வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு

9001-5மியான்மரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் நாகா தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பட்டுள்ளது.

மணிப்பூர் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலுக்கு பதிலடியாக மியான்மர் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ கமாண்டோக்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

-http://www.nakkheeran.in
TAGS: