ஆம் ஆத்மி ஒரு அரசியல் கட்சியல்ல;அது ஒரு நடைபாதை:ஜெய்ராம் ரமேஷ்

jeyaramபுதுடில்லி: ஆம் ஆத்மி ஒரு அரசியல் கட்சியே அல்ல என்றும் அது ஒரு படைபாதை என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இவரே கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வரும் மிகப்பெரிய சக்தி என்றும் மற்ற எல்லா கட்சிகளும் அதனை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது அன்று பேசியவற்றில் இருந்து மாறாக மாற்றி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி என்பது போராட்டம் மட்டுமே. அதனால் அது அரசியல் கட்சி கிடையாது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு கொள்கை,நிர்வாகம் மற்றும் அமைப்பு ரீதியில் கட்சியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 128 ஆண்டுகளாக இருந்து வரும் கட்சியாகும். அவர்களுக்கு போராட்டம் மட்டுமே தாரக மந்திரமாக கொண்டது.

ஆர்ப்பாட்டம் அராஜகம் அவற்றை மட்டுமே கொண்டு மேடையில் பேச முடியாது.டில்லியில் கொடியை நாட்டிய ஆம் ஆத்மி, லோக்சபா தேர்தலில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு இது ஆரம்பம் தானே. தேசிய அளவில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை இப்போதை கூற இயலாது என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

TAGS: