ஈராக்கில் வாடும் 39 இந்தியர்கள் ; மீட்டு தர சுஷ்மாவிடம் வேண்டுகோள்

vvvvபுதுடில்லி: கடும் துப்பாக்கி சப்தம் இடையே வாழும் ஈராக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றி மீட்டு வர வேண்டும் என, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

ஈராக்கில் போராளிகள் தங்களின் ஆயுத செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு இடங்களை தங்கள் கைவசம் வைத்துள்ளனர். பல அப்பாவிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பணி நிமித்தமாக இந்தியாவில் இருந்து ஈராக் சென்ற பலர் இங்கு சிக்கி தவிக்கின்றனர். டில்லி, பஞ்சாப், அரியானா, மேற்குவங்கத்தை சேர்ந்த 39 இந்தியர்கள் இங்கு வாடி வருகின்றனர். இவர்களுடன் உறவினர்கள் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு வாடும் இந்தியர்களின் குடும்பத்தினர் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து தங்களின் கவலைகளை தெரிவித்தனர். தங்கள் உறவினர்களை மீட்டு பத்திரமாக அழைத்து வர வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டு கொண்டனர். சுஷ்மா அவர்களுக்கு உறுதி அளித்தார்.

-http://www.dinamalar.com

TAGS: