சேது சமுத்திர திட்டப் பிரச்சனையில் விரைவில் தீர்வு: நிதின் கட்கரி

nithinசேது சமுத்திர திட்டப் பிரச்சனையில் தீர்வை நெருங்கிவிட்டதாக மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் கலந்து கெண்டு பேசிய அவர், ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு கண்டறிந்துள்ளது. ராமர் பாலம் இடிக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்காக அரசு 4, 5 மாற்று வழிகளை கண்டறிந்துள்ளது. எனினும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் திட்டம் குறித்து விவரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

TAGS: