நடிப்பு, நடனம், காமெடி என அசத்திய பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா! புகைப்படம் உள்ளே

நடிகர் கமல்ஹாசன் குழந்தையாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பிந்து கோஷ். நடிப்பு, நடனம், காமெடி என அசத்தியவர். இப்படி ஒரு பெயரை சொன்னால் தான் பலருக்கும் தெரியும். இவரது உண்மையான பெயர் விமலா.

70,80 களில் ரஜினி, கமல், மோகன் என பல நடிகர்களின் படங்களில் நடித்ததோடு, மனோரமா, வி.கே.ராமசாமி, லூஸ் மோகன், வெண்ணிறாடை மூர்த்தி, குள்ள மணி என பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

நடிகை நளியின் அப்பாவிடம் நடனம் கற்றுக்கொண்டு பல படங்களில் குரூப் டேன்சராக பணியாற்றியுள்ளாராம். இவர் தற்போது உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் சிரமப்படுகிறாராம்.

இதனால் அவருக்கு விஷால் ரூ 5000 நிதியுதவி அளித்ததோடு, நடிகர் சங்கத்தின் சார்பாக அவருக்கு மாதாந்திர நிதியுதவிக்கும் ஏற்பாடு செய்துள்ளாராம்.

-cineulagam.com