நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முன்னாள் நீதிபதி அய்யா கிருஷ்ணய்யர் அவர்கள் மனிதநேயப் போராளியாக வாழ்ந்தவர். மரண தண்டனைக்கு எதிராக தனது இறுதிக்காலம் வரை போராடிய சட்டப் போராளி. தம்பிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தூக்கு பிரச்னையில் மாந்தநேயக் குரலாக நம்மோடு இணைந்து நின்ற பெருமகன். அய்யா அவர்களின் மறைவு சக மனிதரை நேசிக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்குமான பேரிழப்பு.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் மனிதநேய மாந்தராக அய்யா கிருஷ்ணய்யர் அவர்கள் ஆற்றிய பணி காலத்துக்கும் நினைவுகூறத்தக்கது. விசாரணைக் கைதிகளுக்கு பிணை வழங்குவதுதான் நியாயம் என்றும், அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே உண்மையான நீதியாக இருக்கும் என்றும் அய்யா கிருஷ்ணய்யர் சொன்ன வார்த்தைகள்தான் மனித உரிமைகளை இன்றைக்கும் கட்டிக் காத்து வைத்திருக்கிறது.
முன்னெச்சரிக்கை என்கிற பெயரில் அத்துமீறி நடத்தப்படும் கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், கைதிகளுக்கான நியாயமான உரிமைகளை வலியுறுத்தியும் அய்யா கிருஷ்ணய்யர் உரைத்த தீர்ப்புகள் காலக் கல்வெட்டில் எக்காலமும் நிலைத்திருக்கும்.
மரண தண்டனை ஒழியட்டும்; மலர்ந்தெழட்டும் மனிதநேயம்’ என்பதையே இறுதிவரை மறையாத இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த மனிதநேய மகத்துவரின் வழி நடப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
அய்யா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதேநேரம், அவருடைய இலட்சிய வழி நடக்கும் உள உறுதியை காலத்துக்கும் நெஞ்சில் சுமப்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
-http://www.nakkheeran.in
மனிதநேயப் போராளி கிருஷ்ணய்யரின் இலட்சிய வழி நடப்போம்!அதை நீ சொல்லுரையாடா சீமான் ? டேய் நீ ஒரு பொ.. பொருக்கி ,ஒரு பிரச்சனையில் சிக்கியவுடன் வேற பெண்ணை உடனடியாக கல்யாணம் செஞ்சிகிட்டே .இப்ப நீவந்து எங்களுக்கு அறிவுரை செயுரேயா ?? எண்டா டேய் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் பொது சேவையை காரணம் காட்டி பொழப்பு நடதுரேயே வெக்கமா இல்ல உனக்கு ?
தமிழ் ஈழம் விடுதலைக்கு உங்கள் குரல் ஜீவனாக tudipatu என்னில் உணர முடிகிறது அண்ணா…நீங்கள் இருப்பதால் எம் இனம் தமிழ் நாட்டில் இன்னும் ஜீவிக்கிரங்க..