கருநாடகத்திலும், கேரளாவிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும், வருணாசிரம நூலான பகவத் கீதையை இந்திய தேசிய புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் இன்று (22.12.2014) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கி. வீரமணி உரையாற்றுகையில், அதேபோல, முழுக்க முழுக்க இந்துத்துவா ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே இந்து மதத்திலேயே ஒரு பிரிவினரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய பகவத்கீதை என்கிற நூல் இருக்கிறதே – அது சாதாரணமாகவே பல்வேறு மக்களைக் கொச்சைப்படுத்துகிற ஜாதியை நிலைநாட்டுகிற சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று இழிவு படுத்துகின்ற ஒரு நூலாகும். எனவே அதற்குச் சரியான நல்ல நூல் என்கிற தகுதி கூட இல்லாத நேரத்தில், திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைப் புறக்கணித்துவிட்டனர். நாட்டிலே நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் யாருடைய சொல்லைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம், எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற சர்வாதிகார மோடி அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமே அல்ல. நேற்று வந்திருக்கிற இன்னொரு செய்தி – இந்தப் போராட்டம் அறிவித்தபிற்பாடு இந்தித்திணிப்பிலே அவர்கள் இன்னும் தீவிரமாக, ஏடிஎம் பணம் எடுக்கின்ற இடத்திலே அத்தனை படிவங்களையும் இந்தியிலேதான் அமைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தித்திணிப்பை இன்னும் வேகமாக வங்கித்துறைகளிலே மற்றவைகளிலே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நான்கு பிரச்சினைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழர்களுடைய உரிமைகள் பறிபோகின்றன.
எனவே, இவைகளை வலியுறுத்தித்தான் பெண்கள் விழிப்புணர்வோடு வருகிறார்கள் தமிழ்நாட்டில் என்பதற்கு அடையாளமாகத்தான், திராவிடர் கழகத்தினுடைய மகளிரணி இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது. இது இங்கே மட்டும் நடைபெறக்கூடிய போராட்டம் அல்ல. ஒவ்வொரு மாவட்டத் தலைவநகரங்களிலும் இதே நேரத்திலே தமிழ்நாடு முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. மகளிரே தலைமைத் தாங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் அந்தக் காலத்திலே, 1938இலே வெற்றி பெற்றதற்கும் மகளிர் முன்னாலே நின்றதுதான் அடிப்படையான காரணமாக இருந்தது.
எந்தப் போராட்டமாக இருந்தாலும் மகளிர் ஈடுபட்டால், அந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றியைத்தான் தரும் என்பது இருக்கிறதே, அது நடைமுறையிலே நாம் பார்த்த ஒன்று. அந்த வகையிலே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்தை ஈர்ப்பது என்பது மட்டுமல்லஅரசுகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. நம்முடைய மாநில அரசைப் பொருத்தவரையிலே எவ்வளவுப் பெரிய பிரச்சினையாக இருந்தாலும், மற்ற மாநிலங்களிலே அனைத்துக் கட்சியைக் கூட்டுகிறார்கள். அவர்களுடைய கருத்துகளைக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவரும் சென்று பிரதமரைச் சந்திக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே இருக்கிற அரசோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களை அரசு இருக்கிறது என்று வலியுறுத்திச் சொல்வதற்குக்கூடத் தயங்கி தயங்கிச் செய்யக்கூடிய பரிதாபமான ஒரு நிலையிலே இருக்கிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்துக்கு இதைக் கொண்டு வரவேண்டும். அவர்களுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம். எனவே, இது ஒரு முதல் கட்டம்.
உரிமைகளைக் காப்போம்!
தமிழ்நாட்டிலே இந்தப் பிரச்சினைகள் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பல்வேறு வடிவமாக போராட்டங்களை அரசுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை திராவிடர்கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, தமிழ் இன உணர்வாளர்களின், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற உணர்வாளர்களின்சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-http://www.nakkheeran.in
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவுது
கீதை வேணாம் – சரி >> திருக்குறளை வைத்து கொள்வோமா ??
” 1 உயிரையும் கொல்லகூடாது – கொன்று தின்பது பாவம்- பிறன் மனைவியை உற்று நோக்குவது கூட பாவம் ” என்று பல விஷயங்கள் அதில் உள்ளதே ?? இவற்றை இந்த திராவிட பாக்கிகள் ஒருவனாவது பின் பற்றி நடக்கிற….
பாவம் வீரமணி – தன்னை எவரும் சீண்டுவாரில்லை என்பதால் எதோ செய்ய முனைகிறார் ??கலைஞரும் கோயில் குளம் என குடும்பத்துடன் கிளம்ப > அண்ணாச்சி கடுப்பாகிவிட்டார் போலும் ///