பெருந்தலைவரிடம் 65 வயதில் முதலமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்டீர்களே, அவருடைய பேரன் கேட்கிறேன், 94 வயதில்உங்களுக்குத் முதலமைச்சர் பதவி தேவையா என்று நாம் தமிழர் கட்சியின்ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
திருவாரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பளார் சீமான் பேசுகையில்,
கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி ஒருமுறையாவது சட்டப்பேரவைக்கு போனாரா? 94 வயதில் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார். நடக்க முடியலை, உட்காரமுடியலை, பத்து பேர் பராமரிக்க தேவைப்படுகிறார்கள். எப்படி ஆட்சி செய்யப்போகிறார்.
65 வயதான பெருந்தலைவர் காமராஜரைக் கேட்கிறார் இந்தவயதில் உங்களுக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டுமா என்று? அதற்கு காமராஜர் சொல்கிறார். “அடபோப்பா, நீ உட்கார்ந்த நாற்காலியில நான் உட்காருவேனா?” என்று.
அந்தப் பெருந்தலைவரிடம் 65 வயதில் முதலமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்டீர்களே, அவருடைய பேரன் கேட்கிறேன், 94 வயதில் உங்களுக்குத் தேவையா முதலமைச்சர் பதவி.
பெருந்தலைவர் காமராஜர் தான் இந்த நாட்டில் தூய்மையான நல்லாட்சி நடத்திய தலைவர். அவரையே கல்லூரி மாணவரான தெலுங்கர் சீனிவாசனைக் கொண்டு போய் நிற்க வைத்து தோற்கடித்தார்கள் திமுகவினர்.
காமராஜரை சொந்த நிலத்தில் யார் தோற்கடித்தார்களோ, அவர்களை அவர்களின் சொந்த நிலத்தில் தோற்கடிக்க வேண்டும்.
அப்போதுதான் வரலாற்றில் இந்த நிலம் தாங்கி இருக்கின்ற பெரும்பழி தீரும். வஞ்சம் வைத்து தீர்த்தாண்டா தமிழன், தோற்கடிச்சு அனுப்பிட்டாண்டா தமிழன் என்று சொல்லுவதற்கு நீங்கள் வாய்ப்புத் தர வேண்டும்.
அதிமுக அதுவே சரிந்து விழும். கருணாநிதியைத் தோற்கடிப்பதில் தான் நமது இனமானம் காக்கப்படும்.
மே 19ம் திகதி வாக்கு எண்ணும் போது சொந்தத் தொகுதியில் கருணாநிதி தோற்றார் என்கிற செய்தியைக் கேட்கும் போது நான் நினைப்பேன்,
என்னுடைய திருவாரூர் அப்பன், ஆத்தா, சித்தப்பன், பெரியப்பன், எல்லாம் உப்பு போட்டு சோறு தின்கிறார்கள் என்று. மானத் தமிழன் இருக்கிறான் என்று. இவ்வாறு சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
-http://news.lankasri.com
சோற்றில் உப்பு போட்டுச் சாப்பிடும் தமிழர் திருவாரூரில் இருகின்றனரா என்று தேர்தலுக்குப் பின் பார்ப்போம்.
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வெற்றி பெற்று விட்டால்,
உங்களுடைய திருவாரூர் அப்பன், ஆத்தா, சித்தப்பன், பெரியப்பன், எல்லாம் உப்பு போட்டு சோறு தின்கிற மானத் “தமிழன்” இல்லை என்று கூறலாமா சீமான் நாடாரே ?
இவரே உப்பில்லாமல் தான் சாபிடுகிராராமே. ஹ,… ஹ…
தமிழர்கள் வடுக வந்சகத்தால் வீழ்ந்த கதை ..
கண்டி நாயக்கர் – தமிழ்தேசிய எழுச்சி ஆவணப்படம்.
இந்திய மண்ணில் 11ம் நூற்றாண்டுக்கு பின்னர் தமிழர்கள் …இல்லை ..எல்லாம் தெலுங்கு DNA பிறவிகள் ..13ம் நூறாண்டில் இருந்து 15ம் நூற்றாண்டு வரை தெலுங்கர்கள் ..நல்ல விளைச்சல் செய்தார்கள் ..விளைவு இன்றைய தகர தமிழ் நாடு