திருவனந்தபுரம்: விபத்தில் சிக்கிய தமிழருக்கு உரிய சிகிச்சை வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், பரிதாபமாக அவர் உயிரழந்தார். தமிழகத்தில் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த மரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி, சமீபத்தில் கொல்லம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆனால், அவருக்கு, சிகிச்சை வழங்க, கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
முருகன் ஒரு வேறு மாநில கூலித் தொழிலாளி என்றும், அவரிடம் பணம் இல்லை என்றும், உறவினர்கள் இல்லை என்றும் காரணம் தெரிவித்த மருத்துவர்கள் சிகிச்சையளிக்கவில்லை. உரிய சிகிச்சையின்றி, 7 மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடிப்பு செய்த நிலையில், முருகன், உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியுள்ளார்.
” இப்படிச் செய்ததன் மூலமாக, மருத்துவமனைகள் மிகப் பெரிய களங்கத்தை கேரளாவுக்கு ஏற்படுத்திவிட்டன. இது மிகக் கொடூரமான செயல். எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க, சட்ட ரீதியாக, சில திருத்தங்களை அமல்படுத்துவோம்,” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உங்கள் நாட்டில் தான் மனிதாபிமானம் மரணித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டதே !! ஜாதி வெறி பிடித்த மிருகங்கள் வாழும் பூமி ! பணத்திற்கு எதையும் செய்யும் ஈன பிறவிகள் !! கற்பழிப்பு ! கொலை ! கொள்ளை ! விபச்சாரம் ! தில்லு முள்ளு !! உலகில் என்ன, என்ன அயோக்கித்தனம் இருக்கிறதோ ! அதையெல்லாம் உங்கள் நாட்டில் தான் கத்து கொள்ளவேண்டும் !!
விட்டுத் தள்ளுங்கள்! தமிழ் நாட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுப்போம்! ஒவ்வொரு விஜய் டிவி பாட்டுப் போட்டியிலும் முதல் பரிசை கொடுப்போம்! தமிழ் நாட்டில் உள்ளவனுக்கு யாருக்கும் பாடத் தெரியாது! நீதிபதிகள் ஆவது கூட தமிழனுக்கு தகுதி இல்லை!