பெரும்பான்மையான மக்களை திருப்திபடுத்தும் மோடி அரசு

narendra_modizபிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக இணையத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த மே மாதம் பதவி ஏற்றதில் இருந்து, பிரதமர் மோடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த 3 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி பாஜகவின் பொது மக்கள் பிரசார கொள்கை நிபுணர் ராஜேந்திர பிரதாப் குப்தா இணையம் மூலம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளார்.

மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டதில், மோடி அரசின் செயல்பாடுகள் எப்படி என்பது பற்றியும், பல்வேறு திட்டங்கள் பற்றியும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அந்த கருத்துக்கணிப்பின் முடிவில், 10 ஆண்டுகள் நடந்த காங்கிரஸ் கூட்டணி அரசைவிட 60 நாள் பாஜக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும், 50 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், 30 சதவீதம் பேர் தங்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் 20 சதவீதம் பேர் எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

TAGS: