சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார் தமிழ் நடிகன் சிம்பு.
தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஸ் இவர்கள் எல்லாம் இருக்கும் போது சிலம்பரசன் என்ற தமிழன் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுவது அனைத்து தமிழர்களை மகிழ்ச்சி படுத்தும் விடயமாக உள்ளது.
எப்போதும் தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் முன்னுக்கு நிற்கும் சிம்புவிற்கு சக தமிழனாக எனது வாழ்த்துக்கள்.
ஈழ மக்களின் விடிவுக்காக கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது முதல் ஆளாக அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது.
விஜயின் தலைவா பட பிரச்சினையின் போது தமிழன் என்ற ரீதியில் குரல் கொடுத்த முதல் தமிழன் நீ.
கமல் என்ற ஆரியனின் விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது அங்கு சென்ற முதல் தமிழன் நீ.
இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு கொடுத்த தமிழன் நீ.
உனது தமிழ் உணர்விற்காக சிம்புவிற்கு இரசிகனாக நான் இருப்பதில் பெருமையடைகின்றேன்…
இவன உதவி செய்வான் யாரு விட்டு போன்னுங்கே எப்பெடி இருக்குது அதே எப்பெடி கேடுகெலாம் பப்பன்
வாழ்த்துக்கள் சிம்பு
மனிதாபிமான உள்ளத்தோடு யார் உதவி செய்தாலும் வரவேற்க பட வேண்டும். சிம்புவை தாரளமாக பாராட்டலாம். வாழ்துக்கள் சிம்பு.
மனிதாப உணர்வோடு யார் உதவி புரிந்தாலும் வரவேற்க பட வேண்டும். வாழ்துக்கள் சிம்பு .
இன துரோகி,பெண்ணுக்காக மதம் மாறிய பச்சோந்தி.எத்தனை குழந்தைக்கு கல்வி கொடுத்தாய்.எப்படி வும் வகுப்பு தலைநிமிரும் வும்மை போலவே இளைய ராஜா மகனும் படும் கோழைகள்,
வாழ்க நாராயண நாமம்.
வாழ்க ! தொடரட்டும் இப்பணி.
சிம்பு @ சிலம்பரசன் அவர்களே ஒரு தமிழன் என்ற அடிப்படையில் உங்களை ஆதரிக்கிறேன் .kaayee (காயு)அம்முவை போல் , உம்முடைய அந்தரங்க விசயத்தில் எனக்கு அக்கறையில்லை .
அதற்காக (!) மதம் மாறுவது மிகவும் ஈன தனம்– ஒருவரின் சொந்த விசயத்தில் தலை இடுவது தவறு ஆனால் அது நம் இன மதத்தோடு சம்பத்தப்பட்டால் அதை பற்றி பேசுவது தவறு இல்லை என்று நினைக்கிறேன்– நாம் விட்டு கொடுத்துதான் இந் நிலையில் இருக்கிறோம்.
சிம்புவுக்கு அரசியல் ஆசை வந்து விட்டது போல இருக்கு! வாழ்க சிம்புவின் தொண்டு.
ஏன் தேனியாரே வரகுடாதா!?
அவன் மண்ணின்மைன்தன் ஐயா ..
திருட்டு ரயிலேறி நாதாரி கருணாநிதி
தனது தாரளமனதால் உச்ச அதிகாரத்தைபெற்ற செயலலிதா ..
குடிகாரன் தெலுங்கன் விச்கிகாந்த்
தெலுங்கு சாதிவெறியன் கோபால்சாமிநாய்டு
இப்போ புதிதாக வளர்தேடுக்கபடும் விசால் ரெட்டி இவனுங்கல்லாம் உமது கண்ணுக்கு தெரியவில்லையா ?
அண்மைய நாட்களாக தமிழன் சந்தானம் அவனும் உதவுகிறான் அவனுக்கும் அரசியல் ஆசையா?
தமிழனை காயடிகிறதிலேயே குறியா இருகிறாங்கையா!
50 டன் தரமான அரிசி
(25கிலோ சீல்டு பைகளில்) வெள்ள நிவாரண விநியோகத்திற்காக ஏற்பாடு செய்து எந்த விளம்பரமும் மீடியா கூப்பாடும் இல்லாமல் இந்த சென்னை மண்ணின் மைந்தன் சந்தானம் அவர் ரசிகர் மன்ற தலைவர் குமரவேல் ஆகியோரும்
கொடுத்து வருகின்றனர்
கடலூர் வெள்ளப் பகுதிகளுக்கும் அத்யாவசிய மருந்துகள் உணவுப்பொருட்கள் விநியோகமும் நடந்துவருகிறது.
மக்கள் தனக்கு கொடுத்ததை, மக்களுக்கு அவசர காலங்களில் தன்னாலியன்றதை திருப்பி செய்து வரும் இந்த கலைஞன் போற்றப்பட வேண்டியவர்.
இப்ப என்னா சொல்லிட்டேன்ன்னு இப்படி பாய்ந்து வரீங்க தம்பி எழுச்சிப்பறை? அரசியல் ஆசையா என்றுதானே கேட்டேன். அதற்குள் காயடிக்கின்ர வேலைக்கு போய் விட்டீர்களே! தங்களைப் போலவே எமக்கும் தமிழர் பற்று உண்டு. தமிழர் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்ற ஏக்கம் உண்டு. தமிழனுக்கு துன்பம் என்றால், தான் ஆட விட்டாலும் தன் சதை ஆடும் என்ற உணர்வு உண்டு. அதனால் சிம்பு அரசியலுக்கு வந்தாலும் வராமால் இருந்தாலும் நல் எண்ணத்தில் செய்யும் தொண்டை வரவேற்பேன். செல்வி செயலலிதா அப்படி எதை தாராள மனத்தோடு தாரை வார்த்துக் கொடுத்து அதிகாராத்தை கை பற்றினார்? “நான் தாலி கட்டாத மனைவி” என்று இறப்புக் காரியத்தில் சொன்னதை சொல்கின்றீர்களா? தமிழ் தேசியத்தை கொச்சைப் படுத்தும் அளவிலும், திராவிடத்தை தற்காக்க எதிரியின் காலில் வீழ்ந்தாலும் பராவில்லை என்று வை.கோ. பேசிய கானொளியைக் கண்டபொழுதே அந்த ஆளு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் போச்சு. மு.க. மீது இருந்த நல்லெண்ணம் ரொம்ப காலத்திர்க்குமுன்னமே மலை ஏறிவிட்டது.விசயகாந்து மீது எமக்கு எப்பவுமே நல்லெண்ணம் ஏற்பட்டதில்லை. நான் எப்பவும் நாம் தமிழர் கட்சிதான். அதில் சந்தேகம் வேண்டாம். .
தமிழ் எழுச்சி பறை அவர்களே உங்கள் நியாயமானதே .நான் முன்பு ஒருமுறை கூறினேன் ! “உலகில் கேடு கேட்ட இனம் தமிழினம் ” என்று , அதற்க்கு பலர் எனக்கு கண்டனம் செய்தனர் .இப்போது தெரிகிறதா ,ஒரு தமிழன் நல்லது செய்தால் ,அதை தமிழனே மட்டம் தட்டுகிறான் .யாரப்பா என் தாய் தமிழ் ? நீங்கள் தமிழன பற்றாளரா ? அல்லது இந்து மத வாதியா ? .தமிழன் எந்த மதத்தை சார்ந்தவராய் இருந்தால் உமக்கென்ன ? ..இங்கே தமிழ் இனத்தை பற்றி பேசுகிறோம் .நீங்கள் மதவாதி என்றால் மோகன் ஷானிடம் பேசுங்கள் .
