கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட வேண்டியவை என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர் விழாவில் அவர் பேசியதாவது:
“ஹிந்துத்துவா’ தலைவராக நான் அறியப்படுகிறேன். எனது இந்தத் தோற்றம் இவ்வாறு சொல்வதற்கு அனுமதிக்காவிட்டாலும், என்னுடைய உண்மையான எண்ணத்தை தைரியமாக சொல்கிறேன்: முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பின்னர் கோவில்களை கட்டுவோம்.
கிராமங்களில் கோவில்களை கட்டுவதற்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அங்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், பெண்கள் திறந்த வெளிகளைக் கழிவறைகளாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது என்றார் நரேந்திர மோடி.
இதே போன்ற கருத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னர் கூறியபோது, நாடு முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே கருத்தை சில மாதங்களக்கு முன்னால் காங்கிரசை சேர்ந்த ஜெயராம் ரமேஷ் கூரியிருந்தார், அதற்க்கு கடுமையான எதிர்ப்பு கெளம்பியது, அதே கருத்தை தற்போது மோடி மஸ்தானும் கூரியிருக்கிரார் இதற்க்கு ஒரு எதிர்ப்பையும் காணோம்.
மோடி சொல்வதில் என்ன தப்புக்கண்டிர், ஒழுங்கான கழிவறைகள் இந்தியாவில் எங்கும் இல்லாத போது கோயில் என்ன வேண்டிக்கிடக்கிறது??? அதற்க்கு முன் நீர் வசதிகளை செய்து கொடுங்கள்!!
இந்திய மீடியாக்களுக்கு காங்கிரஸ் (மருமகள்) உடைத்தால் பொன் சட்டி, அதே (கருத்தை)பாரதியே ஜல்சா பார்டி (BJP) உடைத்தால் (சொன்னால்) மண்சட்டி.