மூதூரில் மனிதநேயப் பணியாளர்களது படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும்: பரிஸில்…

சிறிலங்காவில் 2006ம் ஆண்டு சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட (ACF) பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்களது படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. பிரான்சினை தளமாக கொண்டு இயங்கு பட்டினிக்கு எதிரான அமைப்பு, டிசெம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளினையொட்டி, தலைநகர் பரிசிஸ் இயங்கும் மெட்ரோ…

வலி.வடக்கிலிருந்து வெளியேறிய மக்களைச் சந்தித்தார் ஐ.நா விசேட பிரதிநிதி

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி, வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். வலி. வடக்கில் இருந்து கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இவ் நலன்புரி…

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக உள்ளது!-…

ஜனாதிபதி சொல்லில் ஒரு முகத்தையும் செயலில் இன்னொரு முகத்தையும் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாரென்றும் கேட்டதெல்லாம் கொடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறி வருகின்ற நிலையில் இங்கு நடப்பது வேறாகவே உள்ளதாகவும்…

ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்: முதலமைச்சர் மற்றும் ஆளுனரை…

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா விசேட பிரதிநிதி, அவ்விஜயத்தின் ஒரு பகுதியாகவே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, வட மாகாண…

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றவுள்ளதாக அரசாங்கம் நாடகமாடி வருகிறது: மீள்குடியேற்ற குழு…

யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றவுள்ளதாக அரசாங்கம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் நாடகமாடி வருவதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது, வலிவடக்கில் இருந்து 1990 இல் இடம்பெயர்ந்து பல பிரதேசசெயலக…

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை: மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கமரூன்!

இறுதிப் போரில்  இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்பதனை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் “ஏசியன் லைட்“ என்ற ஊடகத்துக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் சமத்துவமான நிலையில்…

ஐநா விசேட பிரதிநிதி இன்று இலங்கை வருகை! நாளை வடக்கில்…

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர் வடக்கிற்கு பயணம் செய்வதுடன், வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கை வரும்…

போர்க்கால இழப்புப் பதிவு நடவடிக்கை நம்பகமாக இல்லை!- வடபகுதி மக்கள்…

இலங்கையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகமாக இல்லையென்று வட இலங்கை மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். போர்க்காலத்தில், அதுவும் 1982ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள…

‘இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை’: இலங்கை

இலங்கையில் இணைந்த வடக்கு-கிழக்கு பிராந்தியத்தில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என்ற இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு இலங்கை அரசு காட்டமான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளரும்…

கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் பரிதாப…

கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளது தாயாரான அவர் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் அடுத்ததொரு கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக் கூறியே கட்டாயப்படுத்தி குறித்த கர்ப்பத்தடை…

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான கூட்டு யோசனை

அடுத்தாண்டு நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது, இலங்கைக்கு எதிராக கூட்டு யோசனை ஒன்றை கொண்டு வர கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன. ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே இலங்கைக்கு எதிராக இரண்டு யோசனைகளை கொண்டு…

‘இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க சர்வதேசத்திடம் செல்வோம்’

இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுவருவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கூறியுள்ளது. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் இந்துக்களின் வழிபாட்டிடங்களில் வழிபாடுகள் நடத்த முடியாத அளவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடந்துவருவதாகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தெரிவித்தார். அதியுயர்…

எமது உள்ளூர் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக் கொள்வோம்!- தமிழ்…

எமது உள்ளூர் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். எமது உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் மாத்திரமே தீர்த்துக் கொள்ள முடியும்.  இதற்காக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டத்தின்…

இலங்கை மக்கள்தொகையில் 31 லட்சம் பேர் தமிழர்கள்!- புள்ளி விபரத்…

இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 63723 எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒரு கோடியே 51 லட்சத்து…

கமரூன் இலங்கையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு அதிருப்தி தெரிவித்து மகஜர்- இலங்கைக்கு…

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள அரச ஆதரவு அமைப்புநேற்று மகஜர் ஒன்றை வழங்கியது. பிரித்தானிய இலங்கையர் ஒன்றியம் என்ற அமைப்பே இந்த மகஜரை வழங்கியது. பிரதமர் டேவிட்…

எமது இன விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும்…

எமது விடுதலைப் போராட்டத்தை தமது உயிரர்ப்பணிப்பால் செதுக்கிச் சென்ற மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும். போராட்டப் பயணத்தில் சாவுகளையும், துன்பங்களையும் அழிவுகளையும், கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/13 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2013. அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,…

“இலங்கை அரசின் கணக்கெடுப்பை வரவேற்க இது நேரமல்ல”

இலங்கையில் 1982 முதல் 2009 வரை உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது கருத்தேதும் தெரிவிக்க முடியாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.…

இலங்கையின் யுத்த இழப்பு கணக்கெடுப்பின் நோக்கம் என்ன?

இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் யுத்தம் மற்றும் அசம்பாவிதங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள், ஆட்சேதங்கள் மற்றும் சொத்து அழிவுகள் தொடர்பான கணக்கெடுப்பை அரசாங்கம் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. 'நாடெங்கிலும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கணக்கெடுப்பு அதிகாரிகள் சென்று தகவல்களைத் திரட்டுவார்கள். 1982-ம் ஆண்டிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில்…

சிங்கள அதிகார வர்க்கத்திற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு என்றும் அடிபணியவில்லை:…

விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போராளிகள் இடையில் மிகப்பெரிய போராளி என ஊடகவியலாளரும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினருமான திலக் கோதாகொட தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகளை விட விடுதலைப்புலிகள் அமைப்பே அறிவுசார்ந்த மற்றும் தொழிலாளர் இடையில் சிறந்த சேர்க்கையை ஏற்படுத்தியது.…

தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார். குடாநாடு முழுவதும் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றைய தினம் செய்யப்பட்டிருந்ததுடன்,…

மக்களின் உணர்ச்சிகளை அடக்க முற்பட்டால் தாக்கம் மிக மோசமாக இருக்கும்:…

எமது மக்களின் உணர்சிகளை இராணுவப் பலத்தின் மூலமாகவோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ அடக்க முற்பட்டால் அதன் தாக்கம் மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மரநடுகை விழாவில் கலந்து கொண்டு…

இலங்கை தமிழர் படுகொலை பற்றி நம்பகமான விசாரணை: டேவிட் கமரூன்…

தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டேவிட் கமரூன் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், லண்டன் பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:– நான் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சென்று திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும்…

அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட அரசுக்குப் பீதியை ஏற்படுத்துகின்றன!…

அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட எமது அரசாங்கத்திற்குப் பீதியை ஏற்படுத்துகின்றன என்று தெரிகிறது. இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டது என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:…