நான் வெற்றி பெறுவது முக்கியமல்ல: மோடி பேச்சு

modiபுதுடில்லி: இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவதை விட, நாட்டு நலனே முக்கியம் எனவும், நாட்டின் நிலையற்ற தன்மை ஏற்படக்கூடாது எனவும் என பா.ஜ., பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

3டி தொழில்நுட்பம் மூலம் பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசு எதையும் செய்யவில்லை. மக்களின் நம்பிக்கையையோ, அல்லது அவர்களை கவரவோ எதுவும் செய்யவில்லை என பா.ஜ., பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இன்று நம்மிடம் நீட்டா, நித்தில மற்றும் நியாத் போன்றோர் இல்லை. காங்கிரசாரின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதில் மட்டுமே உள்ளது. ஆனால் நாம் நாட்டை காப்பாற்றுவோம் என்ற இலக்கை வைத்துள்ளோம். மக்களின் முகத்தில் சிரிப்பை காண விரும்புகிறோம். மத்தியில் நிலையான ஆட்சி மக்களின் விருப்பமாக உள்ளது. அந்த ஆட்சி மக்களின் குரலை கேட்கும். அவர்களின் கனவுகளை நிறைவேற்றும். காங்கிரசார் தங்களின் சொந்த நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். ஆனால் நாம்நாட்டை காக்க விரும்புகிறோம். தாய் மகனுக்கான அரசு தனது இறுதி காலத்தில் உள்ளது. தற்போதைய மத்திய அரசில், பிரதமருக்கோ, அமைச்சரவைக்கோ உரிய மரியாதை இல்லை. அவர்களின் குரல்களை யாரும் கேட்பதில்லை.

நான் கோல்கட்டா சென்ற போது, நேதாஜி நினைவுக்கு வந்தார். ஜான்சி சென்ற போது, ராணிலட்சுமி பாய் நினைவுக்கு வந்தார், இன்று இமாச்சல் சென்றபோது, போரில் வீரமரணமடைந்த விக்ரம் பத்ரா நினைக்கு வந்தார், ஆமதாபாத் திரும்பும்போது, விக்ரம் பத்ரா குறித்து நான் தெரிவித்த கருத்தை எதிர்க்கட்சியினர் திரித்து கூறியுள்ளது தெரியவந்துள்ளது. இது எனக்கு மனதளவில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்கில் போரில் வீரமரணமடைந்த விக்ரம் பத்ரா மற்றும் அவர்களின் பெற்றோர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். விக்ரம் பத்ரா குறித்து தவறான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. கார்கில் போரில் வீரமரணடைந்த வீரர்களின் குடும்பத்தினரை காயப்படுத்துவதை விட, அரசியலில் இருந்து விலகி விடுவேன்.

குடியேற்றத்தினால் என்ன தவறு என்ன மம்தாகேள்வி எழுப்பியுள்ளார். அவர்களால் மேற்கு வங்கத்திற்கு பிரச்னை ஏற்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மோடி வெற்றி பெறுவது முக்கியமல்ல. நாளை நான் சொந்த ஊருக்கு சென்று டீக்கடை நடத்துவேன். ஆனால் நாட்டிற்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதே எனது கவலை. நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு விடக்கூடாது. ஜனநாயகத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்குபவர்களுக்கும், அதை வியாபாரமாக்குபவர்களுக்கும் பார்லிமென்ட் வாசல் திறக்கக்கூடாது. நமக்கு வலுவான பார்லிமென்ட், வலுவான அமைச்சரவை, வலுவான அரசாங்கம் தேவை. வாரணாசி மீது வைத்துள்ள அன்பு சிறப்பானது. மோடியை தடுத்து நிறுத்த மூன்றாவது அணியுடன் கை கோர்க்க தயார் என காங்கிரஸ் கூறியுள்ளது. இது சதிச்செயலாகும். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களை கைப்பற்றும். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் மாயமாகின. இன்று தெற்கு பிளாக்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அப்துல்லா குடும்பத்தினரின் மத அரசியல் காரணமாக, காஷ்மீர் பண்டிட்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதுவா மதசார்பின்மை என கூறினார்.

Click Here
TAGS: