யோகாசனம் ஹிந்து மதத்தை பரப்பவில்லை: அமெரிக்க நீதிமன்றம்

yoga1அமெரிக்கப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் யோகாசனம், மாணவர்களிடையே ஹிந்து மதத்தைப் பரப்பவில்லை என அந்த நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

அமெரிக்கா முழுதும், பல்வேறு பள்ளிகளில் யோகாசனம் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அந்த நாட்டின் சான் டியேகோ நகரப் பள்ளியில் யோகாசனம் பயிற்றுவிக்கப்படுவது, கிறிஸ்தவ மாணவர்களிடம் ஹிந்து மதத்தைத் திணிக்கும் செயல் என கலிஃபோர்னியாவின் 4-ஆவது மாவட்ட முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், “”யோகாசனம் ஹிந்து மதத்தோடு தொடர்புடையதுதான். எனினும், பள்ளியில் பயிற்றுவிக்கப்படும்போது மாணவர்களிடம் மதத்தைப் பரப்புவதில்லை. கிறிஸ்தவ மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் இல்லை” எனத் தீர்ப்பளித்தது.

-http://www.dinamani.com

TAGS: