தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு விளைபொருள்கள், உரங்கள், விவசாயக் கருவிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.
திருச்சி திருவானைக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் “வேளாண் புரட்சி’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
இஸ்ரேல் நாட்டில் மண்வளம் பெரிய அளவில் இல்லை. ஆனால், அங்கு பல்வேறு புதுமைகளை புகுத்தி விவசாயம் செய்வதால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுகின்றனர். தமிழகத்தில் எல்லா மண்வளங்களும் இருந்தும் விவசாயத்தில் புதுமை புகுத்தப்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் கோவையில் உள்ளதுபோல, தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய இடங்களிலும் வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். இஸ்ரேல், நெதர்லாந்து நாட்டில் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு, இங்கு விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு எவ்வித இலவசப் பொருள்களையும் தரமாட்டோம். கல்வி, சுகாதாரத்தை இலவசமாக அளிப்போம். அதுபோல, விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், காப்பீடு, கருவிகள், ஒரு ஊராட்சிக்கு ஒரு டிராக்டர் போன்றவற்றை இலவசமாகத் தருவோம்.
விவசாயிகளுக்கு 5 குதிரைத்திறன் கொண்ட சூரியசக்தி மோட்டார்களை வழங்குவோம்.
தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி போன்ற மாவட்டங்களில் விளையும் விவசாயப் பொருள்களுக்கான வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், மதிப்புக்கூட்டப்பட்டு விளைபொருள் விற்பனைக்கு அனுப்பப்படும்.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்திக்கு ஆகும் செலவைக் காட்டிலும் கூடுதலாக 50 சதவிகித விலை நிர்ணயித்து வழங்கப்படும்.
மேலும், விவசாயிகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை கடன்பெற்ற விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார் அன்புமணி ராமதாஸ்.
இந்த நிகழ்வில் பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அன்புமணி ராமதாஸ் பதிலளித்துபேசினார்.
-http://www.dinamani.com
டேய் அப்படியே நாம் தமிழர் கட்சிய காப்பி அடிகாதிங்க்கடா.. சுயமா யோசிங்கடா முட்டா பயலுங்க்கடா…
இந்தியாவில்-அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் இலவசம் தான் வாக்குக்கு ஆயுதம்-அவ்வளவு மேதாவிகள் நம் தமிழ் மக்கள். தினசரி அங்கு நடக்கும் போராட்டங்களும் அநியாயங்களும் கணக்கில் அடங்கா. சமூக நடப்புகள் மிகவும் ஈன மானவை- அங்கு பெரிய பேச்சுக்குதான் மதிப்பு -செயலுக்கு அல்ல.
பா.ம.கவின் ஜாதி திட்டம் – தமிழ்நாட்டை 25ஆகப் பிரித்து 25 ஜாதிகளூக்கும் கொடுக்கப்படும் – அன்புமணி ராமதாஸ்
இங்கு சிலரின் கருத்துகளை படித்தால் சிரிப்பு தான் வருகிறது …….தவளை தன் கண்களை மூடிகொண்டால் உலகமே இருண்டுவிட்டாக என்னுமாம் ……அப்படி தான் உள்ளது இந்த கிணற்று தவளைகளின் கருது……வாழ்க தமிழ் சினிமா நடிகர்கள் …..சினிமா நடிகர்/நடிகை மாயை முட்டாள்கள் உள்ளவரை மறையாது ……சினிமாவில் மற்றவன் பணத்தில் பிரபலம் ஆகி தன்னை பெரி அறிவு ஜீவியாக என்னும் நடிகனை / நடிகைகளை கண்டால் வயிறு புண்ணாகும் வரை சிரிக்க வைக்கிறது ….சினிமா பிரபலம் இல்லை என்றால் இந்த நடிகர்களை யாருக்கு தெரியும் ……இவர்கள் பின் செல்லும் கூட்டத்தை பார்த்தல் தமிழனை ஏமாற்றுவது மிக சுலபம் என்பது வெட்ட வெளிச்சம் ….