கோல்கட்டா : இந்தியாவை ஒட்டு மொத்த உலகமே தலைவணங்கக் கூடிய நாடாக உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது என அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
கோல்கட்டாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியாவை வளம் பொருந்திய நாடாக, சுரண்டலற்ற, சுயமரியாதை கொண்ட நாடாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. ஒட்டுமொத்த உலகமும், “பாரத் மாதா கீ ஜே’ என முழங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதனை செயல்படுத்த நாம் நாட்டுக்காக வாழ வேண்டும்.
நம் நாடு பிளவடைந்து பாக்., உருவாகிய பிறகு, “பாரதம்’ என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடவில்லை. அவர்கள் ஏற்க முடியாத பண்புகள் பாரதத்தில் இருந்ததே அதற்கு காரணம். வேதங்கள் தோன்றிய இடங்களும், சமஸ்கிருத மொழி மற்றும் அதன் இலக்கணங்கள் தோன்றிய இடங்களும் தற்போது பாகிஸ்தானில்தான் உள்ளன. ராமாயணம் நம் நாட்டின் பழங்கால வரலாறு ஆகும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தலைவர் பதவியில் இருக்கும் நான் அதிர்ஷ்டசாலி. இவ்வாறு அவர் கூறினார்.
-http://www.dinamalar.com


























இவன் என்ன மடையனா? ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.இந்தியாவை மற்ற நாடுகள் சுண்டக்காய் நாடுகள் கூட மதிக்காத காரணம் ? இது கூட புரிய வில்லையா? ஒரு புள்ளியான சிங்கப்பூரை மதிப்பதற்கு என்ன காரணம்? இந்த ஈன ஜென்மங்களுக்கு தெரியும் ஆனால் தெரியாது. எல்லாமே தங்களின் வழியாக செயல் பட வேண்டும் என்ற நப்பாசை. நாட்டை ஊழல் இல்லாமல் சுத்தமாக நாகரிகமாக இருக்க வழிகளை காண வேண்டும்.அத்துடன் மரியாதையுடன் நடக்க அங்குள்ளவர்களுக்கு புரிய வேண்டும். நகரத்தின் மத்தியிலேயே மானமில்லாமல் சிறுநீர் கழிக்கும் செயல்களை கட்டோடு ஒழிக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ-நடக்குமா? நாடு நல்ல வழியில் நடந்தால் மரியாதை கிடக்கும்.
“இந்தியாவை வளம் பொருந்திய நாடாக, சுரண்டலற்ற, சுயமரியாதை கொண்ட நாடாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது”
இந்த ஆளு என்ன கனவுலகில் வாழ்ந்து கொண்டிருகின்றாரா?