ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு : அலங்காநல்லூரில் கருப்புகொடி

jallikattuஅலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பதை தொடர்ந்து அலங்காநல்லூர் கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது. இந்த உத்தரவு அலங்காநல்லூர் உள்பட மதுரை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் என பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் தடையை எதிர்த்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தெருக்கள் தோறும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

ஜல்லிகட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் கிராம பொதுமக¢களும் தங்கள் வீடுகளிலும், ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியிலும் கருப்புக்கொடிகளை ஏற்றி வைத்து தங்கள் துக்கம், எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதேபோல் மாவட்டத்தின் பாலமேடு, அவனியாபுரம், சக்குடி உள்ளிட்ட ஊர்களிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கருப்புக் கொடியேற்றியுள்ளனர்.

ஜல்லிக் கட்டு காளைகள் வளர்த்து வரும் அலங்காநல்லூர் கோவிந்தராஜ் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜல்லிக¢கட்டிற்காக, ஆண்டு முழுவதும் ஜல்லிகட்டு காளைகளை பெற்ற பிள்ளைகளைப் போல் பேணிக¢காத்து வளர்க்கிறோம். காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.

காளைகளுக்கு சத்தான உணவு, பராமரிப்பு, பாதுகாப்பு, பயிற்சி என அத்தனை விஷயங்களிலும் தனிக்கவனம் காட்டுகிறோம். இங்கே மிருகவதை என்ற பேச்சுக¢கே இடமில்லை. இதை விலங்குகள் நலவாரியம் உணர்ந்து தமிழர்களின் உணர்வுக¢கு மதிப்பளித்து, பாரம்பரிய இந்த வீர விளையாட்டு தொடர வழி செய்யவேண்டும், என்றார்.

jallikattuAமாடுபிடி வீரர் குறவன்குளம் நாகராஜன் கூறுகையில், பத்தாண்டுகளுக்கும் மேலாக மாடுபிடி வீரராக இருக்கிறேன். வெளிநாடுகளில் காளைகளை மொத்தமாக அவிழ்த்து விட்டு ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்குவார்கள். ஆனால் வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளையை பெரும் கும்பல் வழிமறித்தாலும் தனி ஒருவர்தான் அடக்குகிறார். இதில் துன்புறுத்தல், மிருகவதை இல்லை. எதிர்பாராமல் நடக்கும் ஓரிரு சம்பவங்களுக்காக இதற்கு தடை விதிப்பது நியாயமல்ல. மாநில அரசு மீண்டும் நீதிமன்றத்தை அணுகி ஜல்லிக்கட்டை மீட்டுத்தர வேண்டும்என்றார்.

அலங்காநல்லூர் கிராம பிரமுகர் சிதம்பரம் கூறுகையில், ஜல்லிகட்டிற்கு தடை விதிக¢கப்பட்ட இந்த நாளை பாரம்பரியமிக்க ஒட்டுமொத்த தமிழர்களுக்கான துக்க நாளாகவே கருதுகிறோம். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஊர் முழுக்க கருப்பு கொடியேற்றியுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இந்த நீதிமன்றத் தடையை நீக்கவேண்டும். ஜல்லிக¢கட்டு காளைகள் இனம் மட்டுமல்லாது, தமிழர் கலாச்சார, வீர அடையாளமும் காக்கப்படவேண்டும், என்றார்.

TAGS: