மேற்கு வங்கத்தில் 13 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பழங்குடியினப் பெண், தனது நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தான் ஒருவரைக் காதலித்ததாகவும் அதன் காரணமாக, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அபராதத் தொகையைத் தன்னால் செலுத்த முடியாதென மறுத்ததால் தன்னை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர், அப்பெண் கடின வேலைகளில் ஈடுபடும் ஒரு பழங்குடியினப் பெண் என்ற காரணத்தினாலேயே இவ்வாறான கொடூர சம்பவத்தின் பின்னரும் உயிர் தப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.