புதுடில்லி : ‘கேரளாவில், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் உள்ள பகுதியில், கேரள அரசு செயல்படுத்த உள்ள, மெகா கார் பார்க் திட்டத்தை தடை செய்ய வேண்டும்; அந்த பகுதியில் மேற்கொண்டு எவ்வித அத்து மீறலிலும் கேரள அரசு ஈடுபடாமல் தடுக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு நேற்று முறையீடு செய்தது.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பரா மரிப்பு மற்றும் நிர்வாகம் தமிழக அரசின் வசம் உள்ளது. அந்த அணையின் நீர் பரவும் இடம் ஒன்றில், கேரள அரசு, கார் தொழிற்சாலை துவக்கதிட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் வேகமாக இறங்கியது. கனரக இயந்திரங்களை கொண்டு, நீர் பிடிப்பு பகுதியை நிரப்பி வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் நீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த தமிழக அரசு, அந்த பணியை நிறுத்த வேண்டும் என, கேரள மாநில அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும், கட்டுமான பணிகளை கேரள அரசு நிறுத்தவில்லை.
இதையடுத்து, கேரள அரசின் செயலை கண்டித்தும், கார் தொழிற்சாலை திட்டப் பணியை தடை செய்யக் கோரியும், தமிழக அரசு நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.அதில், கேரள அரசின் செயல், கடந்த 1886ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்திற்கு எதிரானது.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சட்டவிரோத செயலாக கருதப்படும்.எனவே, கேரள அரசின் முயற்சிக்கு இடைக்கால தடையும், அத்துமீறலுக்கு நிரந்தர தடையும் விதிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரியுள்ளது.
தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
உண்மைதான்.ஆனால் அதற்கான முயற்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.தமிழ் நாட்டில் பெரும்பாலோர் இன,மொழி உணர்வற்ற பிண்டங்கலாகவே உள்ளனர்.சினிமா மோகம் வேறு அவர்களை திசை அறியா உலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.இனிமேல் தனித் தமிழர் நாடோ அல்லது திராவிட நாடோ தமிழர்களுக்கு எட்டாக் கனிதான்.
நீர் தேக்க முடியாத நிலை என்பது இப்போது தான் தெரிகிறதா? அப்போது அம்மா வெளியே தானே இருந்தார். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஒரு பெரிய காட்டு தீக்கு ஒரு தீ பொறி போதும்! இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
இந்தியாவைப்போல் நாறிப்போன நாடு மிக சிலவே. அங்கு நடப்பது எல்லாம் மிகவும் கீழ்தர முட்டாள்தனம். எல்லாரும் இந்தியர்கள் ஆனால் எவனும் ஒற்றுமைக்காக உழைபதாக காணோம்.