இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கென தனித் துப்பாக்கி

rivalverவட இந்தியாவில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான ஆயுத தயாரிப்பு நிறுவனம், பெண்கள் தங்கள் மீதான பாலியல் தாக்குதல்களைத் தடுக்க உதவக்கூடிய எடைகுறைந்த ரிவால்வர் கைத்துப்பாக்கி ஒன்றை தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்தியத் தலைநகர் டில்லியில், 2012 டிசம்பர் மாதம் பலரால் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கான அஞ்சலியாக இந்த புதிய டைடானிய துப்பாக்கியை தாங்கள் உருவாக்கியிருப்பதாக இந்திய ஆயுததளவாட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மதிப்பில் சுமார் இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த புதிய ரக ரிவால்வர் குறித்து இதுவரை 80 பேர் தங்களிடம் விசாரித்திருப்பதாகவும், 20 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சந்தேகம்

ஆனால், ‘முறையாக பயிற்சி பெறாதவர்களிடம் ஆயுதங்களைக் கொடுப்பது பயன்தராது. அது மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும்’ என்று ஒய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தவறான நபர்களிடம் ஆயுதங்கள் போகவும், தவறாக பயன்படுத்தப்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் துப்பாக்கி வைத்திருக்க அரசிடம் அனுமதி (லைசன்ஸ்) பெற்றிருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: