சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர். அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாமா என பேச ஆரம்பித்தனர்.
சில தினங்களில் நடிகர் சங்க நிர்வாகிகளான கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் நிவாரண நிதி அளிப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தனர். சில நடிகர்கள் அடுத்தடுத்து நிவாரணத் தொகை வழங்கினர்.
நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் டிசம்பர் 1-ம் தேதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம். இவருக்குத் தான் நாட்டிலேயே மிகப் பெரிய ரசிகர் மன்றம் எல்லாம் உண்டு. அவர்கள் இந்த வெள்ள நிவாரணம் எதிலும் ஈடுபட்டதாக தகவலே இல்லை. தலைவர் மாதிரியே இவர்களும் அமைதியாகிவிட்டனர்.
அதன் பிறகு இந்த நடிகர் அவ்வளவு தந்தார், அந்த நடிகர் இவ்வளவு தந்தார் என்று அளந்துவிட்டார்கள் அவரவர் ரசிகர்கள். வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர் புண்ணியத்தால் வழங்காத பணமெல்லாம் நிவாரண நிதியாகக் குவிந்ததுதான் சோகம்.
நடிகர் விஜய் ரூ 5 கோடியுடன் காத்திருக்கிறார், தன் கல்யாண மண்டபங்களையெல்லாம் மக்களுக்கு திறந்துவிட்டார் என்றெல்லாம் தகவல் பரப்பினர். விசாரித்ததில் அவர் எந்த நிதியும் தரவில்லை மண்டபங்களையும் திறக்கவில்லை என தெரிய வந்தது. அதுவும் அந்த தேதிகளில் அந்த மண்டபங்களில் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன.
அடுத்து அஜீத் ரூ 60 லட்சம் அள்ளிக் கொடுத்தார். தன் வீட்டைக் கூட மக்களுக்காக திறந்து வைத்தார் என்று றெக்கை கட்டிப் பறந்தது இன்னொரு செய்தி. ஆனால் அவரும் அப்படி எதுவும் தரவில்லையாம். பெருமழை நாளன்று அவர் வீடு பூட்டப்பட்டிருந்ததாம்.
கமல் எந்த நிதியும் வழங்கவில்லை. இப்படி வழங்காத நிதிக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி. இதற்கு முதல் காரணம் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள்தான். இந்த பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு, இவரே இவ்வளவு கொடுத்துவிட்டார் அவர் ஏன் கொடுக்கவில்லை என்று இணையத்தில் சண்டையிட்டு கொண்டது தான் மிச்சம்.
-http://www.cineulagam.com
“When we are born, we cry that we are come to this great stage of fools.”
― William Shakespeare
(இப்படி வழங்காத நிதிக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி. இதற்கு முதல் காரணம் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள்தான். இந்த பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு, இவரே இவ்வளவு கொடுத்துவிட்டார் அவர் ஏன் கொடுக்கவில்லை என்று இணையத்தில் சண்டையிட்டு கொண்டது தான் மிச்சம்.)
திருந்தாத சென்மங்கள், இருந்தென்ன?, இறந்தென்ன?
கமல் ஹாசன் அந்தர் பல்டி, தமிழகத்தில் வெளியாகும் பத்திரிக்கைகள் கமல் ஹாசனை வைத்து காமடி பண்ணுகின்றன ….இது இவ… தேவையா? வாயையும் சு…. பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதானே.
இவர்களையெல்லாம் வீட நமது நாட்டு ஹனிபா டெக்ஸ்டைல்ஸ் எவ்வளவு மேல் 50 லட்ச ருபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர்.
ஷாருகான் 1 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கினார், இவரைத்தான் வந்தேறி பார்பனன் பாகிஸ்தானுக்கு போக சொன்னார்கள்.
இது சென்னை மக்கள் மற்றும் தமிழ் நாடு மக்களுக்கு ஒரு நல்ல பாடம் .
இப்பேயாவது திருந்தி … குடும்பத்தை பார்க்குர வழிய பாருங்க. அரசியல் , சினிமா , ஜாதி , மதம் எல்லாத்துக்கும் ஆப்பு இயற்கை பேரிடர் இருந்து வந்திருக்கு.
பிச்சைகார கூட்டாடிகள். எச்சில் கையால் காக்கை ஒட்டாத கருமிகள்
கமல் ஹாசன் பத்திரிக்கைக்கு கொடுத்த அறிக்கை உண்மை மக்கள் வரி பணம் எல்லாம் என்னவானது ?என்று பின் ஆளுங் கட்சியால் மிரட்டப் பட்டதால் மிரண்டுப் போய் அந்தர் பல்டி அடித்து விட்டார் !
உலகில் அதிகம் படிப்பறிவில்லாத மக்கள் வசிப்பது தகர தமிழா நாட்டில் என்று ஒரு முறை ராணி சஞ்சிகையில் படித்த நினைவு ……பக்கத்தில் இருக்கும் பாதிக்க பட்ட சொந்த மக்களுக்கு உதவி செய்யாத இந்த பிறவிக்கெல்லாம் …போஸ்டர் ..பால் அபிசேகம் …குரங்கு மன்றங்கள்
போஸ்டர் விட்டு பால்அபிசேகம்நடிர்களுக்குசெய்யும்இந்ததமிழ்மனிதர்கள்