திருச்சியில் வரும் 26.09.2013 வியாழக்கிழமை நடக்கும் பாஜக மாநாட்டிற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும் என்றும், அவரது ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர்.
ஆனால், ரஜினி மவுனமாகவே இருந்து வந்தார்.
இந்தநிலையில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ரஜினி தளம் மற்றும் ரஜினிகாந்த் தலைமையகம் என்ற பெயரில் ரஜினிகாந்திற்கு நரேந்திர மோடி பூங்கொத்து கொடுப்பது போலவும், அதில் ‘உங்களத்தான் நம்புது இந்த பூமி, இனி இந்தியாவுக்கு நல்ல வழிகாமி’, ‘மக்களின் எதிர்பார்ப்பே ஒளிரட்டும் பாரதம்’, ‘பாரத தாயை மீட்க, தர்மம் காக்க வந்தவரே’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டி உள்ளனர்.
இந்த போஸ்டர்களால் பாஜகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்ற கட்சியினரோ வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியா வல்லரசு என்று கூறும் காங்கிரஸ் கட்சி, இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் கழித்துதான் மணிமேகலையின் அட்சையப்பாத்திரமே இந்திய மக்களுக்கு கிடைத்துள்ளது ,தன் இனமீனவனையே மாற்றானை கொல்லவைத்து, மற்றவனிடம் வெள்ளைக்கொடி ஏந்திச்செல்ல கூறவைக்கும் அவலம் , இந்திய எல்லையில் இராணுவவீரர்களின் தலையை எடுத்துச்செல்லும் அவலம், மதசார்பற்ற போர்வையில் இன்னும் எத்தனை காலம் மதத்தால் பிரித்தாளும் நிலைபாடு , மதத்தால் ஒன்றுபடுவோம் மாற்றுவோம் இந்தியாவின் அவலத்தை, அகற்றுவோம் பழையதை ,ஆதரிப்போம் புதியதை ,இந்தியா என்ற தடாகத்தில் நீந்தட்டும் மோடி என்ற இளம் தாமரை.
அய்யா உதயகுமார் உங்க கருத்து படி பார்த்தல்,(மதத்தால் ஓன்று படுதல்) ஒரு நாயக்கர் பாபத்தியை அல்லது ஒரு தலித்து தேவர் குளத்து பெண்ணை ( அண்மையில் தமிழ் நாட்டில் ஜாதிவெறி தாண்டவ மாடியதை மறந்து விட்டீர் போலும்) திருமணம் முடிக்க முடியுமா? தீட்டு என்று சொல்லி கொலை செய்ய கூட தயங்க மாட்டார்கள், நீங்க சொல்கின்ற படி மத ஒற்றுமை நிலையை அமெரிக்க இங்கிலாந்த் மற்றும் ஐரோப்பிய அரபுநாடுகள் எடுத்தால் என்ன வாகும் கொஞ்சம் நீனைத்து பாருங்கள்.
பெரியார் என்ற என் நண்பனே கேளுங்கள், மதத்தால் ஒன்றுபடுவது மாற்றுசாதியில் மனமுடிப்பதுயல்ல ,திராவிடத்தின் தந்தை பெரியாரும் ,ஆரியத்தின் தந்தை ராஜாஜியும், நண்பனாக வாழ்ந்தது போல், நாம் இணைவோம் , மதங்களையும் ,சாதிகளையும் இணைத்து மாற்றங்கள் ,நாம் சொல்லவேண்டாம், ஒன்றுபட்டமதங்களாக, ஒன்றுபட்ட மனிதர்களாக வாழ்வோம். மனிதநேயம் காப்போம் .
பெரியார் சரியாக சொன்னீர்கள், கொங்கு நாட்டு கவுண்டர் பெண்ணை ஒரு அருந்ததி பையன் திருமணம் முடிக்க முடியுமா? பேச்மன்ட் ஸ்ட்ராங்கா இருக்க கூடாதாம் ஆனால் கட்டிடம் ஸ்ட்ராங்கா இருக்கணுமாம்! முதலில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்களா? நல்லா கருத்து எழுதுறாங்கப்பா.
மோடி என்பவர் நல்லவர் என்றால், பல உயிரை கொன்ற ஒசாமா எப்படி? மோடியை பார்ப்பனர்களின் பத்திரிகைகள் போலியான செய்தி மூலம் ஏமாற்றி விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது!