கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கடும் எதிர்ப்பு : நாடு திரும்பிய இலங்கை வீரர்கள்

சென்னையில் நடைபெற உள்ள 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை வீரர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர்.

இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கட்டுரை வெளியிடப்பட்டதை அடுத்து, இலங்கை வீரர்கள் சென்னையில் வந்து விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திறங்கிய இலங்கை வீரர்களுக்கு விமான நிலையத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இலங்கை வீரர்கள் அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றுவிட்டனர்.

TAGS: