மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.. இந்த விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி எம்பிக்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து உரையாற்றி வருகின்றனர்.
இந்த விவாதத்தில் பேசிய அதிமுக எம்பி தம்பித்துரை, விலைவாசி உயர்வை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மக்களவையில் பேசுகையில், உணவு உற்பத்தியை பெருக்க காங்கிரஸ் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது . விலைவாசியை குறைக்க பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளை மட்டும் குறை சொல்வதை ஏற்க முடியாது. உணவு பதுக்கல்காரர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுப்பதில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தமிழக மாடலே சிறப்பானது இவ்வாறு அதிமுக எம்பி தம்பித்துரை வலியுறுத்தி பேசினார்.