சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரளா மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட வந்த ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,” இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன். போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும். போலீசாரும் தனது வலிமையைப் பயன்படுத்த கூடாது. இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வுகள் கிடைக்கும் என நம்பிக்கை கொள்கிறேன். திட்டங்களை அமல்படுத்தும் முன் மக்களிடம் பேச வேண்டும்.” என கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
–தினத்தந்தி