பாகிஸ்தான் பற்றி ஒபாமாவிடம் புகார் கூறவில்லை: சல்மான் குர்ஷித்

salmanஅமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பின் போது ஒபாமாவிடம் பாகிஸ்தான் பற்றி புகார் அளிக்கும் ரீதியில் மன்மோகன் சிங் எதுவும் கூறவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒபாமா, மன்மோகன் சிங் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் பற்றி ஒபாமாவிடம், மன்மோககன் சிங் புகார் அளித்ததாக செய்தி வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியது:

இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பின் போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து மன்மோகன் சிங் தனது உண்மையான உணர்வுகளை ஒபாமாவிடம் பகிந்து கொண்டார். பாகிஸ்தான் பற்றி புகார் அளிக்கும் ரீதியில் எதுவும் பேசவில்லை. இருவரும் நல்ல நண்பர்களைப் போல பழகி வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பற்றியோ, பாகிஸ்தான் பற்றியோ மன்மோகன் சிங் தரக்குறைவாக பேசவில்லை. இந்த சந்திப்பு இரு நண்பர்கள் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டது போல இருந்தது என்று குர்ஷித் தெரிவித்தார்.

ஒபாமா, மன்மோகன் சிங் சந்திப்பின் போது சல்மான் குர்ஷித் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: