தமிழன் என்பதால் கொன்று விட்டீர்கள், கேரளாவில் இதை செய்ய முடியுமா? முன்னாள் தொகுப்பாளர் பரபரப்பு புகார்

nijamசின்னத்திரையில் அனைவரது நினைவிலிருக்கும் செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி.

கணீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் தான் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குள்ளாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு விலகிய இவர் தற்போது இந்த நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

பெருமையுடன் தொடங்கி வைத்த நிகழ்ச்சியை தற்போது பாழாக்கிவிட்டார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்த தொடங்கிய பிறகு எத்தனை பேர் தற்கொலை செய்து இறந்தார்கள் தெரியுமா என்று கொந்தளித்துள்ளார். இப்படி ஒரு சம்பவத்தை கேரளாவில் செய்தால் சும்மாவிடுவர்களா? தமிழன் என்பதால் தான் பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் தொடர்ந்து செய்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள் என தலைப்பிலிருக்கும் உண்மை நிகழ்ச்சியில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஸ்ரீபிரியா போன்ற மூத்த நடிகைகள் புகார் தெரிவித்துவந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளரே இப்படியொரு புகாரை தெரிவித்துள்ளார்.

-http://www.cineulagam.com