பாராளுமன்றம் திங்கள்கிழமை கூடியதும், எம்.பி.க்கள் அனைவரும் நேபாள மற்றும் வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்துமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனைத்து கட்சி எம்.பி.க்களும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நில நடுக்கம் குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது பேசிய சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், நேபாள நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் பாராளுமன்ற எம்.பி.க்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளிக்கலாமே? என்று யோசனை தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்டு பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு முறைப்படி அறிவித்ததுமே அனைத்து எம்.பி.க்களும் இதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டனர்.
-http://www.nakkheeran.in