பீஜிங், டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா–சீனா இடையே அடிக்கடி மோதலும், பதற்றமும் நீடித்தது. இப்போதும் டோக்லாம் பகுதியில் சீனா 500 வீரர்களை குவித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவிற்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது எனவும் எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சீன பகுதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில் சிக்கிமையும், சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தையும் இணைக்கும் ‘நாதுலா’ எல்லை பகுதிக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்து உள்ளது. எல்லைக்கு சென்ற நிர்மலா சீதாராமன் சீன வீரர்களுடன் கைகுலுக்கி வெகு இயல்பாக உரையாடினார். சீன வீரர்களுக்கு ‘நமஸ்தே’ (வணக்கம்) கூறி, அதற்கான அர்த்தத்தையும் விளக்கினார். இது தொடர்பான படங்களும், வீடியோ பதிவுகளும் இரு நாட்டு ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்த காட்சிகள் சீன நாட்டு ஊடகங்கள் அனைத்தும் நேர்மறையான கருத்துக்களை வெளியாகியது.
இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயார் என சீனா அறிவித்து உள்ளது.
நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து இந்திய–சீன எல்லை விவகாரத்தில் அமைதியை மேம்படுத்த விரும்புவதாக சீனா அறிவித்து உள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங், சீனா–இந்தியா எல்லையில் உள்ள சிக்கிம் பகுதி சீனா–இங்கிலாந்து இடையே 1890–ம் ஆண்டு போடப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் மூலம் பிரிக்கப்பட்டது. இந்த உண்மைக்கு மிகச்சிறந்த சாட்சியாக நாதுலா பகுதி விளங்குகிறது. இரு நாடுகள் இடையே ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருக்கும் எல்லை தொடர்பான ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் அடிப்படையில் எல்லை பகுதியில் இந்தியாவுடன் இணைந்து அமைதியை பராமரிக்க சீனா விரும்புகிறது என கூறிஉள்ளார்.
-dailythanthi.com
1. சீனா அறிவிப்பா அதுவும் இந்திய சீன எல்லையில் அமைதியைப் பராமரிக்கவா? இது சாத்தான் வேதம் ஒதுவதுப் போலுள்ளது. சீனத் தலைவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு தலை முடியைத் தவிர வேறெதுவும் நேராகயிருப்பதில்லை. இப்போது கொரியா தீபகற்பத்தில் வடக் கொரியாவால் ஏற்படுத்தப் பட்டுள்ள பிரச்னையால் அங்கே உலகப் போர் மூலம் அபாயம். இந்தப் பிரச்சனையில் இவர்களுக்கும் வடக்கு கொரியாவோடு நேரடிச் சம்பந்தமுண்டு. பிரச்சனையை சமாளிக்க வழித் தெரியாமல் தாங்கமுடியாமல் இப்போது இந்தியாவிடம் அமைதியை விரும்புபவர்கள் போல் நடிக்கின்றார்கள். எவ்வளவுக் காலம்தான் நடிப்பார்கள்!.