மஹிந்த புலிகளை தோற்கடித்தமையை மறுக்க முடியாது: காந்தியின் பேரன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை தொடர்பில் நினைவுக் கூறப்படுவார். எனினும் போரின் போது மேற்கொண்ட குற்றங்களையும் மறக்க முடியாது என்று மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஸ்ண காந்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி ஏற்பு ஓராண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர்…

மலையக மக்களின் மேம்பாட்டுக்காக உள்ளூராட்சி சபைகள் சட்டத்தில் திருத்தம்

இலங்கையில் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது. மலையகத்தில் சமூகப் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கியுள்ளது இதையடுத்து இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு பிரதேச சபைகள் மூலம் சேவைகளை வழங்க வழி ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாறுதலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இரு நாடுகளிடமும் தீர்வு இல்லை:…

வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவை படகுகள் அத்துமீறலை தடுக்க இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களிடம் தீர்வு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர் அத்துமீறல்கள் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…

இந்தியாவும் அமெரிக்காவும் தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்!- பசில்

இலங்கையில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டு வருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள…

சித்திரவதை முகாம் கிடையாது : அமைச்சர் ராஜித்த

வட மாகாணத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இராணுவத்தினரால் நடாத்தி…

இலங்கையை ஆக்கிரமிப்பதற்காகவே அனுமன் பாலம் அமைக்கிறது டில்லி: மஹிந்த அணி…

இராமரும், அனுமனும் அன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பலவந்தமாக பாலம் அமைத்து இலங்கையை ஆக்கிரமித்தனர். மீண்டும் இவ்வாறானதொரு ஆக்கிரமிப்புக்காகவா அனுமன் பாலம் அமைக்கப்படுகின்றது என்று சந்தேகம் எழுப்பியுள்ளது மஹிந்த ஆதரவு அணி. கூட்டு எதிரணி எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியினர் நேற்றுக் கொழும்பிலுள்ள என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில்…

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவை கட்டாயமானதாகும்! ஆயர் யோசப்…

வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும். இந்த அமைப்பிற்கு எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். இன்றைய தினம் (06.01.2016) தமிழ் மக்கள் பேரவையின்…

பொங்கலுக்கு முன்னர் அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவர்! மீன்பிடித்துறை அமைச்சர்

இந்தியாவுடன் நிலவும் சிறந்த நட்பின் அடிப்படையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் எதிர்வரும் 15 தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவர் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை தடுத்து வைப்பதில் இலங்கை அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. எனினும் அவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை…

கடுமையான நிலைப்பாடுகள் அரசியல் தீர்வினை அடையும் வழிகளை பாழடித்துவிடும்: சம்பந்தன்

கடுமையான நிலைப்பாடுகள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை பாழடித்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “கடும்போக்குத் தன்மையை கடைப்பிடிப்பதன் நாட்டின் முன்னிலையில் காணப்படும் அரிய…

முன்னாள் போராளிகளின் அவலம்! மரணத்தின் பின்னர் இறுதிக்கிரியை செய்ய பணமில்லை!

முன்னாள் போராளி ஒருவர் தீக்காயத்திற்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். ஆனால் அவரின் சடலத்தினைப் பெற்று இறுதிக்கிரியைகள் செய்வதற்கு பணமில்லாததால் அரச செலவில் அடக்கம் செய்யக்கோரியுள்ளார்  மரணமடைந்தவரின் சகோதரி. தமிழினத்தின் விடிவிற்காக தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் தமிழ் இளைஞர் யுவதிகள். கண்ட கனவுகளையும், நினைத்த வாழ்க்கையையும் வாழ…

தோற்ற இனமாக நினைத்து தீர்வு பெற நினைத்தல் கேடு!

தமிழ் மக்களின் வாழ்வியல் தளம் என்பது தனித்து இலங்கை அரசு தரும் தீர்வுத் திட்டத்தால் மட்டும் நிவர்த்திக்கப்படக் கூடியதன்று. மாறாக எங்கள் மண்ணை வாழ்விக்க நாங்கள் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு. ஒரு இனம் தனது இருப்பை நிலைநிறுத்த வேண்டுமாயின் அதற்கான அந்த இனம்…

எந்த சலசலப்பும் இன்றி உறுதியாக முன்னேறிச் செல்லும் “தமிழ் மக்கள்…

அரசியல் தீர்வு சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்ட தீர்மானங்களின் முதலாவது அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படுமென, தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவின் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவின் கன்னி அமர்வு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமாகியது. இதன் பொருட்டு…

இறந்த புலித்தேவன் மற்றும் நடேசன் ஆன் லைனில் வந்தார்கள்!

2009ம் ஆண்டு மே மாதம் வெள்ளைக்கொடியோடு சென்று இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து, பின்னர் கொல்லப்பட்டார்கள் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர். இவர்களது மடிக் கணனி(லேப்-டொப்) இன்றுவரை இலங்கை புலனாய்வுப் பிரிவினரிடம் தான் உள்ளது. இருப்பினும் 7 வருடங்கள் கழித்து, நேற்று முன் தினம் அதனை யாரோ சுவிஜ் ஆன்…

பிளயர், சம்பந்தனை சந்தித்தார்! சமாதான ஏற்பாட்டளராக செயற்படுவதாகவும் தகவல்

பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை…

சிறுபான்மையினர் பிரச்சினைக்கு தீர்வு கண்டாலேயே நாட்டை பாதுகாக்க முடியும்!- மைத்திரி

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் நாடு சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கைதான் என்று குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் சுதந்திரமும்…

மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் 15ம் திகதி பலாலியில் விஷேட…

குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது குறித்து ஆராய்வதற்காகவும் எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் யாழில் இடம்பெறவுள்ளது. பலாலி இராணுவத் தலைமையகத்தில் 15ம் திகதி பிற்பகல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் படுகொலை செய்யப்பட்ட மனித உடலங்கள்!

கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காணிகளை சொந்தமாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையிலேயே விழிப்படைந்த பொதுமக்கள்…

வசந்தம் TV நிருபரிடம் சிக்கி சின்னாபின்னமான கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

2001ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் , பிரிந்திருந்த பல கட்சிகளை அழைத்து. அதேபோல முன்னர் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட பல அமைப்புகளை அழைத்துப் பேசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள் என்பது ஒரு சின்னப் பிள்ளையை கேட்டால் கூட தெரிந்த விடையம். ஆனால் அப்படி ஒன்று நடந்ததாக தனக்கு தெரியவில்லை…

இலங்கையில் மூன்றாவது யுத்தத்திற்கு தயாராகிறது சர்வதேசம்!

இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன? தனது ஆயுத பலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப் பார்க்க…

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகள் ஆரம்பம்- பேரவைக்கு எதிராக வேண்டுமென்றே சில…

வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும்,…

தமிழ் மக்கள் இன்னமும் காத்திருக்கும் நிலைமை! புத்தாண்டிலாவது தீர்வு வேண்டும்!…

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஓராண்டு நிறைவை அரசாங்கம் கொண்டாடவுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த ஆண்டிலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு…

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை!

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சாட்சியமளிக்கும் சாட்சியாளர்களை அச்சுறுத்தி அழுத்தம் கொடுப்போரை சட்ட ரீதியாக தண்டிக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரமுண்டு. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்போருக்கு…

தீர்வு பெறும் விடையத்தில் சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார்: சிறீதரன்

தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையினுடைய புத்தாண்டு…