யாரப்பா அது கோவிந்தசாமி உதையார்? “தமிழன் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் உமக்கென்ன என்று வக்கணையாக கேட்கத் தெரிந்தவருக்கு, தமிழன் ஏன் மதம் மாறி போகனுமுன்னு கேட்கத் தெரியாமால் போனது ஏன்? அது ஏன் ஒரு இந்து என்பார் வேற்றொரு மத பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் செய்வதென்றால் இந்துதான் வேற்று மதம் மாறிப் போகனும்முன்னு வலுக்கட்டையமாக மதம் மாற்றுவது? ஏன் பிறர் தமிழரின் சமயத்திற்கு மாறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் நீங்கள் வற்புறுத்துவதில்லை? எவனோ ஒரு மடையன் எந்த சமய நெறிகளையும் அறியாதவன், “எம்மதமும் சம்மதமும்ன்னு” சொல்லிட்டு போயிட்டா, அதையே கையில் பிடித்துக் கொண்டு தமிழன் ஆயிரத்தெட்டு மதம் மாறிப் போனா நாளைக்கு உங்க மகன் ஒரு ;’ஜோன்’ – க மாறி, கோவிந்தசாமி உதயாரை, ‘Cobesam’ உதையாராக மாற்றிவிடுவார் அல்லது மகன் ‘நைனா முகம்மது’ – வாக மாறி, கோவிந்தசாமி உதையாரை, அப்துல்லாவாக மாற்றி விடுவார். இது தேவையா? இந்நாட்டில் தமிழர்களை விட மலையாளிகளும், தெலுங்கு வம்சாவளி மக்களும் வெகு வேகமாக கிறிஸ்துவ மதத்திர்க்கு மாற்றப் பட்டு வருகின்றார்கள் என்பதை அந்த சமூகங்கள் அறிந்து வைத்திருக்கின்றதோ இல்லையோ நமக்குத் தெரியாது. மத மாற்ற விவகாரத்தில் நாம் தமிழர் உஷாராகவே இருப்பது நலம். இல்லையேல் கோவிந்தசாமி வேற்றொரு பக்தராகி மாறிவிட்டாலும் ஆச்சரியப் படுவதக்கு ஒன்றுமில்லை. இன்றைக்கு மதம் மாறிப் போன “தமிழர்”(!), ஏன் தென் இண்டியன்கள் மதம் மாறுகின்றனர் என்று “வெளிப்படையாகவே” கேட்கின்றார்கள். பதில் சொல்லுங்கள். இன்னொரு பகுதியில் நான் தமிழரை கிறிஸ்துவ மதத்திற்கு “மாற்றிக் காண்பிக்கின்றேன்” என்று ‘open challenge’ செய்கின்றார்! ஏன்?. தமிழர் அவர்தம் சமய நெறிகளை ஆழமாக அறிந்து வைத்திருக்கவில்லை என்று அவர்கள் நன்றாக கணக்குப் போட்டு வைத்திருக்கின்றார்கள். அதனால் இந்துவை மதம் மாறுவது வெகு சுலபம் என்றும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். நிலைமை இப்படியே போனால் இந்து கோவில்களுக்குள் இப்பொழுது பாபாக்கள் குடி வந்த மாதிரி அடுத்த கட்டமாக இந்து கோவில்களின் மேம்பாடாக குறுக்குச் சட்டங்கள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இருக்காது. தயவு செய்து எம்மை மேலும் உசுப்பேத்தாதீர்கள்.
காலை வணக்கம் தேனியாரே 🙂
மன்னித்து கொள்ளுங்கள் .
தாங்கள் நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளோடு சமயத்தோடு சமுதாயபணியாற்ற தமிழ்மொழியின் தந்தை அமரகோன் துணைபுரிய வேண்டும் ..
உயர் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழர்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்கு உள்ளாகியுள்ளது.
நம் மூச்சுகாற்று அடங்குவதற்குள் நம் குழந்தைகளுக்கு சீரான ஒரு வாழ்வை அமைத்துகொடுக்க வேண்டும் .. செம்பருத்தி மாத இதழில் ஒருவசனம் இடம்பெறும் பிறர் உரிமையை பறிக்காதே .உமது உரிமை இழக்காதே ! அதேபோல் தமிழர் நாம் பிறரிடம் ஏமாந்து இழந்தவற்றை மீட்க எழுச்சிகொள்வோம் ..
சகோதரர் தேனியிடம் கேள்வி .
தாங்கள் ஆலயம் செல்வீர்களா ?
அப்படி சென்றால் எவ்வளவு நேரம் செலவளிபீர்கள் ?
ஆலயத்திலிருக்கும் வழிபாடு செய்து விட்டீர்கள் ..அடுத்து என்ன செய்வீர்கள் ?
என்னமோ பொடி வைத்துக் கேள்வி கேட்பது போல் இருக்கு? அப்புறம் எத்துனை மணிக்கு படுப்பேன், எத்துனை மணிக்கு எழுந்திருப்பேன், எத்துனை மணிக்கு வேலைக்குப் போவேன் என்றெல்லாம் கேட்பீர்களோ? தனிநபரின் மெய்ப்பாட்டைக் காண்பதை விட்டுட்டு தமிழரின் பொது நலத்தைப் பற்றி பேசினால் அனைவருக்கும் நலம். சிலர் “தமிழர்” என்பதற்கு இலக்கணம் தெரியாமல் கருத்து எழுதுவதானது நம்மை திக்குத் தெரியாத காட்டில் கொண்டு போய் விட்டிடும். அப்படியேப் பேசித்தான் இன்றைக்கு நம் நிலைமை இப்படியாகி விட்டது. “எப்படி இருந்த தமிழன், இப்ப இப்படி ஆயிட்டான்” என்ற கதை. தமிழர் என்ற பாசம் எப்படியெல்லாம் நம்மை சுழற்றி அடிக்கின்றது என்பதை நம்மை சுற்றி இருந்து கொண்டு நமக்கே குழி பறிக்கும் தமிழர்களைப் பார்த்தே அறிந்துக் கொள்ளலாம். மதம் மாறியவர்களைப் பார்த்துப் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
ஒரு கால கட்டத்தில் தமிழர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் தமிழர்களாக இருந்தால் அதை வரவேற்றேன். ஆனால் தற்போதைய நிலை என்ன? சிங்கபூர் தமிழன் ஒருவன் இன்று இந்தோனேசியாவில் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு தீவிரவாதியாக சிறை வைக்கப்பற்றிருக்கிறான் — நாம் இவனை தமிழன் என்று கூறினாலும் அவனுக்கு அவன் முஸ்லிம்-தமிழன் இல்லை— இதுபோன்ற மன நிலை இன்று வேரூரிக்கொண்டு இருக்கிறது. எத்தனை தமிழ் முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்று கூறுகின்றனர்? ஈழத்தில் என்ன நடக்கின்றது? இங்கு என்ன நடக்கின்றது? அதிலும் முன்பெல்லாம் சேலை கட்டிய தமிழ் முஸ்லிம் பெண்கள் இன்று என்ன கட்டுகின்றனர்? சிங்கபூரிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை மலாய்க்காரங்களுடன் தான் உறவாக நினைக்கின்றனர். இன்னும் எவ்வளவோ— என்னை பொருத்தமட்டில் நல்லது செய்வோருக்கு நான் எதிரி அல்ல– எனக்கு திருவள்ளுவர் தெய்வ புலவர்– அவரை விட யாரும் உயர்ந்தவர் கிடையாது. இனியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறினார் -இதை அப்துல் கலாம் ஐரோப்பிய சொற்பொழிவில் எடுத்துக்காட்டாக கூறினார் -இவர் தமிழர் முஸ்லிமாக இருந்தாலும். இப்படி எத்தனை முஸ்லிம்களை நாம் கூற முடியும்?
வாழ வைத்ததமிழன் ,வளர்த்து விட்ட தமிழ் தென்னாடு என்றுக் கோடிக்கோடியாக சம்பாதிக்கும் வாய் சவுடல் நடிகருக்கலுக்கு மத்தியில் அள்ளிக் கொடுக்காவிட்டாலும்m கிள்ளிகொடுக்கும் இளம் தமிழ் நடிகர்கள் பாராட்டுக்குரியவர்கள் ,இனம் இனத்தோடுதான் சேரும் !
யாரையா உம்மை குழிபரிகிற வேலை வேலை செய்தார் !?
தாங்கள்தான் என்குடும்பம் திராவிட கலப்பு என்று ஏன்கனவே பதிவிட்டு இருந்தீர் ! அதட்கேற்றால்போல் கருத்துக்களும் பதிவுசெய்கிறீர்கள்!
தேனியின் கருத்து
1 இந்துவை மதம் மாறுவது வெகு சுலபம் என்றும் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
2(நான் தமிழரை கிறிஸ்துவ மதத்திற்கு “மாற்றிக் காண்பிக்கின்றேன்” என்று ‘open challenge’ செய்கின்றார்! ஏன்?)
1இஸ்லாமிய கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் ஏழைகளுக்காக ஒவ்வொருவரும் தங்கள் தகுதிக்கேற்றவாறு நன்கொடைகளை அளிக்கிறார்கள்! உமது ஆலயத்தில் அவ்வாறு உண்டா ?
2 அவர்கள் வழிபாட்டு தலங்களில் வழிபாடு முடிந்து ஒவ்வொருவரும் கைகுலுக்கு நலம் விசாரிக்கிறார்கள் …
புதிதாக வந்தவர்களை மற்றவர்களிடம் அறிமுகபடுத்தி வைகிறார்கள் .. ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவுகிறார்கள்
ஏழை மக்கள் நீதிமன்ற வழக்கு பிணக்குகளுக்கு ஆலோசனை இலவச வழக்கறின்சர் ..பிறப்பு பத்திரம்/ மைகார்ட் பிரச்சனைகளுக்கு தங்களால் முடிந்தவரை உதவுகிறார்கள் .. கட்டுகோப்பாகவும் தங்கள் மத பெரியவர்களின் கீழ்படிந்தும் வாழ்கிறார்கள் ..
தாங்கள் செல்லும் ஆலயத்தில் நான்கூறிய ஏதாவது செய்கிறார்களா ?
அங்கு பல ஆய்ரம் வெள்ளி பெறுமதியான பொருட்களை கொட்டி அபிசேகம் 1008 /108 சங்கு/ குடம் இப்படி பற்பல ..
பூசை முடிய சாமிக்கு படைத்த பொங்கல் கச்சான் புளிசாதம் எல்லாத்தையும் வாங்கி தின்னுட்டு போறதுதான் வேல முடின்சிபோச்சு !
இந்துவான அந்நியனை விட இந்துவல்லாத தமிழன் என் இனத்தவன் .
நான் அடிபட்டு அம்மா என்று கத்தும்போது திரும்பி பார்பான் ஓடியாந்து தூக்குவான் .. இந்து சந்து என்று சொல்லி எவனும் வரமாட்டான் .. மாறாக என் உடமைகளை சூறையாடுவான்.
தேனியார் உமது மதத்துக்கு எண்ணிக்கை அதிகரிக்க ஆசைபடுகிறீர்!
மதம்மாறிய இந்துக்கள் தாய்மதம்(சந்து )திரும்பவேண்டும் என்று ஆர் எஸ் எஸ் கூப்பாடு போட்டதை நீர் இங்கு பிரதிபளிகிறீர்!!
மதம்மாறியவர்களை நினைத்து நீளிகண்ணிர் வடிப்பதை நிறுத்திவிட்டு இருகிறவன் உறுதியாக திடமாக இருக்க தாங்கள் தங்கள் சமய பணியை அதிகரிக்கலாமே .
எனக்கு தெரிந்து தலைநகரில் மாசத்துக்கு குறைந்தது ஒரு பத்து இந்து தலையாவது தண்ணில முக்கி எடுக்கிறார்கள் ..
பெரும்பாலானவை பிபிஆர் அடுக்குமாடி வாசிகள்தான் ..
வறுமை /கல்வியறிவு/ குடும்ப சிக்கல் /மது .போதைபொருள் / நல்வழிபடுத்த தன்னலமற்ற சமயபெரியோர் சமய அமைப்புக்கள் இல்லை ..அரசியல் தலைவன் இல்லை அப்படி இருந்தாலும் சுயவிளம்பரத்தில் அதிக நாட்டம் .. ஒருசிலர் ஆங்காங்கே செய்தாலும் அது ஒரு சிறு வட்டத்துக்குள் நிறுத்திவிடுகிறார்கள் பணம்படைத்தவர்களுக்கும் கற்றவர்களுக்கும் சேவை ! நலிந்தவர்களுக்காக பணியாற்றுபவர்கள் இந்துமதத்தில் மிகவும் அரிது ..
இந்துவானாலும் கிறிஸ்து முஸ்லிம் எந்தமததவரானாலும் சரி முதலில் தங்கள் மதங்களில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யுங்கள் ..
தங்கள் மதத்தவர்கள் போதைபொருள் /மது /தகாத உறவு /பொய் திருட்டு/ பிறரை ஏமாற்றுதல்/ கொலை இப்படி தீய செயலில் இடுபடாமலிருக்க தங்கள் மத போதனைகளை செய்யுங்கள் ..
தங்களது மதத்தை தூய்மை படுத்தி விட்டு வாங்க அடுத்தவன மதம் மாற்ற ..
யார் தமிழன் ? திருப்பதி எழுமலையனை வணங்குபவனா மட்டுமா ? இல்லை எந்த கடவுகளை வணக்கினாலும் சரி தமிழை தாய் மொழியாக கொண்டவர்களா ?
(1) இஸ்லாமிய கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் ஏழைகளுக்காக ஒவ்வொருவரும் தங்கள் தகுதிக்கேற்றவாறு நன்கொடைகளை அளிக்கிறார்கள்! உமது ஆலயத்தில் அவ்வாறு உண்டா?
பல இடங்களில் உமது! உமது! என்று பிரித்தாளும் மனப்பாங்கோடு பேசுவதில் இருந்து என்ன தெரிகின்றது? ஒரு சுய தமிழனை இன்னொரு தமிழன் பிரிதாள்வதில் இருந்து தமியர் எழுச்சிப்பரைக்கு நாம் தமிழர் இயக்கத்திற்கு தலைமை தாங்க தகுதி இல்லை என்று தெரிகின்றது.
கேட்ட கேள்விகளுக்கு ஒட்டு மொத்தமாக ஒரே பதில். தமிழர் எழுச்சிப்பரை தமிழரின் சமய நெறியும் அறிந்திலர். அச்சமயத்தில் ஈடுபாடும் இல்லை என்பது தெளிவு. அப்புறம் எம்மதமும் சம்மதம்தான்.
(1) கேட்ட கேள்விகளுக்கு தனித்துப் பதில். நான் நிர்வகித்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.ஆர். மற்றும் எஸ்.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இண்டிய மாணவர்களுக்கு (இனம் பாராமல்) கல்வி ஊக்குவிப்பு தொகை ஆலயத்தின் சார்பில் வழங்கப்பட்டது. தனித்து வாழும் தாய்மார்களுக்கும், முதியோருக்கும் உதவித் தொகை ஆண்டுக்கு ஒருமுறை ஆலயத்தின் சார்பில் வழங்கப் பட்டது.
(2) கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழும் தாய் ஒருவர் ஆலயத் தலைவரை நாடி உதவி கேட்டவுடன், எனக்கு அறிமுகமான சமூக நலத்துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய ஏற்பாடு செய்ததுடன், நானே 6 மாத காலத்திற்கு அம்மாதுவின் பிள்ளைகளுக்கு வேண்டிய பால் மாவு வாங்கிக் கொடுத்தேன்.
இந்து ஆலயத்திற்குள்ளே காலெடுத்து வைக்காமால் தமிழரை விமரிசிக்கும் அளவுக்கு உமக்கு நாம் தமிழர் இயக்கத்தில் அதிகாரம் கொடுத்தது யார்? ஆலயத்தின் உண்டியலில் ஒரு வெள்ளியை நன்கொடையாக போடுவதுக்கு யோசிக்கும் இந்து என்பார், மதம் மாறியவுடன், திருச்சபை விதிக்கும் கட்டளைக்கு இணங்க, 5% முதல் 10% மாத சம்பளத்தை நன்கொடையாக கொடுப்பது ஏன்? இந்து மதங்களில் பொதுவாக கட்டாயப் படுத்துவதில்லை. இது இந்து மதங்களின் தனிச்சிறப்பு. முன் பின் இந்து ஆலயத்தில் காலெடுத்து வைத்தவர்களுக்கு இது தெரியும். அவ்வாறு செய்யாதோருக்கு எப்படி தெரியும்? தொடரும்.
முதலில் இந்து ஆலயங்களை விமரிசிப்பர்தர்க்கு, ஒரு தகுதி வேண்டும். எமக்கு ஆலயத் தொடர்பு அதிகமாக இருப்பதால் தமிழர் எழுச்சிப்பறை போடும் ஒவ்வொரு இடி ஓசைக்கும் எம்மால் மின்னல் வேகத்தில் பதில் கொடுக்க முடியும்.
“தாங்கள் செல்லும் ஆலயத்தில் நான்கூறிய ஏதாவது செய்கிறார்களா?”
தமிழர் கொண்ட சமய நெறியில், இறைவனை உணர பக்தி வழிபாட்டிற்கு சிறப்பிடம் ஆலயம். இது கிரியையில் அடங்கும். அந்த இறைவனை வணங்குவதற்கு ஈடாக உயிர் தொண்டு அவசியம் என்று உணர்த்தியதை சரியையில் அடக்கும் சைவம். இதைத்தான் திருமூலர் இவ்வாறு பகர்ந்தார்:
“யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
(திருமந்திரம்: உபதேசம்: 109)
தான் உண்ணும்போது மற்றொருவருக்கு ஒரு கைப்பிடி உணவாவது கொடுக்க வேண்டும். அவ்வாறு உணவு கொடுக்க வசதி இல்லாமல் போனாலும், இன்சொல் வார்த்தையாவது பேசி பிறர் மகிழ்ச்சியுற வேண்டும் என்று சொன்னது தமிழருக்கு. இதை தன் வாழ்நாளில் கடைப்பிடித்தவர் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள். அவர் செயல் என்னவென்று தெரியுமா? திருநாவுக்கரசரின் அரிய செயலை அறிந்து அவர் யார் என்று பார்க்காமலேயே அவர் பெயரில் தண்ணீர் பந்தல் அமைத்து, அன்னதான மடம் அமைத்து மக்களுக்கு தொண்டாற்றினார். அதன் வழி வந்ததுதான் நம் ஆலயங்களில் இறைவனுக்கு நெய்வைத்தியம் செய்த பொங்கல், புளியோதரை என்று ஏழை எளியோருக்கு உணவிட்டு நற்செயல்களைச் செய்யும் பண்பு. இன்றும் அது தொடர்கின்றது. மலேசியாவில் நாம் பஞ்சத்தில் இல்லை. அதனால் அதன் அருமை பெருமை தெரியமால் தப்பாகப் பேசுவதற்குக் காரணம் ஊழ்வினை.
“பூசை முடிய சாமிக்கு படைத்த பொங்கல் கச்சான் புளிசாதம் எல்லாத்தையும் வாங்கி தின்னுட்டு போறதுதான் வேல முடின்சிபோச்சு!”.
இப்படி பேசுவதின் காரணமென்ன? தமிழர் சமயத்தைப் பற்றிய சொந்த புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. எப்படி பாமரர் பொதுவாக நடந்துக் கொள்கின்றாரோ அதே நிலையில் தானும் நின்று பேசும் தலிவர் நாம் தமிழருக்கு வேண்டாமே. தொடரும்
ஆலயத்திற்கு வந்தவர்களிடம் கையெடுத்து வணக்கம் சொல்வது தமிழர் பண்பாடு. கை குலுக்குவதும் கால் குலுக்குவதும் தமிழர் பண்பாடு அல்ல. யாரப்பா உங்களை வணக்கம் சொல்ல வேண்டாம் என்று தடுத்தது? நீங்களாக ஒரு நற்செயலை செய்யத் தவறினால் அதற்கு சமயம் என்ன செய்யும்? ஆலயம் என்ன செய்யும்? ஆலய நிருவாகம்தான் என்ன செய்யும்? ஏன் இந்த நற்பன்புகளை எல்லாம் தமிழர்களுக்கு அவர்தம் பெற்றோர் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொல்ல வருகின்றீர்களா! அது உண்மையானால் தவறு அவர்தம் பெற்றோரிடமே. சமயமோ, ஆலயமோ, நிருவாகமோ அதற்குப் பொறுப்பல்ல. தன்னிடம் இருக்கும் குறையை அறியாமால் பிறரை நோக்கி விரலை நீட்டுவது ஏனோ? முதலில் தன்னைத் திருத்திக் கொண்டு பிறரை திருத்த முயலுங்கள். தொடரும்.
“ஏழை மக்கள் நீதிமன்ற வழக்கு பிணக்குகளுக்கு ஆலோசனை இலவச வழக்கறின்சர் ..பிறப்பு பத்திரம்/ மைகார்ட் பிரச்சனைகளுக்கு தங்களால் முடிந்தவரை உதவுகிறார்கள் .. கட்டுகோப்பாகவும் தங்கள் மத பெரியவர்களின் கீழ்படிந்தும் வாழ்கிறார்கள்.”
இங்கு கருத்து எழுதியதைப் பார்த்த மாத்திரத்தில், நாம் தமிழர் இயக்கம் என்பார் அவர் தம் மத பெரியவர்களிடமும், சமய வழக்கங்களுக்கும் எப்படி கீழ்படிந்து வாழ்கின்றார்கள் என்பது படிப்போருக்குப் புரியும். நீதிமன்ற வழக்கு பார்பதற்கும், பிறப்பு பத்திரம், அடையாள அட்டை எடுப்பதற்கும் வேறு எந்த இயக்கங்களும் இல்லையா?. இதனையும் ஆலயம்தான் செய்ய வேண்டுமா? இப்படி எத்துனை பேர் கிளம்பி இருக்கின்றீர்கள் நாம் தமிழர் இயக்கத்தை வளர்க்க? வள்ளுவர் இப்படிச் சொல்கின்றார்:-
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்”
பொருள்: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆலயத்தில் மணி அடிப்பவரைக் கூப்பிட்டு நீதிமன்றத்திற்கும், JPN – க்கும் நடக்கச் சொன்னால் முடியுமா? அல்லது ஆலய நிருவாகத்தினர்தான் அத்தகைய திறமையைக் கொண்டுள்ளார்களா? யார் எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்வதற்கு தகுதி உள்ளவரா என்று அறிந்துதான் ஒரு பொறுப்பை ஒப்படைக்க முடியும். சும்மா வீதியில் போகின்றவனையும், வருகின்றவனையும் கூப்பிட்டு பிறப்பு பத்திரம் எடுத்துக் கொடு, நீதிமன்றத்திற்கு வா என்றால் வருவானா? இதெல்லாம் என்ன பேச்சு? தொடரும்
“இந்து” என்று நீர் ஏன் உம்மை ஆடையாளமிட்டுக் கொள்கின்றீர்? ஏன் சைவன் என்று சொன்னால் தமிழனுக்கு ஆகாதா என்ன? யார் உங்களை ஆயிரமாயிரமாக பணத்தைக் கொட்டி வழிபடச் சொன்னது? தமிழர் சமய நெறியை அறியாததால், மணி அடிப்பவன் சொல்வதெர்க்கெல்லாம் தலையாட்டி சுயநலத்திற்குப் பூசை செய்து தமிழன் ஓட்டாண்டியாகப் போனால் சமயம் என்ன செய்யும். இதற்குத்தான் தலைப்பாடாக அடித்துக் கொள்வது. வெறும் ஆலய வழிபாடு மட்டுமே நமது சமயம் அல்ல. அதற்கு மேலும் உள்ளது சமய நெறி. இதனை அறிந்து இறைவன்பால் அன்பு கொண்டு எவ்வித கிரியையும் இல்லாமல், அகத்தால் இறைவனை வழிபட உயர்த்தும் உண்மை நெறி சிவநெறி. இதைப்பற்றி ஏதாவது அறிந்து வைத்துளீர்களா? இல்லையென்றால் அருகாமையில் எங்காவது சித்தாந்த வகுப்பு நடந்தால் சென்று சமய நெறியைப் பயிலுங்கள். அப்பொழுதுதான் தமிழரின் அறிவார்ந்த சமய நெறி புரியும். சயம மூட நம்பிக்கைகளில் இருந்தும், சமய வியாபாரம் என்னும் தீராத நோயில் இருந்தும் நாம் தமிழர் விடுபட முடியும். இதெல்லாம் தனக்குத் தேவை இல்லை என்றால் இனி தமிழரின் சமயத்தை நிந்திக்காதீர்.
இல்லையேல் சமயத்தில் ‘zeero’ – வாக இருந்துக் கொண்டு ‘ஹீரோ’ – வாக முடியாது. இன்றைக்கு இது போதும்.
மனித குலத்துக்கு நல்லது என்றால், அது எம்மதத்திலிருந்து வந்தால் என்ன?? மனிதாபிமான எண்ணத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு உதவியின் பால் இனம் என்ற சாயம் பூசி பிரிவினைக்கு உயிர் கொடுக்க வேண்டாம். அதே வேளையில், ..உதவி என்ற போர்வையில், குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் மேற்கொள்ளும் நடவடிக்கையை புறக்கணிப்பதும் தவறல்ல!! . “இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு” என்ற கூற்றின் கருவினை நன்கறிந்து இன பாகுபாடில்லாமல் ஒரு சேர்ந்து வாழ வழி வகுப்போம்!!!! தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதமும் பயனளிக்கா!!! எந்த நன்மையையும் கொணரா!!!! ஒற்றுமை உணர்வுடன் உதவுவோம்!!! ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்!!! இருகரம் கொண்டு கோவிலில் வணங்குவதைவிட சிரமப்படுவோருக்கு ஒரு கரம் கொடுத்து உதவுங்கள், உதவி பெற்றோருக்கு நீர் கடவுளாய் தெரிவீர்!!!சிந்திப்போம் செயல் படுவோம்!!!
சிறப்பு தேனி..எனது பதிவில் என்றைக்காவது நாம் தமிழர் கட்சி உறுப்பினர் என்று கூறியிருக்கிறேனா ?
எந்த தமிழன் இனத்துக்காக மொழிக்காக களத்தில் நிக்கிறானோ அவனுக்கு என்றும் துணை நிப்போம் தோள்கொடுப்போம்..
எல்லோருக்கும் தலைமை தாங்கும் ஆசைவந்தால் யாருதான் தொண்டனாக இருக்கிறது ?
தங்கள் மனதில் தொன்றுவதைபோல் சில பல தமிழன் ஒரே கட்சியில் பல தேசிய தலைவர் ! ஆளுக்கொரு அணி பினிண்ணுகிட்டு காலத்தை ஓட்டுகிறான் . வேணாம் தகுதி உள்ள தமிழனை முன்னிறுத்தி பின்செல்வோம்.. ..
இல்ல தமிழனுக்கு தகுதி இல்லன்னு இந்து சங்கத்தை மொத்தமாக குத்தகைக்கு கொடுத்ததைபோன்று திராவிட தந்தை ராமசாமி நாய்கர் வாரிசிகளிடம் கொடுகலாம்கிறீர்களா?
தேனீ தினமும் காலைல வல்லாரை சாறு குடியுங்கள் உடலுக்கு நல்லது .. எனது பதிவுகளில் சைவ சமயத்துக்கு ஆதரவாக என்றைக்கும் இருந்ததில்லை ?
வீரசைவ சமயத்தான் ..தமிழன் ..இந்து அல்ல .. இந்து ,இந்தியன், திராவிடன் எத்தனை வருட அடையாளம் ?
தேனியார் நிர்வகித்த ஆலயத்தில் எம்புட்டு சேவை ! உண்மையிலேயே எனக்கு வியப்பாக உள்ளது ..
பத்துமலையில் தைப்பூச விழாவில் பல காவடிகளை காண்போம் ..
அதில் பாருங்கோ ஒரு சிலர் உண்மையான பக்தியோடு பாட்டன் முருகனுக்கு காவு தடியில் இருபக்கங்களும் பலாப்பழம் தேன் தினை கரும்பு போன்றவற்றோடு மலை ஏறுவார்கள் ..அதேபோல் தேனியாரின் ஆலய மக்கள்சேவை ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி !
அன்புள்ள தேனியாரே இவ்வளவு காலமும் சைவ மார்க்கம் அது இதுன்னு போட்ட பதிவெல்லாம் சும்மாவா ? இப்போ இந்து சந்துன்னு கூவுறிர்கள்!! உம்மை நம்பி பின்தொடர்ந்தால் நடுகடல்ல விட்டுத்து போயிருவீர்போல! ஆரிய கூத்து வேணாம்ன்னுதான் பல தமிழன் வீர சைவத்திலும் சிலர் ஒதுங்கியும் உள்ளார்கள் …
கடைசியாக தேனிக்கு உண்மைலேயே இந்து மதத்தவர் மதம் மாறுவதை தடுக்க எண்ணமிருந்தால் உணனடியாக களத்தில் இறங்குங்கள் ..தலைநகரில் ஒவ்வொரு வாரமும் பலகுடும்பங்கள் மதம் மாறுகிறார்கள் .. பெரும்பாலனவர்கள் பி பி ஆர் அடுக்குமாடி வாசிகள் ..
பல நூறு நேபாளிகளும் மாறி விட்டார்கள் ! நேபாள் மொழியிலும் வழிபாடு நடைபெறுகிறது ..பலபேர் புதிதாக மாறுகிறார்கள் அவர்களும் கிந்துக்கள் ! தடுத்து நிறுத்த தேனியார் தலைமையில் களமாடுவார் என்று நம்புகிறேன் .. கணணி முன் அமர்ந்து புரட்டாசி பண்ண மாட்டார் என்று நம்புங்கள் மக்களே ..
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அல்ல …இனத்துக்காக உழைக்கும் தமிழனுக்கு எம் ஆதரவு உண்டு ..
வீழ்ந்த இனம் எழுவதற்காக எழுச்சிப்பறை ஓங்கி ஒலிக்கும் ..
சக தமிழரோடு கருத்து போர் செய்து முரண்படுவது எம் நோக்கமல்ல ..தேனீ நன்றி நன்றி ..தூங்கபோறேன் நாளைக்கு வேலை ..விடுமுறை அல்ல .. வணக்கம் வாழ்க வளமுடன்
அப்பாவி ..தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் தமிழர்களே .. அவர்கள் எந்த மதத்தை தழுவியிருந்தாலும் தமிழர் தமிழர்தான் மாற்று கருத்து இல்லை ..
மற்ற நண்பர் கேள்வி இஸ்லாமிய தமிழச்சிகள் சேலை கட்டுவதில்லை !
என் இந்து தமிழச்சிகள் அனைவரும் சேலை கட்டிகொண்டா உலாவுகிறார்கள் ? அவர்களும் கட்டுகிறார்கள் குறைவு .. என் தமிழன் பண்பாடு வேட்டி கட்டுவது .. இங்கு எத்தனை தமிழன் வேட்டி கட்டிக்கொண்டு நடமாடுகிறான் ??
குறை அனைவரிடத்திலும் உள்ளது …களைய முயல்வோம் …. தமிழர் என்ற ஒற்றை சொல்லில் இணைந்தால் அகிலமே தமிழரை போற்றும் ..
ஐய்யா தேனியாரே எனக்கு இந்து பொந்து பற்றி எல்லாம் கவலையில்லை .தமிழர் மதம் மாறுகிறார்கள் என குறிப்பிட்டீர்களே .உங்களிடம் 3 கேள்விகள் .1) நீங்கள் தமிழின பற்றாளரா ? 2) அல்லது இந்து சமய வாதியா ? 3) தமிழனுக்கென குறிப்பிட்ட மதம் ஏதும் உலகில் உண்டா? எனக்கு தெரிந்த வரை ,தமிழ் மொழி மற்றும் தமிழ் இனம் என மட்டும்தான் உண்டு . தமிழ் மதம் எங்கிருந்து வந்தது ?. ஓர் இந்து பிற மதத்திற்கு மாறினால் நீங்களும் ஓர் இந்து மதத்தை சார்ந்தவர் என்ற அக்கரையில் கேட்கலாம் .ஆனால் ஓர் தமிழன் மதம் மாறினால் உங்களுக்கென்ன பிரச்சனை ?.1800 வருடங்களில் (ஆங்கிலேயர்கள் இந்தியா தேசத்தை ஆளும் காலத்தில்) அனேக இந்து சமையத்தை சார்ந்த தமிழர்கள் கிருஸ்துவ மதத்தை தழுவ ஆரம்பித்தனர் அதே கால கட்டத்தில் முஸ்லிம் மதத்தையும் தழுவினர் .ஏன் மதம் மாறினார்கள் என ஆராய்ந்தால் தெரியும் இந்து மதத்தின் லட்சணம் . முதலில் இந்த மதம் மாற்றத்திற்கான உண்மையான காரணங்களை படியுங்கள் ஐயா உண்மை விளங்கும் ,
தேனீ அவர்களே ,நான் தமிழை தாய் மொழியாக கொண்ட இந்து குடும்பத்தில் பிறந்தவன் .என்னுடைய 18 ஆம் வயதில் தந்தை பெரியார் கொள்கையில் தீவிர பற்று கொண்டு .இந்து சமயத்தை கை கழுவி விட்டேன் .அன்று முதல் தற்போதைய எனது 44 வயது வரை தமிழனாக மட்டும் வாழ்கிறேன் .நான் பிற மதத்திற்கும் மாறவில்லை .பிறர் மாறுவதை பற்றியும் கவலையில்லை .என் தூரநோக்கு பார்வையெல்லாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் கல்வியை பற்றி மட்டுமே .இன்னொரு குறிப்பு நம் நாட்டில் நிறைய தமிழ் பள்ளிகளில் கிறிஸ்துவ சமையத்தை சார்ந்த மாணவர்களும் கல்வி பயில்கின்றனர் ,காரணம் சமயத்தால் அவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் இனத்தாலும் மொழியாலும் அவர்கள் எப்பொழுதும் தமிழர்கள் .வாசகர் பெருமக்களே இன்னொரு தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து எந்த தமிழரிடமும் பேசும்போது அவரின் சமயத்தை அறிவதற்கு ” நீங்க தமிலவங்க்களா
? கிறிஸ்துவர்களா ? அல்லது முஸ்லிமா ? என கேன தனமான கேள்வியை கேட்காதீர்கள் .வேண்டுமென்றால் நீங்கள் இந்துவா ? கிறிஸ்துவர்களா? அல்லதுமுஸ்லிமா? என கேளுங்கள் தவறில்லை .தமிழ் என்பது மொழி மற்றும் இனம் மட்டுமே ! மதம் அல்ல .நன்றி
தேனீ அவர்களே யாரது கோவிந்தசாமி உதையார் என கேட்டீர்களே .நான் மத சார்பற்ற ஒரு மலேசிய தமிழன் .நான் உதையார் இயக்கத்தை சேர்ந்தவன் காரணம் ,யாரவது என்னிடம் நான் என்ன சாதி என கேட்டாலோ அல்லது சாதி கொள்கையை பற்றி என்னிடம் பேசினாலோ உடனடியாக அந்த சாதி வெறியனை அங்கேயே உதைப்பேன்(வயது வித்தியாசம் பார்க்காமல் ) .
கோவிந்தசாமி .(தயவு செய்து எந்த தமிழரிடமும் பேசும்போது அவரின் சமயத்தை அறிவதற்கு ” நீங்க தமிலவங்க்களா
? கிறிஸ்துவர்களா ? அல்லது முஸ்லிமா ?)
இந்த கருது தமிழர்களின் ஒற்றுமையை உறவுகளை நீர்மூலபடுத்துவதட்க்காக தமிழர் அல்லாதவர்களால் பரப்பபடுகிறது.
ஒன்று:. பெரும்பான்மை தமிழர்களுக்குள் ஒளிந்து தங்கள் இனத்தை மறைப்பது ..
இரண்டு : இஸ்லாமிய கிறிஸ்தவ தமிழர்களை பெரும்பான்மை தமிழர்களிடமிருந்து பிரிப்பது ..
சொந்த அடையாளத்தோடு இருந்தால் ரவுடித்தனம் வட்டித்தொழில் மதுகடைகள் திறந்து சொலிபார்க்க முடியாது நைனா ..
குறிப்பாக தங்கள் இன அடாவடி பயல்களை கொண்டு ஆள் மலேசியா திவாளி கடைகளையும் எடுத்து தங்கள் இனத்தவர்களே செய்ய முடியாதில்ல !! இதுகேல்லாம்தான் தேவைபடுகிறது நாங்களும் தமிலவங்கதான் என்கிற சொற்பதம்
பெரியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு தமிழருக்கு சமயம் இல்லை என்று சமய வாழ்கையில் இருந்து விலகி வாழ்ந்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு. தமிழர் தொன்று தொட்டு சமய வாழ்க்கையைக் கொண்டிருந்தனர். தமிழர் கொண்ட நெறி சிவநெறி. இந்நெறிக்கு சாத்திர நூல்களாக விளங்குபவை சிவ ஆகமங்கள். எப்படி கிறிஸ்துவர்களுக்கு விவிலியமோ, எப்படி முஸ்லிம்களுக்கு திருகுர்ரானோ அப்படியே தமிழர்களுக்கு சிவநெறியே முதன்மையான சமயமாக இருந்து வந்துள்ளது தென் இண்டியாவில். இவ்வாகமங்களின் உட்பொருளை விளக்கிய நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் 14 நூல்கள். நமது இறைவழிபாட்டில் இறைவன்பால் அன்பு கொண்டு பக்தியை வளர்க்க வந்த நூல்கள் திருமுறையாகும். இப்பக்தி நெறிக்கு முதன்மையான சமய குரவர்கள் நால்வர் பெருமக்கள். இப்பொழுது தெரிகின்றதா தமிழரின் சமயம் எதுவென்று. இதையெல்லாம் அறியாது திராவிடக் கழகத்தினர் நம் வாயில் நுழைத்த இறை மறுப்புக் கொள்கையை ஒரு சிலரின் அறிவிலித்தனத்தால் உண்மை என்று நம்பி பொய்யானா வாழ்க்கையை வாழ்பவர்களே இந்த திராவிட கழகமும் அதைச் சார்ந்து நிற்கும் இறை மறுப்பாளர்களும். இவர்களுக்கு ஆரிய மதமும் தெரியாது. தமிழரின் சமய நெறியும் தெரியாது. பெரியார் வழி வந்த திராவிடக் கழகத்தின் சமயத்திற்குப் புறம்பான அறிவுரைகளைக் கேட்டு புத்தி பேதலித்துத் தமிழர் என்பாருக்குச் சமயம் இல்லை என்று கழுத்தை அறுத்துக் கொண்டு முண்டமாக வாழ்வோர் இந்த அரைகுறை நாத்திகர். இவர்கள்தான் கடந்த 80 ஆண்டுகளில் தமிழர் முஸ்லிமாகவும், கிறிஸ்துவர்களாகவும் மாறிப்போவதர்க்கு ஊக்கமளித்தவர்கள். அதற்கு முன்னம் சிறிய அளவில் மாறியோர் கூட்டம் கூட்டமாக மதம் மாற ஆரம்பித்தது. இக்காலக் கட்டத்தில்தான். இந்து மதம் என்னவென்பதையே அறியாத தி.க. காரர்களுக்கு சமயம் என்றால் எப்படி விளங்கும். இந்து மதம் என்பது இண்டிய நாண்டடில் தோன்றிய பல மதங்கள். அதில் ஒன்று ஆரிய மதம். அதைத்தான் பெரியார் உங்கள் முன் காண்பித்து இறை மறுப்புக் கொள்கையை முன் வைத்தார். அவரும் தமிழரின் சமயமாகிய சைவத்தின் பெருமையை அறியாது போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை காரணம் அவர் சைவத்தில் நின்றவர் அல்லவே. வைதீக மத பண்பாடுகளை காசியில் கண்டு பூனூலை விட்டெரிந்து விட்டு வந்தவர்தான் ஆரிய மதக் கோட்பாடுகளை வெறுத்தார். அதில் சேர்ந்தே அடிபட்டது சைவம் காரணம் அக்காலத்தில் சைவ நெறி சைவ வைதீகர்களின் கையில் அகப் பட்டுக் கொண்டது. இன்று சைவ வைதீகர்கள் சைவத்திற்கு காவலன் இல்லை என்று ஆகி விட்டபொழுது நாம் தமிழ் தமிழர் நம் சமய நெறியை அறிந்து கை பற்றுவது அறிவுடைமை. அதை அறியாமல் இன்னும் சமயத்திற்கு வெளியே நின்று கொண்டு தமிழருக்கு அறிவுரை சொல்வது அறிவிலித்தனம். மற்றவை இரவில்.
தமிழருக்குத் தனிச் சமயம் ஒன்று என்றும் இருந்து வந்துள்ளதை முன் கருத்தில் விளக்கி விட்டேன். அது ஆரிய நெறிகளுக்கு மாறுப் பட்டது என்பதை இதற்கு முன் பல இடங்களில் விளக்கி விட்டேன். மீண்டும் இங்கு விளக்கத் தேவை இல்லை. நான் தமிழன். என் சமயம் சைவம். இந்துவல்ல. அதனால் இந்து சந்துக்களில்லெல்லாம் யாம் விளையாடத் தேவை இல்லை. ஆலயங்களைப் பற்றி பொதுவாக குறிப்பிடும்பொழுது இந்து என்று குறிப்பிட வேண்டியுள்ளது காரணம் இன்று தமிழரும் சரி பிறரும் சரி தாங்கள் என்ன நெறியில் நிற்கின்றோம் என்று அவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது. ஏதோ ஒரு தெய்வத்தைக் கும்பிடுகின்றோம் என்ற எண்ணத்தில் இன்று பல தெய்வ வழிபாட்டில் நிற்கின்றனர். அதனால் ஆலயம் பொது என்று பேசும் பொழுது இந்து ஆலயம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது. நீங்கள் புரிந்துக் கொண்ட இந்து மதவாதி நான் அல்ல காரணம் இந்து என்பது பல சமய நெறிகள் அடங்கிய ஒரு குழுமம். சைவம் என்றும் தனி ஒரு பெரு நெறி என்பதை தமிழரில் பலர் அறியாமல் போனது நமது போதாத காலம். அதனால்தான் ஒரு தமிழன் மதம் மாறினால் உங்களுக்கு என்ன என்று கேட்கின்றீர்கள். ஒரு கிறிஸ்துவனோ அல்லது முஸ்லிமோ மதம் மாற அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லையே! ஏன்? அவர்கள் அவரவர் சமய நம்பிக்கையில் திடமாக நிற்கின்றனர். தமிழர் என்பார் இன்று கிறிஸ்துவ மதத்தில் நின்று கொண்டு இதர தமிழரை மதம் மாற்ற கங்கணம் கட்டிக் கொண்டு திரிவதை தமிழர் எழுச்சிப்பறை கோலாலம்பூரில் நடப்பதை எடுத்துச் சொல்வதில் இருந்து தெரியவில்லையா. இறை மறுப்பாளர்களுக்கு தமிழர் மதம் மாறுவதில் கவலை இல்லை என்பதில் ஆச்சரியம் என்ன இருக்க வேண்டி இருக்கு. நீங்களே இறை நம்பிக்கையில் இல்லை. அப்புறம் எவன் எம்மதம் போனால் உங்களுக்கு என்ன என்று இருப்பதில் ஆச்சரியம் என்ன? இவ்வாறு இறை நம்பிக்கை அற்று இருக்கும் தமிழர் வெகு சிலரே. மத மாற்று விவகாரத்தில் நான் அறிவுறுத்துவது இவ்வாறான இறை நம்பிக்கை அற்றவர்களுக்கு அல்ல. பெருவாரியான தமிழர் இறை நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு மத மாற்றுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனது கடமை. இந்த கடமை இறை நம்பிக்கை அற்ற தமிழர்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது சொல்லித் தெரியத்தான் வேண்டுமா? மேலும் ஒன்றைச் சொன்னீர்கள். கிறிஸ்துவர்களானாலும் தத்தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றார்கள் என்று சொன்னிர்கள். இதில் ஒரு பகுதியினர் தமிழ் மொழி பற்று கொண்டு அனுப்பி வைக்கின்றனர். இன்னொரு பகுதியினர் மலாய் மொழி பள்ளிக்குச் செல்லும் தம் பிள்ளைகள் அங்குள்ள முஸ்லிம் மத சித்தாட்டத்தில் சிக்கி விடக் கூடும் என்று பயந்து வேறு வழி இல்லாமல் தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றார்கள். இங்கேயும் யு.பி.எஸ்.ஆர். பரிட்ச்சைக்கு இறை வணக்கம் செய்ய கிறிஸ்துவ ஆசிரியைகள் அவர்களை திருச்சபைக்கு கூட்டிச் செல்ல மறப்பதில்லை. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதான். நீங்கள் சொல்லும் தமிழரும் நாங்கள் நடைமுறையில் பார்க்கும் கிறிஸ்துவ தமிழரும் ஒன்றல்ல. ஒரு தமிழ் மாணவி இந்திய மதத்தில் நிற்பதைப் பார்த்து அம்மாணவியின் பூர்வீகத்தை ஆராய்ந்து இன்று கிறிஸ்துவ வழிபாட்டிற்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்கும் பொழுது, தமிழனுக்கு சமயம் இல்லை என்று இறை மறுப்பாளராக வாழ்வோருக்கு தமிழருக்கு அறிவுரை சொல்ல அருகதை எங்கிருக்கு?
இன்னொன்றையும் கூடவே சொல்லி விடுகின்றேன். இன்று தமிழ் பள்ளிகளில் ஒரு நூதமான முறையில் பிற மத போதனைகளை நுழைக்கவும் பிற இன மக்களின் பண்பாட்டை அறிமுகப் படுத்தவும் புத்தங்கள் அச்சடிக்கப் பட்டு தமிழ் பள்ளி மாணவர்கள் படிக்க இலவசமாக கொடுக்கப் படுகின்றது. இதை ஆசிரியர்கள் அறிவார்கள். அனால் வெளியே சொல்ல அவர்களுக்குத் துணிவில்லை. அதனால் அவ்வகையான புத்தகங்கள் அதிகாரம் உள்ளோர்களால் பள்ளிக்கு அனுப்பி வைக்கப் பட்டு மாணவர்கள் படிக்கும் வண்ணம் வகுப்பறையில் பொதுவிடத்தில் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தப் படுகின்றார்கள். என்னே இந்நாட்டு கல்வித்துறையில் நடக்கும் அட்டூழியங்கள்.
இப்பொது புரிந்ததா வைணவத்தின் காரணத்தை,அவனன்றி ஒரு அணுவும் அசையாது! அனைத்தும் செயல்! சைவத்தின் காப்பு வைணவம்! சிவாய நாம!
தமிழர்கள் நல்ல மனிதர்களாக திருக்குறளை ஏற்று தங்களின் வாழ்கை வழிகாட்டியாக கொள்ள வேண்டும்– நம்மவர்கள் உயர்வு தாழ்வு இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தால் நாம் முன்னேற முடியும் அத்துடன் மற்றவர்கள் நம் தலையில் மிளகாய் அரைக்க மாட்டார்கள்– துணிய மாட்டார்கள்.
உண்மைதான். தமிழர் அறவோர்களாக வாழ வழிக்காட்டிய ஞானி வள்ளுவன். இதனை தனது முதல் குறளிலேயே உணர்த்தியவர்தானே அந்த ஞானி.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
நன்றி: Thirukkural.com
கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
இவ்வாறு சொன்ன கலைஞருக்கு “ஆதி பகவனுக்கு” விளக்கம் சொல்லத் தெரியாமல் போனது ஏன்? இறை மறுப்பில் இருந்துக் கொண்டு ஆதி பகவனுக்கு எப்படி விளக்கம் சொல்ல முடியும்? எம்பெருமான் அவருக்கு அந்த ஞானத்தைக் கொடுக்கவில்லை. அது அவரின் ஊழ்வினை.
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
மு.வ. – விற்கு அறிவைக் கொடுத்த கடவுள் தைரியத்தைக் கொடுக்கவில்லை. அதனால்தான் அவரால் அந்த கடவுளைக் காட்ட இயலவில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
சாலமன் பாப்பையா தான் கொண்ட கிறிஸ்துவ நெறியில் நின்று கொண்டு ஆண்டவன் சங்கற்பித்த மாத்திரத்தில் உலகத்தைப் படைத்தான் என்ற அறிவைக் கொண்டு “உலகம் கடவுளில் தொடங்குகின்றது” என்று உரை எழுதிப் போந்தார்.
ஏன் இம்மூன்று உரைகளிலும் இவ்வளவு குளறுபடிகள். தமிழர் எந்த உரையைக் கொண்டு வள்ளுவன் ஞானத்தை உணர்வது?
தொடரும்
முதல் குறளுக்கு பரிமேலழகர் உரை:
“அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக;”
பரிமேலகர் நம்மை விட்ட சுற்றல் இருக்கே. இது ‘அப்பா டக்கர்’ சுற்றல். மேலே கூறிய வரிகளில் வள்ளுவன் தான் வணங்கும் கடவுளுக்கு வாழ்த்துக் கூறியதை ஏற்றுக் கொண்டு அது எந்தக் கடவுள் என்று விளக்கும்போது அவர் கொண்ட இறுதி முடிபானது அவர்தம் வைணவ முகத்தைக் காட்டி விட்டது.
பரிமேலகர் கொடுத்த மேல் விளக்கம்:
“என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.”
இவர் சொல்வது: வேதாந்தம் கூறும் குணத்தத்துவ மாயை எனப்படும் பிரகிருதி மாயையில் இருந்து சாத்வீகம் முதலாகிய முக்குணங்களைக் கொண்ட மும்மூர்த்திகளாகிய பிரம்மா, திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் பிரமத்துடன் இயைபு உடையவர்களாததால், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என அறிக என்று பகர்ந்தார்.
திருவள்ளுவர் வேதாந்தியா? சித்தாந்தியா? திருவள்ளுவர் வேதாந்தி என்று பரிமேலகர் கூறுவாரேயானால் கடவுள் வாழ்த்தில் மீதம் இருக்கும் 9 குறளுக்கும் அவர் கொடுத்த விளக்கத்தையும் காண வேண்டும்.
9 வது குறளில் வரும் ” எண்குணத்தான்” என்பதற்கு பரிமேலகரின் உரை:
“எண் குணத்தான் தாளை வணங்காத் தலை – எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது.”
முதல் குறளுக்கு வள்ளுவனின் வழிபடு தெய்வம் மும்மூர்த்திகள் என்று சொல்லி விட்டு அதே கடவுள் வாழ்த்தில் கீழே வரும் “எண்குணத்தானுக்கு” சிவனின் தன்மையைக் கூறி குழப்புவானேன். வள்ளுவன் வேதாந்தியா? சித்தாந்தியா? ஏன் இந்த முரண்பாடு?
திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழரைக் குழப்பிய குழப்பு இருக்கே, அது உங்க வீட்டு எங்க வீட்டு குழப்பம் இல்லை. இப்படியெல்லாம் தமிழன் குழம்புவதற்கு காரணம் என்ன? அவர்தம் சமயத்தை தமிழர் முழுமையாக அறியவில்லை. திருக்குறளின் வரலாற்றுப் பின்னணியை அறியவில்லை. நம் அறியாமையை வைத்துக் கொண்டு இறை மறுப்பாளர்கள் ஒரு பக்கம், கிறிஸ்துவர்கள் ஒரு பக்கம் (இதில் பாவாணரும் அடங்குவார்), வைணவர் இன்னொரு பக்கம். இவர்கள் மத்தியில் சிவன் படும் பாட்டைப் பார்த்தீர்களா? தொடரும் .
யார் யாரோ திருக்குறளுக்கு உரை எழுதும்போது தேனீயும் ஓர் உரை எழுதினால் என்ன குறைந்தா விடப் போகின்றது?
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
“ஆதி பகவன்” என்ற சொற்றொடருக்கு முதலில் பொருள் விளக்கம் காண்போம். “ஆதி” என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் சரி நிகர் பதம் “பர” என்பதாகும். “பகவன்” என்ற வடமொழி சொல்லுக்குப் பொருள் “எங்கும் வியாபித்து இருப்பவன்” என்பதாகும் அப்படி எங்கும் வியாபித்து இருப்பவன் “ஈஸ்வரன்”.
ஆக “ஆதி பகவன்” என்பதற்கு தமிழில் பொருள் = பர + ஈஸ்வரன் = பரமேஸ்வரன். அக்காலத்தில் சிவனை பரமேஸ்வரன் என்ற பெயரிலேயே குறிப்பிடப் பட்டுவந்துள்ளது. இதற்கு சிவாகமங்களில் ஒன்றான பரமேஸ்வர ஆகமமே ஆதாரமாகும்.
அடுத்து, “அகர முதல எழுத்தெல்லாம்” என்பது “அ” முதலாகிய அனைத்து எழுத்துக்கள் என்பதாகும்.
“முதற்றே உலகு” என்பதானது முதன்மையான பரமேஸ்வரனை பற்றுக்கோடாய்க் கொண்டு நிற்கும் நாதம் விந்து என விரியும் சொற்பிரபஞ்சத்தை (வாக்கு உலகத்தைக்) குறித்ததாகும்.
இக்குறளுக்குப் பொருள்: அ முதலாகிய எழுத்துக்கள் அனைத்தும் தோன்றுமிடம் முதல்வனாகிய பரமேஸ்வரனை (சிவனை) பற்றுகோடாய் கொண்டு நிற்கும் சொற்பிரஞ்சமே. இதன் உட்பொருள், எழுத்துகள் அனைத்திற்கும் முதல்வனாக விளங்கும் பரமேஸ்வரனை (சிவனை) வணங்கி இக்குறளை இயற்றுகின்றேன் என்பதாகும். மேலும் ஒரு படி போனால் இக்குறளே அம்முதல்வனின் உரையாகும் என்பதாம். சைவத்தில் சரியையில் ஞானம் என்பது திருவள்ளுவரின் நிலையை உணர்த்தும்.
இவ்விளக்கத்தைக் காண்பார் மேலும் ஒரு கேள்வியைக் கேட்கலாம். சித்தாந்தியான வள்ளுவன் ஏன் பரமேஸ்வரனை வடமொழியில் குறிக்க வேண்டும்? கடைக்கால சங்கத்தில் பாண்டியனின் அவையில் இருந்த புலவர்களில் பெரும்பாலானோர் பிராமண குலத்தைச் சார்ந்தோர் என்பதால் அவர்களையும் பிரீதுபடுத்த எண்ணி தன் ஞானத்தால் வார்த்தை ஜாலத்தைக் கொண்டு தன் குறளை அவையேற்ற முற்பட்டார். இருந்தும் பிராமண புலவர்கள் விட்ட பாடில்லை.அவ்வையார் வந்து குறளை கரையேற்றினார். அன்றே குறளுக்கு அவ்வளவு சோதனை என்றால் இன்றும் குறளுக்கு அதே சோதனைதானா? சோதனைமேல் சோதனை போதுமடா சாமி!. கொசுறு: வள்ளுவரே வந்து எம் கனவில் இந்த விளக்கத்தைக் கொடுத்து விட்டுப் போனார். இதை பிறரிடம் சொல்லி செம்பருத்தியில் உள்ள இரகசியத்தைக் கசிய விட்டு விடாதீர்கள்!
பிதா,மாதா,குரு,தெய்வம்
பிதா வுயிர் கொடுத்தார்,
மாதா வளர்த்து கொடுத்தார்,
குரு அறிவு கொடுத்தார்,
தெய்வம் ஆற்றல் கொடுத்தார்,
கடவுள் வாழ்த்து 10 பாடல்களும் குருவையே சாரும் என்பது என் கருத்து,
வாழ்க நாராயண நாமம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற சொற்றொடர் ஒரு வாக்கியமா? எழுவாய், செயப்படுபொருள் இல்லாத தமிழ் வாக்கியம் உண்டா? இச்சொற்றொடரின் பொருள் தன்னகத்தே அடக்கியுள்ளது. தாய் தன் பிள்ளைக்கு தகப்பனைக் காட்டுவாள். தகப்பன் தானாகவே அப்பிள்ளைக்கு குருவாக நின்று உபதேசிப்பான் அல்லது ஒரு குருவினைப் பெற வழி காட்டுவார், குருவானவர் இறைவனை அடைய வழி காட்டுவார் என்பதே பொருளாகும். எங்கேயாவது குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஆன்ம குருவைக் காண முடிகின்றதா? ஞான குருவாகிய அந்த பரமேஸ்வரனையே வள்ளுவர் வாயார வாழ்த்திப் பாடினார்.
பரம்பொருளின் தன்மையை உணரும் வரை உடலும் அறிவும் மாயை எனும் குழப்பத்தில் தத்தளிக்கும். பூமியில் வாழும் மனிதனுக்கு மற்ற கிரகங்கள் தன்னை சுற்றி வருவது போல் காட்சி அளிக்கிறது….உண்மை அதுவா? தன்னலத்தை அகற்றும் பொது உடல்,அறிவு,ஆன்மா ஒற்றுமையை மட்டும் காணும்.நமக்கு அளித்ததை மற்றவர்களும் பயனடைய வேண்டும் என்பது அவன் விருப்பம்.அனுபவம் இல்லாத அறிவு சதா சித்தாந்ததையும் வேதாத்தையும் புரட்டி கொண்டே இருக்கும்.அனைத்தையும் ஒன்றாக காணும் வரை தெளிவு பிறக்காது அது அவரவர் கர்ம பலன்.சிவன் எந்த பாடும் படவில்லை மாறாக நாமே நம்மை பாடா படுத்தி கொண்டிருக்கிறோம்.ஒற்றுமையை காணுங்கள் அனைத்தும் கிட்டும்! ஆட்சி அதிகாரம் எல்லாம் எண்ணற்ற யுகங்களை இயற்றி இயக்கி கொண்டிருக்கும் அவன் செயல்…எல்லாம் சிவமயம்!
https://www.youtube.com/watch?v=25f2E22KH_gஅமாமாங்கப்பா ,,,தமிழர்களுக்கு பிரச்சனைன்னா முன்னுக்கு நிப்பாரா சிம்பு ,,,,அந்த தமிழ் மொழியை கொச்சை படுத்தி பாடிய பாடலை கேளுங்கப்பா சூப்பரா இருக்கும் ,,
பாடல் தலைப்பே ஏன்னா தெரியுமா ??
“Beep song simbu enna p*****ki love tamiL “பதிவிறக்கம் செஞ்சி கேளுங்கப்பா ??தமிழ் மொழி சிரிப்பா சிரிக்கிறதா கொஞ்சம் கேளுங்கப்பா ?? செம்பருத்திக்கு இந்த படலை கேட்டு இருக்க மாட்டார்கள் ,அதனால் தான் நான் செம்பருத்திக்கு உதவி செஞ்சேன் ,,,தைரியம் இருந்தால் போடுங்கப்பா
தமிழர்கள் பிரச்சனைக்கு முன்னுக்கு நிக்கும் சிம்பு ???? பெண்களுக்கு ஒரு பிரச்சனைஎன்றால் ஆபாச வார்த்தையால் பாட்டு பாடும் நம்ம செம்பு ,,,
சிம்புவின் – அபாரமான பாடல் – வாழ்த்துக்கள்..
பெரியார் பேசாத நாகூசும் ஆபாச வார்த்தைகளா – ஐயோ அபாச வார்த்தைகளின்அடையாளமாய் பேசி இருக்கும் பெரியாருக்கே சிலை வைத்து போற்றிகொண்டிருக்கும் தமி்ழா…
இன்றைய இளைஞர்கள் சர்வசாதரணமாக பயன்படுத்தும் பு……டை (“ண்” சென்சார் செய்யப்பட்டு தானே உள்ளது) என்கிற வர்தைதையை தன் பாடலில் எதார்த்தமாக பதிவு செய்த சிம்புவை நீங்கள் எதிர்ப்பது யாருடைய தூண்டுதலாலோ????
பல திரை படங்களில் அபாச வார்த்தையின் இடை எழுத்துகள் சென்சார் செய்யப்பட்டு உபோயோகபடுத்தபட்ட போது பொங்கி எழாத மகளிர் பாதுகாப்பு இயக்கங்களும் சமூக சீர்திருத்த வாதிகளும் இன்று சிம்புவுக்கு எதிராக மட்டும் பொங்கி எழுவது ஏன்??? உங்களை தூண்டிவிட்டது யார்?
இவன் மறத்தமிழனின் மகன் என்பதாலா????
மொத்தத்தில் அந்த ஒருவார்ததையை தவிர அருமையான பாடல் தந்த சிம்புவிற்கு வாழ்த்துக்கள்…
# என்னமோ சிம்பு மட்டும் தான் கெட்ட வார்த்தை பேசும் அய்யோக்கியன் மாதிரியும் சிம்புவுக்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றவர்கள் எல்லோரும் ஒழுக்க சிகாமணிகள் போலவும் பேசுறது உலக மகா நடிப்புடா சாமி #