ராகுல் காந்திக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியாது: மோடி பேச்சு

modi-01Aஉத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ராகுல்காந்திக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியாது என குற்றம் சாட்டினார்.

மேலும் கூட்டத்தில் பேசிய அவர் ஏழைகளின் நலனுக்காக உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்ததாக, ராகுல் காந்தி பெருமைப்படுகிறார. அது உணமை இல்லை உண்மையில் ராகுல்காந்திக்கு ஏழ்மை என்றால் என்ன என்பது தெரியாது. அவர் ஏழையாக பிறக்கவில்லை. ஏழைகளின் வேதனையும் அவருக்கு தெரியப்போவதில்லை.

வெறும் அரசியல் ஆதாயத்துக்காகவே ஏழைகளை தேடிச்சென்று  புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். அதோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பணக்காரர்கள் நலனுக்காகவே பாடுபடுகிறது அரசுக்கு ஒரே ஒரு மதம்தான் இருக்க வேண்டும். அது தேசியம் என்பது. அதுபோல் ஒரே ஒரு புனித நூல்தான் இருக்க வேண்டும். அது சட்ட நூல் என்பது.

காங்கிரஸ் ஓட்டுக்காக ஆட்சி நடத்துகிறது. மதச்சார்பின்மை என்பதை கையில் எடுத்துக் கொண்டு, மக்களை பிரித்தாள்கிறது. ஓட்டுக்காக அரசியல் செய்வதை, அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சி சார்ந்த அரசியலில் ஈடுபட வேண்டும். என்று அவர் பேசினார்.

TAGS: