இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை: ஜெயலலிதா அறிக்கை

jaya2இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும். இவ்வாறு தமிழ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதல்மைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை சிறையில் வாடும், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறது. இதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

அதன் பயனாக, “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடும், 275 தமிழக மீனவர்கள் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்படுவார்கள், இலங்கை அரசு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே போல், தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 179 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக மீனவர்களின் நலன் கருதி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை, விடுவிக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவர்.

இந்த சுமுகமான சூழ்நிலையில், 20ம் தேதி, தமிழக இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TAGS: