அமெரிக்காவில் இந்திய தூதரக பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட அவமரியாதை செயலுக்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கருத்து வெளீயிட்டார்.
தூதரக பெண் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் வலுவாக செயல்பட்டு முனைப்பு கட்டினார்கள். அதுபோல் தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் முனைப்பு காட்ட வேண்டும்.
மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை முக்கியமான ஒன்றாகும். மத்திய, மாநில அரசுகள் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளை இந்த மாத இறுதிக்குள் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கைக்கு வலுவான, உறுதியான முறையில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் மக்களின் ஒருமித்த விருப்பமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ம்……….. வந்துட்டாருயா கருத்து சொல்ல.தமிழ்நாட்டு தமிழன் இருந்தா என்ன? செத்தா என்ன? இந்த கண்துடைப்பு பேச்செல்லாம் கேட்டு கேட்டு காது புளித்துவிட்டது.இந்தியாவை பொறுத்தவரை வடநாட்டுகாரனுக்கு ஒரு நீதி.தமிழனுக்கு ஒரு நீதி.தமிழினத்திற்காக உண்மையாக போராட ஒருவன் இல்லாதவரை இந்த அவலங்கள் தன் சொந்த நாட்டிலேயே நடப்பது உறுதி.
நீ விறு விறுன்னு தமிழ் நாடு அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலங்களுடன் சேர்த்து உண்மையான border நிலவரத்தை ஆதரங்களோட இந்தியாவுக்கு கொடுத்து உடனடியாக தனி தமிழர் நாடு பிரகடனம் செய்துவிடு.மற்றதை தமிழ் நட்டு மக்களும்,
மாணவர் புரட்சியும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவர்!
matter solved…….