கவர்ச்சிப் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

uthav_thakre_001கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கெஜ்ரிவாலை விட நல்லாட்சி தருவார் என்று உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார்.

சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்ச்சியான போராட்டத்தை நடத்துவதாக அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லி மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவாலை விட கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த்தே பொருத்தமானவராக இருப்பார்.

திரைப்படங்களில் சாதாரண வேடத்தில் நடிப்பவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கவர்ச்சி நாட்டி நடிப்பார்கள். அதுபோல தன்னை அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள கெஜ்ரிவால் கவர்ச்சி போராட்டங்களில் நடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் ஷிண்டே கெஜ்ரிவாலை பைத்தியக்கார முதலமைச்சர் என்று கூறிய நிலையில், இன்று உத்தவ் தாக்கரே அவரை கவர்ச்சி நடிகையுடன் ஒப்பிட்டு பேசி வருவது அவரின் நடவடிக்கை கேலிக்குறியதாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

TAGS: