தங்கைக்காக பாடுகிறார் ஸ்ருதிஹாசன்

akshara-hassanகமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் சமிதாப் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அமிதாப் பச்சன், தனுஷ், ரேகா நடிக்கிறார்கள்.

பால்கி இயக்குகிறார், இளையராஜா இசை அமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் தங்கை அக்ஷரா ஹாசனுக்காக அக்கா ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடுகிறார். இளையராஜா இசையில் அவர் ஹிந்துஸ்தானி பாடல் ஒன்றை பாடுகிறார்.

ஸ்ருதி முறைப்படி ஹிந்துஸ்தானி இசை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஸ்ருதி ஹாசன் சோனாக்ஷி சின்ஹாவுக்காக தீவார் படத்தில் ரொமாண்டிக் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ஸ்ருதி பாடும் இரண்டாவது இந்திப் பாடல் இது.