“சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தைச் சேதப்படுத்த மாட்டோம்’ என்று மக்களவையில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாகவும், திட்டத்தை நிறைவேற்ற அரசு பரிசீலித்து வரும் மாற்று வழிகளை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இது தொடர்பாக கோயமுத்தூர் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் நாகராஜன் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார். அப்போது, “சேது சமுத்திரத் திட்டத்தால் பெரிய பலன் கிடைக்காது. அதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதிக அளவில் பொருள் செலவும் ஏற்படும் என்பதால் அதனைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதன் பிறகும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய அரசில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு ஆர்வம் காட்டினார். தற்போது சேது சமுத்திரத் திட்டத்தின் நிலை என்ன? அதற்கு ஏதேனும் எதிர்ப்பு வந்துள்ளதா?’ என்று நாகராஜன் கேட்டார்.
கட்கரி பதில்: அதற்கு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில் வருமாறு:
சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தை சேதப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடாது. அது மத, கலாசார உணர்வோடு தொடர்புடைய விவகாரம். எனினும், மாற்றுப் பாதையில் ராமர் பாலத்துக்கு சேதம் விளைவிக்காத வகையில், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பை ஆராய்வோம். இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அரசின் கருத்து, திட்டத்துக்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பான வாய்ப்பு ஆகியவை குறித்து நீதிமன்றத்திலேயே அரசு தெரிவிக்கும்.
மொத்தத்தில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்பதே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிலைப்பாடு. ராமர் பாலத்தின் பின்னணியில் பல்வேறு புவியியல் அம்சங்களும், மத நம்பிக்கைகளும் உள்ளன. அவற்றுக்கு பாதகமாக மத்திய அரசு செயல்படாது என்றார் கட்கரி.
தேசிய நீர் வழித் திட்டம்: முன்னதாக, தேசிய நீர் வழித் திட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த கட்கரி, “ஜல்மார்க் யோஜனா’ என அழைக்கப்படும் தேசிய நீர் வழித் திட்டத்தைச் செயல்படுத்துவதால், பயணத்துக்கு கிலோ மீட்டருக்கு 50 காசு மட்டுமே செலவாகும். ஆனால், ரயில், சாலை வழியாகச் செல்ல முறையே ரூ.1 மற்றும் ரூ.1.50 செலவாகும்’ என்றார்.
சேது சமுத்திரத் திட்டத்தின் பின்னணி: இந்தியப் பெருங்கடலில் பாக் ஜலசந்தி மற்றும் ராமர் பாலம் ஆகிய பகுதிகளை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்றும் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தேசிக்கப்பட்டு வரும் இத்திட்டத்தை நிறைவேற்றினால், இக்கால்வாய் வழியாக செல்லக் கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள், இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் வங்கக் கடலை அடைய முடியும் என்று கருதப்படுகிறது. 300 மீ அகலமும், 12 மீ ஆழமும், 167 கி.மீ. நீளமும் கொண்டதாக சேது சமுத்திரக் கால்வாய் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டது.
இத்திட்டத்தை நிறைவேற்ற சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த சோனியா காந்தி, அப்போதைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இத்திட்டம் காரணமாக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி அப்போது முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, மக்களவையில் 2007 மார்ச் மாதம் கடும் அமளியில் ஈடுபட்டது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் ராமர் பாலம் இடிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் இத்திட்டப் பணியால் டி.ஆர்.பாலுவின் குடும்பம் பயனடைவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
சுவாமியின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிப்பதற்கு 2007 ஆகஸ்ட் மாதம் இடைக்காலத் தடை விதித்தது. அதற்குப் பதிலாக மாற்று வழிகளை ஆராயுமாறு மத்திய அரசை அறிவுறுத்தியது.
இதையடுத்து, மாற்று வழிகள் குறித்து ஆராய சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில் 8 உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த அமைப்பு விரிவாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில், “சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்ற திட்டம்.
இத்திட்டத்தால் சுற்றுச்சூழல், மீன்வளம் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும். மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கக் கூடிய வருமானம் குறித்து அரசின் மதிப்பீடு அதீத நம்பிக்கை கொண்டதாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கடந்த ஆண்டு (2013) பிப்ரவரி மாதம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
சிலர் நாட்டின் முன்னேற்றத்திற்கு இடையூராக மனிதர்கள் உருவாக்கிய மதங்களை வலிய2 இழுத்து வந்து நடுவில் வைத்து விடுகிறார்கள். சமய இடங்கள் வறுமைக்கு மருந்து அல்ல. மதம் மனிதன் அடிக்கடி பண்புநெறி தவறுதலுக்கு சிலர் உண்டாக்கிய ஒரு சமூகக் கடிவாளம். சேது சமுத்திர திட்டம் போன்ற நாட்டு முன்னேற்றக் கட்டுமானங்கள் வறுமையைக் குறைக்க மிகவும் உதவும். சாமி கும்பிடுங்கள். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்காதீர்கள். சமயம் படிப்பதோடு geology போன்றவற்றையும் கற்க வேண்டும். மதத்தில் எல்லாம் உள்ளது எனும் மகான்கள் கூற்று முற்றும் ஏற்புடையதல்ல. இயற்கை எற்படுத்தியதை எல்லாம் நீங்கள் நம்பும் இறைவன்தான் எற்படுத்தியாதாக எண்ணி ஏமாறுவது உங்கள் உரிமை. ஆனால், வறுமை ஒழிக்கும் முன்னேற்றத்துக்கு, வளமான வாழ்விற்கு இடையூராக இருப்பது உங்கள் உரிமை இல்லையே. பெரும்பாலான மதங்களில் காணப்படும் தர்க்க சிந்தனைக்கு ஒவ்வாதவைகளை “உரித்து எடுத்து, எரித்தால்” அதன் பிறகு சமூகங்கள் இடையே நல்லிணக்கமும், நாட்டு முன்னேற்றமும் ஏற்படும். . சிந்திப்போருக்கு இது விளங்கும். ஆனால் சிந்திப்பது பலருக்கு மிகவும் தொல்லையான வேலை; நட்டமும் கூட. சிந்தித்தால் முனியாண்டி கோவிலில் கெடாவை உருசிக்க முடியாதே..!
நன்றாகச் சொன்னீர் க.ம.போ.
உண்மையே யானால்,மலேசிய திருநாட்டில் இனபள்ளிகள் தமிழ், சீன,அரபு பள்ளிகள் இருப்பதினால் மக்கள் ஒற்றுமை குலைகிறது யென்று புகார் அல்லது ஆய்வு சொல்கிறது,ஆகையால் இப்பள்ளிகளை புட்ரோஸ்களை கொண்டு இடித்து தள்ளிவிடலாமா அல்லது குழி தோன்றி புதைத்துவிடலாமா.இந்த திராவிட …களுக்கு ராமர் பாலத்தை இடிப்பதே லட்சியம்.ஏன் தாஜ்மஹாலை தகர்கவேண்டியது தானே,முடியாதே.சரித்திர பாலத்தை அழிக்க முடியாது.இதனால் தான் உலகமே வேடிக்கை பார்கிறது……..,நாராயண நாராயண.
கம்போ ..பிரச்சனையை அரசியலாக மாற்ற முயலாதீர்கள்..தமிழ் நாட்டு கூறு போட்டு விற்க முனைந்த கருணாநிதியும் அவரின் டீமும் அடிக்க பிளான் பண்ணிய திட்டம் தான் இது..பல மில்லியன் அச்சாரம் வாங்கி ஏப்பம் விட்டு விட்டார்கள்..பிளான் நின்றவுடன் பணத்தை செட்டல் பண்ண முழிக்கிறார்கள்..நாட்டையே விக்க முனைந்தவர்க்கு ராமர் கொடுத்த தண்டனை தான் இது…தயவு செய்து ஆராய்ச்சி யாளர்களின் கட்டுரைகளை படித்து பிறகு எழுதுங்கள்..செம்மொழி ஆராய்ச்சி என்று அந்த குடும்பமே மில்லியன் கணக்கில் செலவு செய்தது…ஒரு பைசாவுக்கவது ஒரு ஏழையின் கண்ணீரை துடைத்தா .?ஆராய்சிகள் 2 கிலோ புத்தக வடிவில் பீரோவில் உள்ளன..இதுதான் லாபம்..மட அரசியல் வாதிகளின் வாதங்கள் முட்டாள் மக்களிடம் செல்லும்…கடவுளிடம் செல்லுமா ?
அன்பர் K.ramani, தங்களின் கருத்துக்கு நன்றி. இந்த ‘இராமர்’ பாலம் குறித்த நமது இருவரின் கருத்தில் யாருடைய கருத்தில் அரசிலவாடை உள்ளது? கருத்தில் பொருத்தமான அரசியல்வாடை இருந்தால் தவறு இல்லையே..! .
அன்பு கம்போ .தவறை ஒத்துகொள்கிறேன்…ராமர் பால பிரச்சனையை துவங்கியவரின் பின்னணி தெரிய வேண்டும் அல்லவா ?.ஹிந்து கடவுளை மட்டும் குறை சொல்லும் நாத்திக வாதமும் ..அவர்களை மட்டுமே பிழிந்தெடுக்கும் இறைமறுப்பு கொள்கையும் கொண்ட மூடர்கள் 1 சமூகத்தின் சமய சினங்களை அழிக்க முனைவது சரியா என்பதுதான் கேள்வி ..எல்லா மதத்தின் எதிர்மறை சிந்தனைகளை “உரித்து எடுத்து எரிக்க ‘ நினைக்கும் உங்கள் வாதம் அப்பாவி ஹிந்துக்களிடம் மட்டும் தான் செல்லுபடியாகும்…பிற மதங்களிடமும் கை வைத்து பாருங்களேன் .!
“முனியாண்டி கோயிலில் ஆட்டு கறியை ருசிக்க முடியாது..” என்ற உங்கள் கருத்து .அநாகரீகத்தின் உச்சம்…வானத்தை பார்த்து எச்சில் உமிழ்வது சரியா ?
திராவிடர்க்கு ஆண்மீகத்தை/தெய்வீகத்தை/கலை கலாச்சாரம்/பன்பாடு/அடக்கம்/ஒழுக்கம்/தீவினை அச்சம் போன்ற நற்பன்பை ஒழித்து சீர்கெட்ட சமுகமாக நம்மை உலகுக்கு அடையாலம் காட்ட சீர் திருத்தம் போன்ற வசனங்கள் பேசி மலேசிய தமிழர்கள் மணதிலும் விஷத்தை விதைக்க துணிந்துவிட்டனர்.கடவுள் மீது நம்பிக்கை வைத்தல்,நம் ருக்குன் நெகாராவின் முதல் கோட்பாடென்பதை மறந்து பேசுகின்றனர்.ராமர் பாலம் ஹிந்துக்களின் சரித்திர சின்னம்,அதை அழிப்பதே தேசிய கொள்கையாக கொண்டவன் திராவிடன்.வெள்ளையன் போல் வாழ அதாவது ஆதிகுரங்காக வாழ நம் 6,அறிவு மணிதனை அவன் இனத்துக்கு கொண்டு செல்ல பல திட்டம் போட்டு கெடுத்துக்கொண்டுருக்கான்.நாராயண நாராயண.
..காயீ, உங்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தே தப்பு என்றும்..தமிழை காட்டு மிராண்டி மொழி என்றும் நக்கல் அடித்த கன்னடத்து ஈ .வே.ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரை வாழ்க்கை வழிகாட்டியாய் கொண்டவர்கள் அல்ப தனமாய் தான் இருப்பார்கள்.பன்றி கறியை தின்ற கண்ணப்பனை நாயன் மார்களில் ஒருவராக வைத்து வணக்கியவர்கள் நாம்..2500 வருடங்களுக்கு முன்பே பாகு பாடு இன்றி வாழ்ந்த சமுதாயம் நாம். இன்று ஜாதி தீயை ஏற்றி வைத்து அரசியல் விளையாட்டு ஆடும் விஷம் கக்கும் பாம்புகள்.
சில வருடங்களுக்கு முன் மிகவும் பரபரப்பு ஏற்ப்படுத்திய ஒரு பிரச்சினை ராமர் பாலம் . சேது சமுத்திர திட்டத்தை தொடர விடாமல் செய்த பிரச்சினை. பிரச்சினைக்கு காரணம் அங்கே ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படுவது. வடநாட்டு சாதுக்கள், சாமியார்கள், சாதுக்களால் பதவியை பிடித்த அரசியல் கட்சிகள் அங்கே ராமர், பாலம் கட்டிய இடம் என்றும் அங்கே எந்த தூர்வாரளும் நடக்ககூடாது என்றும் சேது சமுத்திர திட்டத்தை செய்ய விடாமல் தடுத்தனர். பிறகு அந்த பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்று இறுதியில் அங்கே எந்த பாலமும் இல்லையென்றும் சேது சமுத்திர திட்டத்தை தொடரலாம் என்று நீதிபதிகள் அறிவித்தும் அந்த சாதுக்கள், சில அரசியல் கட்சிகள் அதை ஏற்காமல் பெரும் பிரச்சினை செய்தது அனைவருக்கும் தெரியும். ராமர் கட்டியதாக சொல்லப்படும் அந்த பாலம் ஒரு வேலை உன்மை என்று வைத்துக்கொள்வோம். அப்படி உன்மையாகவே ராமர் பாலம் கட்டியிருந்தால் வியாசர் சொன்ன ராமாயணப்படி ஒரு அடிப்படை ( லாஜிக் ) கேள்வி ஒன்று எழுகிறது. இங்கே நான் சொல்லப்போகும் அந்த அடிப்படை ( லாஜிக் ) கேள்வி தான் இந்த பதிவு. அந்த அடிப்படை கேள்விக்கு போவதற்கு முன் ராமர் எதற்காக, யாரை எல்லாம் வைத்து ராமர் பாலம் கட்டினார் என்று பார்ப்போம்.
வியாசர் சொன்ன கதைப்படி ராவனாசுரன் , சீதையை கடத்திக்கொண்டு இலங்கைக்கு செல்கிறான். ராமர் சீதையை விடுவிக்க வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருகிறார். இங்கே நம் முன்னோர்களெல்லாம் குரங்கு மனிதர்களாக இருக்கிறோம். இதை நான் சொல்ல வில்லை, ராமாயணத்தில் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே வந்து அனுமார் உதவியுடன் பெரும் படை திரட்டுகிறார் ராமர். இறுதியாக இங்கிருந்து இலங்கைக்கு செல்ல பாலம் அமைக்க முடிவு செய்கிறார்.
பாலம் கட்டுவதற்கு முன்னாள் அந்த பெரும் படையில் ஒருவரை பற்றி இங்கே சொல்லவேண்டும். அவரும் ஒரு குரங்கு மனிதன். அவர் சிறு வயதில் வீட்டில் இருக்கும் அணைத்து பொருள்களையும் கொண்டு சென்று கடலில் போட்டுவிடுவான். இதனால் அவர் தந்தை அவனுக்கு ஒரு சாபம் தருகிறார். அது என்னவென்றால் அவன் இனி எதை நீரில் போட்டாலும் அது மூல்கக்கூடது என்பது. அதாவது அவன் எதை கடலில் போட்டாலும் அது மிதக்கவேண்டும். மூல்கக்கூடாது. இவரைத்தான் ராமர், பாலம் கட்டுவதற்கு உபயோகபடுத்துகிறார். அதாவது முதல் கல்லை தண்ணீரில் போடுவார். அது மிதக்கும். பின் அதில் ஏறிக்கொள்வார், அடுத்த கல்லை போடுவார் அதுவும் மிதக்கும். இப்போது அவர் இரண்டாவது கல்லின் மேல் ஏறிக்கொள்வார். பின்னால் வருபவர் முதல் கல்லில் ஏறிக்கொள்வார்கள். அதன் பிறகு மூன்றாவது கல்லை போட்டு இவர் அதில் ஏறிக்கொள்வார். இப்படியாக இலங்கைக்கு சென்றதாக கதை. இது எங்களுக்கு தெரியுமே நீ என்ன சொல்ல வந்தாய் அதை சொல்லிதொலை என்கிறீர்களா. பொறுமை கோபப்படாதீர்கள்.
ராமர் பாலம் கடலுக்கு அடியில் உள்ளது என்றும், அதனால் சேது சமுத்திர திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் சாதுக்கள், சாமியார்கள், சில அரசியல் கட்சிகள் பிரச்சினை செய்தது. இன்னும் ஒரு படி மேலே சென்று நாசா எடுத்த புகைப்படத்தில் ராமர் பாலம் தெரிந்ததேன்றும் சொன்னார்கள்.
இப்போது அந்த அடிப்படை (லாஜிக் ) கேள்வி. ராமர் உண்மையாக பாலம் கட்டியிருந்தால் அந்த பாலம் இப்போதும் கடலுக்கு மேல் இருந்து இருக்கவேண்டும் . ஏன் என்றால் , பாலம் கட்ட ஒவ்வொரு கல்லையும் போட்டவருக்கு அதுதானே சாபம். அவர் எந்த பொருளை போட்டாலும் அது கண்டிப்பாக மிதக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் மூல்கக்கூடாது. இதுதான் நான் சொன்ன அந்த அடிப்படை ( லாஜிக் ) கேள்வி. இதற்க்கு உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
வந்த சுனாமி எல்லாம் கல்லை இஜோக்கில் கொண்டு வந்து போட்டு விட்டதோ?
இந்த நாட்டில் ஒர் இளைஞர் தலைவர் நம்மைப்பார்த்து கருங்குரங்குகள் என்று சொன்னபோது தமிழர்கள் இந்நாட்டில் பொங்கினார்கள்.( இன்ராப் பேரணியைப் பார்த்து).
இராமாயாணத்தில் தமிழர்களைத்தான் குரங்குகள் என்று நம்முடைய கருப்பு நிறத்தைப் பார்த்து அந்த ஆரிய வெள்ளைக் குரங்கு எழுதி வைத்துள்ளது. ஆனால் நம்மவர்களுக்குக் கோபமே வரவில்லையே தேனீ!
ராமாயணம் ஒரு கற்பனை காவியம்.அது நம் தமிழர்களின் வாழ்வில் ஒற்றுமையை ஏற்படுத்தியதா என்பது கேள்விக்குறி .இல்லாத ஒரு பாலத்தை இருப்பதாக கதை கட்டி தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவித்துள்ளார்கள் .இதிலிருந்து மீள தமிழன் உணர்வால் ஒன்றுபட வேண்டும்.
“பன்றி கறியை தின்ற கண்ணப்பனை நாயன் மார்களில் ஒருவராக வைத்து வணக்கியவர்கள்” என்று சொல்லும் அன்பரே, தாயை இழந்து தவிக்கும் பன்றிக் குட்டிகளுக்கு எம்பெருமானே தாயாக உருவெடுத்து வந்து பாலூட்டியதை அறியாயோ?. அந்த அன்பின் மகத்துவத்தை அறியாயோ?. கண்ணப்பரை அந்த குடுமித் தேவர் ஆட்கொண்ட பிறகு, அன்பின் பெருக்கால் தன் கண்ணையே பெயர்ந்து அந்த இலிங்கத்திற்கு அர்பணித்த அன்பினை அறியாயோ?. இறைவனின் அன்பை உணர்ந்து செயல்படுபவனுக்கே எம்பெருமான் அவன் உயிருடன் உடனாய் இருந்து அருள் புரிவான். அதை விடுத்து க.ம.போ. சொன்ன மாதிரி வறுமையைக் குறைக்க உதவும் செய்கையை இல்லாத பாலத்தை சொல்லி மதத்தை வளர்ப்பவர்களுக்கு எம்பெருமான் அருள்பாலிக்க மாட்டான். “ஆதிபராசக்தி” – யில் சுருளிராஜனும், நம்பியாரும் செய்த பூஜைகள் மாதிரிதான் இருக்கும்.
தமிழனை “ஆதிகுரங்கு” என்று வசனம் பேசும் அது, புத்தி அளவில் குரங்காய் இருப்பதால்தானே அந்த குரங்கு புத்தி எல்லா இடத்திலும் குறுக்கே வந்து நிற்கின்றது.
அன்பு திராவிடர்..” தமிழ் ” என்ற சொல் திருக்குறள்லில் எங்குமே இல்லை..அதனால் அது தமிழ நூலே அல்ல என்று சொல்ல முடியுமா ?வாலிமீகி எழுதிய காவியத்தை பல்வேறு புலவர்கள் மொழியாக்கம் செய்துள்ளனர்..இன்னமும் உங்கள் நாத்திக தலைவர்களின் பேச்சையே நம்பி மோசம் போகாதிர்கள் .நல்ல கண் கொண்டு பார்க்க முயலுங்கள்..நமது இதிகாசங்களை இனியும் பகடி செய்வதை விடுங்கள்..இதே வேகத்தில் மற்ற மத கதைகளிலும் மூக்கை நுழைத்து பாருங்கள்..ராமர் புகழை பாடிய எங்கள் வம்சாவழி வால்மீகி ,விவேகானந்தர் ,ராமானுஜர் போன்ற மகான்களை நாங்கள் நம்புகின்றோம்..இதனால் எமக்கு 1 நஷ்டமும் இல்லை..எவன் குடியையும் கெடுக்கவும் இல்லை…ஈ வே ராமசாமி நாயக்கர் காலம் தொட்டு இதே பழைய ராகமே தானா? புதிதாய் சொந்தமாக ஏதாவது சொல்லுமையா..பொழுது போகும்…
உவமை என்பது ஒட்டி வர வேண்டும்! திருக்குறளையும், ராமாயணத்தையும் ஒட்டுவதற்கு சம்பந்தம் இல்லை.
கே.ரமணி அவர்களே… வால்மீகியைப் படித்து விட்டு பிறகு பதில் எழுதுங்கள். ஒரு இதிகாசத்தை மொழிபெயர்க்கும்போது கதை மாறாது ; கதாபாத்திரங்கள் மாறக்கூடாது. அதுதான் மொழிபெயர்ப்பு. நீங்கள் சொல்வதைப்போல் அவரவர் விருப்பத்திற்கு ஜோடித்து எழுத முடியாது.எழுதவும் கூடாது. ஆகவே பதில் வரவில்லை என்றால் விட்டு விடுங்கள். சும்மா நாத்திகனைக் குறை சொல்லி தப்பிக்காதீர்கள். வரிக்கு வரி வால்மீகி ராமாமணத்தில் உள்ளதை எழுதினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். ஒருவன் ஒரு கேள்வி எழுப்பினால் அக்கேள்வி ஆத்திகனிடமிருந்து வருகிறதா? நாத்திகனிடமிருந்து வருகிறதா? கிறிஸ்தவனிடமிருந்து வருகிறதா? சைவனிடமிருந்து வருகிறதா? முஸ்லீமிடமிருந்து வருகிறதா? என்றெல்லாம் பார்க்கக்கூடாது. உண்மையாளன் உண்மையான பதில் எழுத வேண்டுமே தவிர ” இதிகாசங்களைப் பகடி பண்ணாதீர்கள் ” என்று திருப்பி எங்களுக்குப் புத்தி சொல்லாதீர்கள். நாத்தகன் சொன்னது என்பதால் காழ்ப்பணர்வு கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பினால் அது உங்கள் தனிப்பட்ட விவகாரம். தங்தை பெரியாரை சீண்டாதீர்கள். அவருடைய கேள்விகளுக்கு பதில் இருந்தால் கொடுங்கள். இல்லை எனில் மௌனம் காத்திடுங்கள். நாங்கள் எவன் குடியையும் கெடுக்கவில்லை. எங்கள் குடியைத்தான் கெடுக்க உங்களைப் போன்றவர்கள் சேது கால்வாயை ஆழப்படுத்த முற்பட்டபோது அது எங்கள் ராமன் கட்டிய பாலம் என்று தமிழ் நாட்டுத் தமிழனின் குடியைக் கெடுக்க அரசியல் ரீதியாக சுப்பிரமணியசுவாமி போன்றோரைப் பக்க உதவிக்கு வைத்துக்கொண்டுள்ளீர்கள். தமிழனுக்கு , உண்மைத் தமிழன் எவன் குடியையும் கெடுத்து வாழ மாட்டான். அது அவனுடைய பண்பும் அல்ல. குடி கெடுப்பவனாக இருப்பின் ஆரியனை தமிழ் நாட்டுக்குள்ளேயே விட்டிருக்கமாட்டான்.
தமிழருக்கு தன் இனத்தின் மீது உள்ள அக்கரையைவிட வெங்கட ராமசாமி நாயக்கர் மீது கொண்டது பெரிது.இவர்களை இன்றுவறை அன்னியரே ஆழ்கின்றனர்,கேட்டால் வந்தவறை வாழவைத்த தமிழகமாம்.ரஜினி காந்த் பாட்ஷாவில் சொல்வார்,ஜப்பான் காரன் வேளை செய்லேன்னா செத்துருவான்,ஆனா தமிழன் பேசலன்னா செத்துருவான் இதுக்கு பெரிய கைதட்டு,எது கேவலம் எது கௌரவம் என்று பிரித்துகூட பார்க தெரியாத ஜன்மம்.பழக்கடையில் ஒரு மாம்பழம் வாங்கினேன் வெட்டிபார்தால் பூச்சடித்து இருந்தது,போய் கேட்டால்,பூச்சடிச்ச பழம் சுவையான பழம் கிடைப்பதரிதாம்,நானும் அந்த அரிய பழத்தை அவாளிடமே கொடுத்துவிட்டு மாற்று பழம் பெற்று திரும்பினேன்.என்று திருந்தும் தமிழகம் நாராயண நாராயண.
எங்கள் ராமரை சீண்டும் தகுதி பதவி சுகம் கொண்ட சாதாரண 1 கட்சி தலைவர்களுக்கு இருக்கும் பொது..ஈ வே ராமசாமி நாயக்கரை குறை சொல்ல தகுதி அவசியமா ? வேண்டாம் ! திராவிட தலைவர்களின் வீட்டு பெண்கள் எல்லாம் கோவில் – யாகம் என கிளம்பி வெகு நாளாகி விட்டது திரு திராவிடன் சார்.. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் ?பாவம் சார் நீங்கள் ….!
ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தைச் சீண்டிப்பார்க்க தகுதியை எதிர்பார்க்கும் தாங்கள் உயிராய் கோடி கோடி பேர் பார்க்க தமிழனுக்காகவும் பகுத்தறிவாளனுக்காகவும் வாழ்ந்த ஒரு மனிதனைப் பற்றி பேச நிச்சயம் தகுதி வேண்டும்.
// திராவிடப் பெண்களெல்லாம் கோயில் யாகம் என்று கிழம்பி வெகு நாளாகிவிட்டது. நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?\\
இது உங்களின் கேள்வி. கேள்வியிலிருந்தே உங்களின் ஞானம் எப்படிப் பட்டது என்று வெளிச்சமாகிவிட்டது. வள்ளுவர் சொல்லுவார், கற்றோர் சபையில் அறிவில்லாதவர் வாய்மூடி இருக்க வேண்டும். வாயைத் திறந்து எதையாவது பிதற்றினால் அறிவின்மையை தன் வாயே காட்டிக்கொடுத்துவிடுமாம். அது போல் நீங்களும் உங்களைப் பற்றி உங்களின் ஞானமற்றப் பதிவுகளால் வெளிப்படுத்துகிறீர்கள். 1) திருக்குறளில் எங்குமே தமிழ் என்னும் சொல் இல்லை என்றீர்கள். “என்ற ” என்று எழுதுவதே பிழை என்பதுகூடத் தெரியாத தங்களோடு வாதிடுவது சரியா என்று யோசிக்கிறேன். வால்மீகி ராமாயணத்திற்கும் திருக்குறளில் தமிழ் எனும் சொல் இல்லாததற்கும் என்ன சம்பந்தம்?
பெரியார் இராமயணத்தை சீண்டிட காரணம் இருக்கிறது. பெரியார் எவரையும் தேவைஇல்லாமல் சீண்டமாட்டார். அவர் என்ன வேலையில்லா வேலையில்லா வெட்டிப் பயலா? தமிழனை, தமிழினத்தை, அவன் பண்பாட்டை, அவன் கலாச்சாரத்தை இதிகாசம் எனும் பெயரில் தரக்குறைவாகச் சித்தரித்தால் அதைப் பார்த்துக்கொண்டு வெறுமனே விரலைச் சப்பிக்கொண்டிருக்க மற்றப் பண்டாரத் தமிழனைப்போல மானம் ரோசம் இல்லா மக்குச் சாம்பிராணியல்ல தந்தைப் பெரியார் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உங்களப் போன்ற கத்துக்குட்டிகள் தயவுசெய்து பெரியாருக்குப் பாடம் நடத்த முயற்சிக்காதீர்கள்.அவர் காலத்தில் படித்த பெரும் புலவனையெல்லாம் புறமுதுகிடச் செய்தவன் ஈரோட்டு சிங்கம். நீர் எல்லாம் அவருடைய மொழியில் சொன்னால் வெங்காயம். எனக்குப் பாவப்படும் உங்களைப் பார்க்க எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.
உங்களின் எழுத்தைப் படித்தபோது எனக்குப் படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. நியேட்ச்சே எனும் ஜெர்மானிய சிந்தனையாளன் சொன்னான், “உலகத்தில் ஓர் இயேசுதான் இருந்தான். அவனும் சிலுவையில் மரித்துப்போய்விட்டான்”. இதை மேம்போக்காகப் படித்த பல முட்டாள்களுக்குக் கோபம்தான் வந்தது. உண்மையில் நியேட்சே என்ன சொல்ல வந்தான் என்றால் ” உலகத்தில் ஒரே ஒரு புனிதன்தான் இயேசு என்று இருந்தான். அந்த பாவமில்லா உத்தம பிறவியும் சிலுவையில் மரித்தான்.” என்றே அர்த்தமுள்ள வார்த்தைகளால் பதிவு செய்தான். அது போல இன்று பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவர்போல பகுத்தறிவுடன் வாழ விரும்பி வாழும்போது அவனிடம் குறைகள் தென்படலாம். அல்லது அவனது பெண்கள் அவனது கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் நீர் சொல்வதைப்போல் கோயிலுக்குப் போகலாம். மடத்தனமாக யாகம்கூட செய்யலாம்.(உங்களுக்கு இங்கே கோபம் வரக்கூடாது. ஏன் என்றால் பூநூல் சாதுகள்.) அதை வைத்து பெரியார் கொள்கையை எடை போடக்கூடாது. இப்போது மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இனி வருங்காலத்திலும் பண்டாரத் தமிழனும் தமிழச்சியும் இருக்கத்தான் செய்வர். அவர்களைச் சலிப்படையாமல் பகுத்தறிவு நிலைக்கு முன்னெடுக்கும் பெரியார் தொண்டனும் இருக்கத்தான் செய்வான். அவன் தான் தோற்றுவிட்டதாக எண்ணம் கொள்ளமாட்டான். இது உங்குக்குப் புரியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இதை வாசிக்கும் திராவிடத் தமிழனுக்காவது புரியட்டும் என்றே பதிவிடுகிறேன்.
ஐயா ரமணி, பெரியாரே தன் சாதி பெயரை குறிப்பதில்லை.. ஆனால் நீங்கள் வரிக்கு வரி அவரின் சாதி பெயரை குறிப்பதிலிருந்தே :தெரிகிறது உங்கள் கோணல் புத்தி! எங்களுடைய அண்ணன் ,தம்பி, மாமன் ,மச்சான், சித்தப்பன் ,பெரியப்பன் இப்படி எல்லாருமே இந்து சமயத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் சமயம் தொடர்பான குறைகளை , குளறுபடிகளை, மடத்தனங்களை நாங்கதானே கண்டிக்க முடியும். ஏனெனில் அவர்களில் யாரும் அப்துல்லாகவோ,அந்தொனியாகவொ இல்லையே. இருந்தால் அங்கேயும் இதைதான் செய்வோம். கலைஞர் ,மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுதான் பெரியாரின் வாரிசு என்று நீங்கள் கருதினால் ….; நான்கு பார்வை அற்றவர்கள் யானையை தடவி பார்த்து முடிவிற்கு வந்த கதை போல்தான் இருக்கும் .
அப்பா ரமணி! ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்று சொல்லுவதிலிருந்தே உங்களின் காழ்ப்புனர்ச்சித் தெரிகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த ராஜாஜியை யாரும் ராஜகோபலாச்சாரி என்று சொல்லுவதில்லை. காமராஜரை, காமராஜ நாடார் என்று சொல்லுவதில்லை. அதெல்லாம் பெரியவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. பக்தி இலக்கியத்தில் பண்டிதராக இருக்கும் நீங்கள் இந்த அளவுக்குக் கீழே இறங்க வேண்டியதில்லை!
ரமணி அக்கா ,நீங்கள் வெங்காயம் என்பதை உங்கள் கருத்தால் திராவிடனிடம் கூறி ஒத்துகொண்டீர்கள் ,தந்தை
பெரியாரின் கொள்கை பின் பற்றும் நானே (நான் திராவிட கழகத்தை சேர்ந்தவன் அல்ல ) திராவிடனுக்கு கால் தூசி
போன்றவன் ,அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் கொள்கைகளை தெரிந்து அறிந்து வைத்துள்ளார் அவரிடம்
மோதி மூக்கை உடைக்கலாமா அக்கா ரமணி, இறை மறுப்பு என்பது எல்லோராலும் செய்ய
முடியாது அதற்கு முதலில் மதத்தை பற்றிய ,கடவுளை பற்றிய முழுமையான தெரிவு பெறவேண்டும் அதன் பின் தான் இறைமறுப்பை செய்வார்கள்.
ஆசிரியரே இங்கே திராவிடன் புகழ்கிறாரா விமர்சிக்குறாரா ?,வேளையில்லா வெட்டிபயல்,மக்கு சாம்பிராணி,உண்மையை தானே சொல்கிறார்.ஆசிரியரே வெங்கட ராமசாமி நாயக்கர் ஐந்தே வருடம் அதாவது ஐந்தாம் வகுப்பு வறையே பள்ளிக்கு சென்று பயின்றதாய் திராவிடன் என்ற தமிழன் சொன்னார்,திருக்குறளில் குறள் சொல்கிறது:கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார் அதாவது,கல்வி கற்காதவனுக்கு இயறகையாகவே அறிவு இருந்தாலும்கூட,அவனை கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் தெரியுமோ வோய்.நாராயண நாராயண.
ஐந்தாம் வகுப்பு படித்தவனுக்கு எழுத்துகளைப் பற்றியும் மொழியைப் பற்றியும் தெரியும். அனுபவ அறிவும், வாசிப்பு அறிவும் அவனை எங்கோ உயர்திவிடும். இந்த ஐந்தாம் வகுப்பு படித்த மாணவனாம் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் அறிவுலம் ஏற்றுக்கொண்டது என்பதை பழுக்காத காயீ புரிந்து கொள்ளவேண்டும். இந்த ஐந்தாம் வகுப்புக்கே பதில் சொல்ல முடியாமல் புறமுதுகிடும் வைதீகம் என்ன வைதீகம் என்பதை யோசிக்கவில்லையா? அல்லது எண்ணிப்பார்க்க இதயம் பக்குவப்படவில்லையா?
நீங்கள் மெச்சும் மத நூல்களை எழுதிய புராணப் புழுகர்கள் எந்தப் பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டதாரியானார்கள்? அவர்களின் பிதற்றல்களும் மரத்தடிப் பள்ளியில் படித்த சரக்குதானே? அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்தும் தினம் தினம் முகத்தில் ஒற்றிக் கொள்கிறீரே அப்போது எங்கு போனது கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடையார் எனும் குறள்? கேள்வி கேட்கக்கூட அறிவு வேண்டும் காயீ. பிதற்றுவதெல்லாம் கேள்வியாகாது. நீங்கள் குறிப்பிடும் வள்ளுவரே கற்றது பல்கலைக்கழகமல்ல. அப்போது வள்ளுவன் படிக்காதவனா? அப்படி என்றால் குறளை ஏற்றுக்கொள்ளமாட்டீரோ? ஏற்றுக்கொள்ளமாட்டீரென்றால் குறளைக்கொண்டு பெரியாரை தாக்க வரலாமா? இதிலிருந்து என்ன தெரிகிறது? நீர் ஒரு ஆடத்தெரியாதவர். வீதி கோணல் என்கிறீர். கல்வி என்பதும் கல்லாமை என்பதும் உண்மையில் எதைக் குறிக்கிறது. யாருக்கு எழுதப்பட்டுள்ளது என்பதையெல்லாம் முழுமையாக ஐயமற தெளிந்த பின்பு குறளை எடுத்தாளுங்கள். கருத்தையே பிழையற புரிந்து எழுதத்தெரியாத காயீ , இனி வள்ளுவன் போன்ற ஆழ்பொருள் அறிஞர்களின் எழுத்துகளுக்கு விளக்கம் சொல்வதற்கு முயற்சிப்பது மயிலாடுவதைப் பார்த்து வான்கோழியும் சிறகை விரித்து ஆட விரும்பியதற்கு ஒப்பாகும் என்பேன். உமக்கு ஒரு குறள்” கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்”
ஒருவன் எத்தனையாவது வகுப்பு வரை படித்தான் என்பது முக்கியம் இல்லை , வள்ளுவர் கூறியது கல்லாதவனை ,தந்தை பெரியார் கற்றவர் , 5ஆம் வகுப்பு படித்தவரும்
கற்றவர் தான் ,உயர் கல்விவரை படித்தவரும் கற்றவர்தான்
குறள்.430 அறிவுடையார் எல்லாம் உடையார் , அறிவு இலார்
என் உ டையரேனும் இலர் . = அறிவுடையவர்கள் எல்லாம் உடையவராவார் , அரிவுஇல்லதவர் மற்ற எல்லாப் பொருள்கள் இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவார் .குறள் 401. அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல் .= நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் ஒருவன் அறிவுடையோர் சபையில் சென்று பேசுதல் அரங்கம் இல்லாமல் வட்டாடுதல் போன்றதற்கு ஒப்பாகும் .என்று வள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார் .தந்தை பெரியார் 5ஆம் வகுப்பு படித்தாலும் நிறைய அறிவு தரும் நூல்களை படித்து அறிவாளியாக திகழ்ந்த்தால் தான் அறிஞர் அண்ணா,பேராசிரியர் ,நெடுஞ்செழியன் இன்னும் பல தமிழ் அறிஞர்கள் பெரியாரின் கருத்தை ஏற்று கொண்டனர் . பெரியாரை பற்றி உங்களை போன்ற அறிவிலிகள்
கருத்துகளை தொடரந்தால் திராவிடன் அண்ணா , தேனீ அக்கா , ஆப்ர்காம் தேரே ஆகியோர் உம்மை வார்த்தைகளால் சுட்டு எரித்து விட போகிறர்கள் ,அவர்களிடம் இருந்து kayye நீங்கள் தப்பிக ஒரு வழிதான் உண்டு ,நீங்கள் அண்மையில் தான் மன நோய் மருத்துவமனையில் இருந்து பேர் வெட்டி வீடு வந்தீர் என்று சொல்லுங்கள் அவர்கள் உங்களை மன்னித்து விடுவார்கள் , நாமும் போயும் போயும் ஒரு கிருகனுக்கு பதில் சொல்லவேண்டிய நிலை நைனா .
ஈ வே ராமசாமி நாயக்கர் என்பதுதானே அவர் உண்மை பெயர் ?இதிலென்ன மரியாதை குறைவு ;? காழ்புணர்ச்சி ? அவன்-இவன்-எவன்-என தன் எழுத்து முழுமையும் தமிழனை ஏக வசனத்திலேயே பேசியது உங்களுக்கு நியாமாக படுகிறதா? நான் ஞானமில்லாத ஆள்தான்..விநாயகர் சிலைகளை உடைத்தது..ராமர் சிலைக்கு செருப்பு மாலை போட்டது ..ஆன்மீகவாதிகள் உயிரென கருதி வணங்கும் தெய்வங்களை ஏக வார்த்தையில் திட்டுவது உங்களுக்கு பராம்பரிய வழக்கமோ ? இதைதான் சீர்திருத்தம் ; பகுத்தறிவு என்பார்களோ ?நீங்கள் திராவிடம்;பகுத்தறிவு என்ற ஒரு 1 வளையத்தில் சிக்கி வெளியே வர இயலாமல்..வேறு வழியின்றி பதிலளிப்பது போல் உள்ளது..சற்று பழைய பஞ்சாங்க கூண்டை உடைத்து வெளியே வாருங்கள் ஐயா..
காஞ்சிப் பெரியவரைக்கூட அவருடைய உண்மைப் பெயரைச் சொல்ல நமக்குச் சங்கடமாகத் தான் இருக்கும். ஆனாலும் அவர் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. இதெல்லாம் நமது வளர்ப்பு முறையைப் பொறுத்தது. பெரியவர்களுக்கு மரியாதை என்பது பரம்பரையாக வருவது. நன்றி!
காஞ்சிபெரியவர் ஒருவரையும் மனம் கோணும்படி எழுதியோ ;பேசியோ இதுவரை நாங்கள் கேட்டதில்லை..இவர் மட்டுமல்ல,,இந்து மத பேச்சாளர்கள் எவரும் தன மத எதிரியை கூட ஏகவசனத்தில் பேசியதில்லை..அப்படி பேசினால் அது கண்டிக்க பட வேண்டிய ஒன்றே…கே.ரமணி சொல்வதில் என்ன தவறு ?.
ரமணி அக்கா ,தந்தை பெரியாரின் சீர்திருத்த கொள்கையை
புரிந்துகொள்ளாமல் நீங்கள் கூறுகிறீகள் ,தந்தை பெரியார்
விநாயகர் சிலையை உடைத்தார் என்று கூறுகிறீர்கள் ,நான்
மறுக்க வில்லை ,ஆனால் உன்னுடைய கோயிலிருந்து எடுத்து வந்த சிலையை உடைத்தார ? தானே காசு போட்டு
ஒரு விநாயகர் சிலை யை பொது மக்கள் முன் போட்டு உடைத்தார் ,எதிர்க்காக உடைத்தார் ,இங்கே தான் அறிவாளி
கேட்பான் ,அறிவு இல்லாதவன் ஐயோ பெரியார் விநாயகர்
சிலையை உடைத்து விட்டார் என்று கூறுவான் ,தந்தை
பெரியார் சிலைகளில் ஒன்றும் இல்லை என்று கூறியும்
நம்பாத உங்களை போல உள்ள அறிவிலிக்கு தெரிவிக்கவே
தான் காசு போட்டு வாங்கிய விநாயகர் சிலையை போட்டு
உடைத்து காண்பித்து இப்போ பாருங்கள் இந்த சிலையில்
இருப்பது வெறும் களிமண் என்று கூறினார் புரியுதா ரமணி அக்கா .
விநாயகர் சிலையை தானே காசு கொடுத்து வாங்கி சிலையில் ஒன்றும் இல்லை என்று “அறிவிலிக்கு”உணர்த்த வேண்டிதான் ஈவே ராமசாமி நாயக்கர் அதை உடைத்தார்..அந்த பூசி மெழுகிய “கட்டு கதையை நம்புகின்றோம்..நோக்கம் என்ன ? சிலைகளை வணங்குவது மூடத்தனம் என்று வெங்காயங்களுக்கு விளக்க..ஒப்பு கொள்கிறேன் ..
ஆனால் ..ஆண்டுமுழுவதும் ஈவே ராவின் திவசத்தை நினைவு நாளாக மாற்றி அவரது சிலைகளுக்கும்-போட்டோவுக்கும் -சமாதிக்கும் போய் மாலை சாத்தி கன்னத்தில் போட்டுகொள்கீர்களே ?..அந்த சிலையிலும் சமாதியிலும் உங்கள் பகுத்தறிவு குரு களிமண்ணாக இருக்கிறாரா ? ஏன் ? அந்த நாளை அமைதியாக வீட்டிலேயே செய்தால் ஈவே ரா ஏற்று கொள்ளமாட்டரா ? வெங்காயம் ..வெங்காயம்.எதை சொன்னாலும் மறுத்து பேசாமல் கூனி குறுகி-பகுத்தறிவை இழந்து சீர்திருத்தம் பேசினால் இந்த கதிதான்..அறிவிலி நீங்களா ? நாங்களா ?
2014 லும் தங்க தமிழகத்தில் கிராமங்களில் ஜாதிகொரு கிணறு…கடைகளில் ஜாதிகொரு குவளை …உலகில் படிப்பறிவில்லாத மாக்கள் அதிகம் வாழும் இந்திய நாட்டில் தமிழா நாடு முதலிடம் ..குடி ,கொலை இவற்றிலும் முதல் இடம் ..பெரியார் உழைத்த பணத்தில் வாழ்வது வீரமணி என்ற கோமாளி ..ஆக இந்த பெரியாரல் எந்த மாற்றமும் ஏற்ட்படவில்லை …
இந்து தர்மனே, பெரியார் மீது கொண்ட அன்பினால் , நன்றியினால், ஆண்டுதோறும் மரியாதை செய்கிறார்கள் அவரது தொண்டர்கள். இதுதான் உண்மை. நீங்கள் சொல்வதுபோல் கன்னத்தில் யாரும் போட்டுக்கொள்வதில்லை .ஆனாலும் உங்கள் கருத்து சிந்திக்க வேண்டிய ஒன்றுதான். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள் .பகுத்தறிவுக்கு பொருத்தமான கருத்தை யார் சொன்னாலும் ; ஏற்றுக்கொள்ள தயாராய் இருக்கிறோம்.
மாற்றம் இல்லை சொல்லாதீர்,ஜாதியை பதிவு செய்தவனே திராவிடன் தான்,அன்று இனித்தது இன்று கசக்குதோ பேஸ் பேஸ்,வேதங்களை,புராணங்களை கொழுத்தும் போது வேடிக்கை தானே பார்த்தீர்.வாழ்க நாராயண நாமம்.
என்ன வேதங்களையும் ,புராணங்களையும் கொளுத்தும் போது
என் தமிழன் வேடிக்கை பார்த்தானா ,இப்போதாவது தெரிஞ்சுக்கோ காஇ அப்பதே என் இனம் அறிவுக்கு வேலை கொடுத்துள்ளது ,அந்த செய்தியை சொன்ன காய் உனக்கு
நன்றி ,நைனா
நடிகவேள் எம் ஆர் ராதா ஒருமுறை சொன்னார் ..” எவண்டா சாமி கும்பிடாம இருக்கான் ?நாங்கள் எல்லாம் வெளியே சாமி இல்லேன்னு தான் பேசுவோம்..ஆனா வீட்டிலே பெண்களை பூஜை செய்ய விட்டிடுவோம்..பிழைப்பு தொடரனும் இல்லே ? அவன் அவனுக்கு அவன் பிரச்னை…சும்மா கிடக்கிற அந்த பயலை சும்மா கிண்டி விட்டாதான் சீர்திருத்தவாதியான எங்க பொழைப்பு நடக்கும்,,,” அட ராமா !
எம்.ஆர். ராதா இன்னொன்றும் சொன்னார்! ” சரசுவதியும்,”காகிதத்தை பற்றியும், அதை மறந்துவிட்டீர்களா?
புரிந்து கொண்டேன் மு.த நீலவாணன்..சில நேரங்களில் மூடர்களும் சில உண்மைகளை பேசுவார்கள்..
நம்ம ஈவே ராமஸ்வாமி நாயக்கர் சொன்னது.;
..”பெண்கள் விடுதலைக்கும் ,சுயேச்சைக்கும் ,முன்னேற்றதிற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும்..என்று நாம் சொல்கின்றோம்
..
தந்தை பெரியார் –
“பெண் ஏன் அடிமையானால் ? ”
-பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன வெளியீடு..