடி அமைப்புக்களின் சங்கங்களின் பிரதிநிதிகளுடன்…

தமிழ் அகதிகளுடன் இலங்கை அதிபர் சந்திப்பு! அரசியல் நாடகமா?

அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வேறொரு நிகழ்விற்காக வந்திருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருபத்தைந்து வருடங்களாக அகதிகளாக உள்ள வலி வடக்கு அகதி முகாமுக்குச் சென்று அங்குள்ள ஈழ அகதிகளுடன் பேசினார். இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களை இறங்கி வந்து சந்தித்த மைத்திரிபாலவே என்று ஊடகங்கள் அவரைப்…

2016ல் ஈழத்தமிழர்களின் திசைவழிப்பாதை எது?

புதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என எதிர்பார்க்கிறோம் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்ரகுமாரனது  புத்தாண்டுச் செய்தியோடு 2016 மலர்ந்துள்ளது. வழமைபோல் புதிய நம்பிக்கைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் பிறந்துள்ள இப்புத்தாண்டில், ஈழத்தமிழர்களது நீதிக்கும், உரிமைக்குமான போராட்டத்தின் திசைவழிப்பாதை எவ்வகையாக அமையப் போகின்றது…

2015ல் கூட பெண்களை சித்திரவதை செய்துள்ளது இலங்கை ராணுவம்: ஆதாரங்கள்…

2009ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் பரவலாக பல இடங்களில் கொலை கற்பழிப்பு மற்றும் சித்திரவதைகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது. ஆனால் இவை அனைத்தும் சரியாக ஆவணப்படுத்தப்படுவது இல்லை என்பது பெரும் குறையாக உள்ளது. இது இவ்வாறு இருக்க , முன்னர் ஐ.நாவின் மனித உரிமை விசாரணைக் குழுவில்…

ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் இனி வேண்டாம்!…

1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்புபேரவையாக மாற்றும் அறிவிப்பை இன்று வெளியிட்டு உரையாற்றும் போதே  ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். தம்மை பொறுத்தவரை 1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம்…

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் முடிவு சரியானதே…!

அதிக சர்ச்சைகள் விவாதங்கள், கருத்து மோதல்கள் என்று தனது அவதரிப்போடு இருக்கின்றது தமிழ் மக்கள் பேரவை. இன்றைய கால அரசியல் சூழலில் தமிழ் மக்கள் பேரவை தேவை தானா என்று ஒரு தரப்பும். வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தவறான தலைவர்களோடு இணைந்து விட்டார் என்று இன்னொரு தரப்பும். அரசியல்…

சம்பந்தரின் சாணக்கியம் எதுவரை?!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் 'தீர்வு' பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக இருக்கின்றார். பிறந்திருக்கின்ற 2016ஆம் ஆண்டினை அவர் அதன் போக்கில் குறிப்பிட்டளவான நம்பிக்கைகளோடு எதிர்கொள்கின்றார். கடந்த கால தேர்தல் மேடைகளிலும், அதனைத்…

இலங்கையில் தமிழருக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கிறது: சர்வதேச மனித உரிமைகள்…

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அரச படையினரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உள்ளாகி வருவதாக தென்னாப்பிரிக்காவைக் சேர்ந்த உரிமை பிரச்சாரக் குழுவான உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசத் திட்டம் தெரிவித்துள்ளது. சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தாலும், தமிழர்கள் சிலர் இன்றளவும்…