நாங்கள் கருப்பாக இருந்தால் பிரச்சனையா? கலங்கும் ஆப்பிரிக்க பெண்கள்

africa_women_001கருப்பாக இருப்பதால் இந்தியாவில் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது என்று ஆப்பிரிக்க நாட்டு பெண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கிர்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உகாண்டா, நைஜீரிய நாட்டு பெண்கள் பாலியல் தொழில் செய்வதாகவும், போதைப்பொருள் கடத்துவதாகவும் கூறி, கடந்த 15ம் திகதி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி சோதனை நடத்தினார்.

அப்போது, அமைச்சருடன் சென்ற சிலர் ஆப்பிரிக்க நாட்டு பெண்களை தாக்கினர். மேலும், அந்த பெண்களை கைது செய்ய வேண்டும் என்று பொலிசாரிடம் அமைச்சர் சோம்நாத் பாரதி கூறியுள்ளார்.

ஆனால் பொலிசார் கைது நடவடிக்கை எடுக்காததால், பொலிசாருக்கும், அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்தொடர்ச்சியாக, காவல்துறையை கண் டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தினார்.

2 பொலிசார் விடுப்பில் அனுப்பப்பட்டதையடுத்து, தர்ணா முடிவுக்கு வந்தது. வீட்டை சோதனை செய்தபோது, அமைச்சர் சோம்நாத் பாரதி தலைமையில் வந்த கும்பல் தன்னை தாக்கியதாக டெல்லி மகளிர் ஆணையத்தில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.

மேலும் அமைச்சர் பதவியில் இருந்து சோம்நாத் பாரதியை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் கூறுகையில், கருப்பாக இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம் என்றும் நாங்கள் கருப்பாக இல்லாமல் இருந்தால், அவர்கள் எங்களிடம் தவறாக நடந்திருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

TAGS: