உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தீவிரவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது. நக்சல் தீவிரவாதம், பிரிவினை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் போன்றவற்றை ஒடுக்க ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மிகவும் அவசியம். எனது அமைச்சகம் இதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. தீவிரவாத சவால்களை பாஜக அரசு ஏற்று அதை திறம்பட முறியடிக்கும். உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும். தீவிரவாதம், பயங்கரவாத்தை தடுக்க முந்தைய அரசு தடுக்க தவறிவிட்டது என்றார்.