ஜார்கண்டில் அரசு அதிகாரிகள் மாவோயிஸ்டுகளால் கடத்தல்

mouoராஞ்சி, ஜன. 26-இந்தியாவில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பழங்குடியின மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று கூறி வரும் இடது சாரி மாவோயிஸ்டுகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த அப்பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அதிகம் நடமாட்டமுள்ள கிரிதி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் 5 பேரை நேற்று மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றுள்ளனர். நவ்கானியா கிராமம் அருகே காரில் சென்ற அவர்களை துப்பாக்கி முனையில் நேற்று மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர்.

பின்னர் சில மணி நேரங்கள் கழித்து, அந்த காரின் ஓட்டுனரை மட்டும் மாவோயிஸ்டுகள் விடுவித்தனர். கடத்தப்பட்டவர்களில் மூன்று பேர் பிரதமரின் கிராமப்புற மேப்பாட்டு திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஆவர். இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்துவருவதாக கிரிதி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கிராந்தி குமார் தெரிவித்தார்.

TAGS: