காஷ்மீரின் உரி இராணுவ முகாமில் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உதவி செய்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பைசல் உசேன் அவான்(வயது 20), யாசின் குர்ஷீத்(வயது 19) கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் தேசிய புலனாய்பு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் பிரச்சனையிலிருந்து உலகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்தியாவே உரி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதற்கு பழிவாங்கும் விதமாக எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், இந்தியாவை அணு குண்டை வீசி அழிப்போம்.
பாகிஸ்தானின் வான் பிரதேசத்தில் இந்தியா அத்துமீறினால் பாகிஸ்தான் விமானப்படை சரியான பதிலடி தரும் என்று தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com